தென்புலத்தார், தெய்வம் என்று குறள் சொல்வதில் இரண்டாவதான தேவ காரியத்துக்கு வருகிறேன்.
ஒவ்வொரு
குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும். சௌ கரியப்பட்டவர்கள்
விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில்
சுருக்கமாக செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும்.ஆபீஸுக்குப்
போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்ற ஒன்றை செய்ய வேண்டும்.
எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.
ஈசுவரன்,
அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி
வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதான பூஜை என்று பெயர்.
அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே
கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது சம்பிரதாயம்.
இவற்றில்
ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில்
கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில்
ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஒடிய கல். விஷ்ணுவின்
வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது.
சூரியனுக்கிறிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில்
கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா
(ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஒரிடத்தில்
வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.
இந்த
ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில்
அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம்
சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான்
அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன
சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹணம் பண்ணி, சந்தனம், குங்குமம்
அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.
வெளியூருக்குப்
போதும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை.
வெளியூரில் அர்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம்.
வில்வதிதையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால்
ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம். மற்றவர்களுக்கு
அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம்
வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திரா¬க்ஷப்
பழத்தைக் கையோடு
வைத்திருந்து நிவேதித்து விடலாம்.
ஐந்து மூர்த்திகள், துளஸி - வில்வ பத்திரங்கள், திரா¬க்ஷ, அக்ஷதை இந்த
எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு
விடலாம்.
இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது பஞ்சாயதன பூஜை எனப்படும். பிராசீனமாக
நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவதி பாதாள் புது
ஜீவனோடு பிரகாசிக்கும் படியாகச் செய்தார். ஷண்மத ஸ்தாபனம் என்று வருகிறபோது
இவற்றோடு சுப்பிரமணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன
ஐந்தோடு நாமும் ஒரு வேளை வைத்து வேலாயுதனை பூஜிக்கலாம்.
பூஜை
என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு
சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு
சொன்னேன்.
வீட்டிலே
இருந்தால் மகா நைவேத்தியம் எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட
வேண்டியது அவசியம். நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன்
நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே
உம்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார்.
எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே
உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக்
கொடுத்து விடுகின்றோம். வெறுமே அவரிடம் காட்டுகிறோம். பிறகு நாம்தான்
புசிக்கிறோம்.
நைவேத்தியம்
செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக்
கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடவிடுவது என்று
அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவினை
சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது
ஒன்றுமில்லை. நிவேதயாமி என்றால் அரிவிக்கிறேன் என்று அர்த்தமே தவிர,
உண்பிக்கிறேன் என்று அர்த்தமில்லை. அப்பனே, இந்த வேளைக்கு உந் கருணையில்
இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய் என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு
அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி
எப்படி விளையும். ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய
புஸ்தகங்கள் எழுதலாம். ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா.
செய்ற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு
மூலமாக கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக
வேண்டும். எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன்
சிருஷ்டித்ததுதான். பரமேஷ்வரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே
நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.
எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில்
வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும்
அவனுக்கு நிச்சமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு
வேண்டவே வேண்டாம்.
அவனைப்
பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால்
கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும்.
இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர
வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும்.
நல்லவர்களாவோம்.
பரோபகாரம்
பிதிர்கடன்,
பரமேசுவர பூஜையான வேத யக்யம் எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு படைப்பது
ஆகியவற்றை வைதிக மதம் விதிக்கிறது. திருவள்ளுவரும் இதே தர்மத்தைத்தான்
விதித்திருக்கிறார்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
வள்ளுவர்
வேதப் பிராமணத்தை மதித்தே குரள் எழுதினார் மிகவும் ஆதரவாக இருக்கப்பட்ட
குரள்களில் இதுவும் ஒன்று. திருவள்ளுவர் வைதிக மதஸ்தரே அல்ல. அவர் ஜைனர்
அல்லது பெனத்தர் அல்லது எல்லா மதங்களையும் கடந்தவர். வேதம் கூறும்
தர்மங்களுள் ஹிமைஸையுள்ள யாகத்தைத் திருவள்ளுவர் வெளிப்படையாகவே
கண்டிக்கிறார் என்று சிலருக்கு அபிப்பிராயம். கீழ்கண்ட குரளை மேற்கோள்
காட்டுகிறார்கள்.
