Monday, August 11, 2014

நெஞ்சு பொறுக்குதில்லையே ..........................! பாகம் 1




காத்து நின்ற உறவுகள்
இன்று கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்குது

பூத்து நீங்கள் பூமிக்கு வருகையில், உங்களை
தாலாட்டி, சீராட்டிய பெற்ற கரங்கள் இன்று 
கையேந்தி தான் நிற்குது
அடி எடுத்து நீங்கள் நிலத்தில் வைக்கையில்
நடை வண்டி வாங்கி வந்து மகிழ்ந்த
அவர்களின் கால்கள் இன்று தோய்ந்து
தான் துவளுது
அரிச்சுவடியும், அட்சரமும் பயில்வித்த
வாய்கள் இன்று மொழி பேச முடியாமல்
தான் ஊமையாய் முடங்கி கிடக்குது
பொன் வாங்கி போட்டு அழகு பார்த்தார்
உங்களின் மேனிக்கே, இன்று அவர்
மேனி அரை நிர்வாணமாய் காற்று,
மழையில் வெட, வெடக்குது
பூ சூடி தான், முழம், முழமாய், உங்கள்
கூந்தலுக்கே பெருமை பட்டார் உங்களின்
வயதிலே, இன்று அவர் கூந்தல் வரண்டு
எண்ணை காணாமல் பறக்குது காற்றிலே
யார் என்ன சொன்னாலும் தம் மக்களை
பற்றியே வாய் கிழிய சண்டை போட்டனர்
அவர்களே, இன்று வாய் ஓய்ந்து போய்
கிடக்கின்றார் வீதியிலே
நான்கோடு ஒன்று ஐந்தென மக்கள் நீங்கள்
பிறந்த போது, வருந்தாமல் கல் சுமந்து,
மண் சுமந்து, கூலி செய்தும் வளர்த்தனர்
தங்கள் கை, கால்கள் கெட்டியாக இருந்ததினாலே
இன்று முடங்கிய நிலையிலே, முதிர்ச்சி
தாக்கிய வயதிலே அந்த ஐந்தும் இந்த இரண்டை
பராமரிக்காமல் விட்டதையா நடு வீதியிலே
இரண்டால் முடிந்தது, ஐந்தால் ஏன் முடியவில்லை
இரண்டுக்கு பொன் போன்ற மனம் இருந்தது
இந்த ஐந்தும் கல் தானே தங்கள் மனமாய் கொண்டது
பெற்ற மனம் என்றும் பித்து தான், மக்கள் மனம்
அன்றும், இன்றும், என்றும் கல்லு தான்

No comments:

Post a Comment