Monday, June 16, 2014

பெரியவாளை பார்ப்பதற்கு நிபந்தனை விதித்த வைஷ்ணவர்:


அபாரமான சாஸ்த்ர புலமை பெற்ற ஒரு வீர சூர வைஷ்ணவர் இருந்த ஊருக்கு
பெரியவா சென்றிருந்தார். ஊரே திரண்டு வந்து பெரியவாளை தர்சனம்
பண்ணியபோதும் அந்த வைஷ்ணவர் பெரியவா இருந்த திசைப்பக்கம் கூட வரவில்லை.

அவரைப் பொறுத்தவரை "சித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் சைவக்
கோலத்தையும் கொண்ட ஏகதண்ட சன்யாசியை பார்ப்பதே தோஷம்". பெரியவாளின்
கருணை, சர்வஞ்யத்வம், பாண்டித்யம் பற்றி அத்தனை பேருமே ஏகோபித்த
சந்தோஷமும், பாராட்டுமே கொண்டதை அந்த வைஷ்ணவர் கண்டார்.

"கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்ற வசனப்படி, அந்த வைஷ்ணவரை அழைத்து
வரச்சொல்லி மடத்திலிருந்து ஒரு வித்வானை முறைப்படி அனுப்பினார் பெரியவா.
"வர மாட்டேன்" என்று சொல்ல முடியாமல் பெரியவாளுடைய அன்பான அழைப்பு
தடுத்தது.

"கூப்ட்டு அனுப்பிச்சிருக்கார்.....மாட்டேன்னு சொல்லப்டாதுதான்! ஆனா,
நேக்குன்னு செல ப்ரதிக்ஞை இருக்கு. அதை மீறரதுக்கில்லே; அது
ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் சம்மதப்படாம இருக்கலாம்....அதான்
யோஜனையா இருக்கு"....

"என்ன ப்ரதிக்ஞை..ன்னு சொன்னேள்..னா பெரியவாட்ட சொல்றோம்"

"மொதல்ல, பெரியவாளை பாத்தா, நான் நமஸ்காரம் பண்ணமாட்டேன்;
ரெண்டாவது, அவா எதாவுது ப்ரஸாதம் குடுத்தா அதை ஏத்துக்க மாட்டேன்;
மூணாவுது வித்வத் சம்பாவனை ன்னு சொல்லிட்டு, எதாவுது சால்வை அது இதுன்னு
பண்ணினா, அதை அங்கீகரிச்சுக்க மாட்டேன்"

"சரிதான்! இவரை எதுக்கு மரியாதை பண்ணி அழைச்சிண்டு போகணும்?" என்று அந்த
நல்ல வித்வானுக்குக் கூட மனஸில் தோன்றியது. பெரியவாளிடம் சென்று,
"ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படலை; அவர் ரொம்ப நிர்தாக்ஷிண்யமா கண்டிஷன் போடறார்
பெரியவா" என்றார்.

"அப்டியா! ரொம்ப ஸ்வாரஸ்யமான்னா இருக்கு! 

நல்ல சேதின்னா கொண்டு
வந்திருக்கே!" வித்வானுக்கு புரியவில்லை.
"கண்டிஷன் போடறார்..ன்னு சொன்னதுலேர்ந்தே அவர் முடிஞ்ச முடிவா "வர
மாட்டேன்"ன்னு சொல்லலியோன்னோ? கண்டிஷனுக்கு ஒத்துண்டா, வரேங்கறார். அந்த
மட்டுல நல்ல சேதிதானே?"

வித்வான் ரொம்ப நொந்த உள்ளத்தோடு அவர் போட்ட கண்டிஷன்களை சொன்னார்.
"அவ்ளோவ்தானே! அவர் இஷ்டப்ரஹாரம் இருந்துட்டுப் போகட்டுமே! அவருக்கு
முடியாதப்போ, கண்டிஷன் போட்டதுல என்ன தப்பு? அவர் பெரிய வித்வத்
ஸ்ரேஷ்டர்! புதுஸ்ஸா அவர்ட்ட ஏதோ கொஞ்சம் க்ரஹிச்சுக்க பாக்கலாம்னு
இருந்தா, அவரோட கண்டிஷனை நா ஏத்துக்கத்தானே வேணும்?"

அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் இருக்கும் பரம்பொருள் அந்த
வைஷ்ணவரிடம் ஏதாவது க்ரஹிச்சுக்க முடியுமா? என்று பார்க்கிறதாம்! அந்த
வைஷ்ணவர் மரியாதையோடு அழைத்து வரப்பட்டார். பெரியவா அழகான
சம்ஸ்க்ருதத்தில், ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷையில் அவரை வரவேற்று
ஆசனம் குடுத்தார். 

அதுவே அந்த வைஷ்ணவரின் கடின சித்தத்தில் கொஞ்சம்
நெகிழ்ச்சியை உண்டுபண்ணியது. 

ஆனாலும், பெரியவாளை நமஸ்கரிக்கவில்லை.

"ப்ரஹ்ம சூத்ரத்துக்கு" ஸ்ரீராமானுஜர் பண்ணிய பாஷ்யம் பற்றி பெரியவா
அவரிடம் கேட்டார்.......போகப் போக, அந்த வைஷ்ணவர் கேட்க பெரியவாளே [ஸ்ரீ
ராமானுஜாச்சார்யாரே] சொல்லுவதாக மாறியது! பெரியவா அவரை மிகவும்
ஊக்கப்படுத்தினார்.ஒரு அறிவுக்கடலிடம் பேசுகிறோம் என்று உணர்ந்த
வைஷ்ணவரும் தனக்குள் இருந்த பொக்கிஷத்தை கொட்டித் தீர்த்தார்!

சம்பாஷணை நெடுநேரம் நடந்து இனிமையாக நிறைவு பெற்றது. அவருடைய
ப்ரதிக்ஞைக்கு ஹானி வராமல் அவருக்கு நன்றி தெரிவித்து விடை குடுத்தார்
பெரியவா. வைஷ்ணவரோ பெரியவாளிடம் தம்மை
"தாஸன்" என்று சொல்லுமளவுக்கு மனஸில் பதமாகியிருந்தார்.

"பெரியவாளுக்கு தெரியாத சாஸ்த்ர ஞானம் தாஸனுக்கில்லே; ஆனா
தாஸனுக்கில்லாத, தெரியாத கருணை பெரியவாளுக்கு இருந்துதான் கூப்ட்டு
அனுப்பி அநுக்ரஹிச்சுருக்கா..." என்று சொல்லி விட்டு, எல்லாரும்
ஆச்சர்யப்படும்படி தண்டனிட்டு நமஸ்கரிக்க முற்பட்டார்!

"வேணாம்....ப்ரதிக்ஞா பங்கமாயிடும்" என்று தடுத்தார்.

"ப்ரதிக்ஞை..ல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டுதானே! சன்னிதானத்துல அதுக்கு
ப்ரஸக்தியில்லே [பொருட்படுத்தவில்லை]!" என்று பெரியவாளை பகவான் என்று
ஒத்துக்கொண்டு நமஸ்காரம் பண்ணி தீர்த்தார்!

"நாராயண!நாராயண!" பரமபதநாதன் அதை ஏற்றுக்கொண்டார். 
முதல் ப்ரதிக்ஞை விடப்பட்டது.

"மந்த்ராக்ஷதை அநுக்ரஹிக்கணும்" 

தாமாகவே கேட்டு பெற்ற பொது, இரண்டாவது
ப்ரதிக்ஞை விடப்பட்டது.

"என்னோட ஆசைக்காக மூணாவது ப்ரதிக்ஞையை விடணும்னு தோணித்துன்னா, நேக்கும்
"ஒரு மஹா வித்வான் மடத்துக்கு வந்து அவருக்கு சம்பாவனை பண்ணலே"..ங்கற
கொறை இல்லாம இருக்கும்" என்று சௌலப்யமூர்த்தி சொன்னதும்,

"பெரியவா எது பண்ணினாலும் பாக்யமா ஏத்துக்கறேன்" என்று அஹம் குழைந்து
கூற, உயர்ந்த சால்வை ஒன்றை மடத்து வித்வானைக் கொண்டு அவருக்கு போர்த்தி
கௌரவித்தார்

No comments:

Post a Comment