அவிசெரித்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
ஹவிஸை
அக்னியில் ஆஹ§தி செய்து ஆயிரம் யாகம் செய்வதைவிட, ஒரு பிராணியையும்
வதைத்து உண்ணாமலிருப்பது சிரேஷ்டம் என்று இதன் அர்த்தம். இதைப் படித்த
பின்னும்கூட என் அபிப்பிராயமோ திருவள்ளுவர் வைதிக அநுஷ்டானங்கள்
அனைத்திலும் பூரண நம்பிக்கை கொண்டவர் என்பதே. காவிரியின் பெருமையைச் சொல்ல
வந்த ஒருவர். ஆயிரம் கங்கையைவிட ஒரு காவிரி உயர்ந்தது என்று சொன்னால்
கங்கையும் உயர்ந்தது என்று சொல்னால், கங்கையும் உயர்ந்ததும் என்றே
அர்த்தமாகும். காவிரியைச் சிலாகித்துப் பேச விரும்புகிற ஒருவர், ஆயிரம்
சாக்கடையைவிட ஒரு காவிரி உயர்ந்தது என்று சொல்வாரா. அப்படியே திருவள்ளுவர்
அஹிம்ஸையைச் சிலாகித்துப் பேசும்போது, ஆயிரம் யாகத்தைவிட அஹிம்ஸை உயர்ந்தது
என்றால் யாகமும் உயர்ந்தது என்றே அர்த்தமாகும். ரொம்ப உயர்ந்த ஒன்றைச்
சொல்லி அதைவிட இது ரொம்ப ரொம்ப உசத்தி என்றுதானே சொல்வது வழக்கம்.
இந்தக் குறள் இல்லர இயலில் சொல்லப்படவில்லை. துறவறஇயலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. துறவிக்கு யாகத்தில் அதிகாரம் இல்லை.
அவனுக்கு மட்டுமே வைதிக மதம் பூரண அஹிம்ஸையை விதித்திருக்கிறது. அதையே
வள்ளுவரும் வலியுறுத்துகிறார்.
உலகத்துக்கெல்லாம் உபயேகமான ஒரு கிரந்தத்தை தந்திருக்கும் திருவள்ளுவர்
வைதிகத்தை ஆட்சேபிக்கும் நாஸ்திகர் இல்லை. திருவள்ளுவர் விருந்து என்று
சொல்கிற விருந்தோம்பல் வைதிக மதத்தில் மனுஷ யக்யம் எனப்படும் விருந்தோம்பல்
என்பதே. இன்நும் குஞ்சம் விரித்தால் அன்னதானம் எனக் கொள்ளலாம்.
ஒவ்வொரு
குடும்பத்திலும் சமைப்பதற்காகப் பானையில் அரிசி போடும்போது பகவானை
நினைத்துக் கொண்டு, ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில்
போட்டுவிட வேண்டும். இப்படிப் பல குடும்பங்களில் தினமும் போட்டு வைப்பதைப்
பேட்டைக்குப் பேட்டை சேகரித்து, சமைத்து ஆங்காங்குள்ள ஆலயத்தில் நிவேதனம்
செய்து, ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். ஒருபிடி அரிசியோடு ஒரு பைசாவும்
தினந்தோறும் போட வேண்டும். சேகரித்த அரிசியைச் சமைப்பதற்காக விறகுக்கு,
சாதத்தில் சேர்த்துக் கொள்ள மிளகுப் பொடியோ அல்லது வேறு ஏதாகிலும்
வியஞ்சனமோ தயாரிப்பதற்கு, சமையல் பாத்திர வாயகைக்கு இப்படி மேல்
செலவுகளுக்குத்தான் அந்த ஒரு பைசா. இந்த திட்டத்தை நடத்திக் காட்டுவது
பெரிய பரோபகாரம். பசித்து வந்த ஏழைகளுக்கு ஈஸ்வரனின் கோயிலில் இப்படி
பிரசாதம் கிடைக்கிறது என்றால் வயிறும் மனசும் குளிரும். இதனாலாவது
கோயிலுக்கு வருகிற வழக்கம் ஏற்பட்டு பக்தியும் வளரும். வெறுமே சாப்பாடு
என்றில்லாமல், ஈசுவரனுக்கு நிவேதனமாக பிரசாதம் என்று இருப்பால் அந்த அன்னம்
சித்தசுத்தியும் அளிக்கும்.
அன்னதானம்
பரோபகாரத்தில் ஒர் அம்சமே. பரோபகாரம், சமூகசேவை, ஸோஷல் சர்வீஸ் என்று இந்த
நாட்களில் ஆர்ப்பாட்டமாக பிரகடனம் பண்ணுவதை, முற்காலங்களில் எந்தப்
பகட்டுமில்லாமல் சுபாவமாக்கவே பொதுமக்கள் செய்து வந்தனர். இதற்குப் பூர்த்த
தர்மம் என்று ஒரு பெயர் இருக்கிறது. ஜனங்களுக்காகக் கிணறு, குளம்
வெட்டுவது, அன்ன தானம், அவர்களின் ஆத்ம க்ஷேமத்துக்காகக் கோவில் கட்டுவது.
அதன் அமைப்பாக நந்தவனம் அமைப்பது எல்லாம் பூர்த்த தர்மத்தில் சேர்ந்தவை.
இதில் கிணறு, குளம் வெட்டுவது முதலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் பேச்சு
வழக்கில்கூட, அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான். வெட்டிக் கொண்டு
இருக்கிறானா என்கிறோம். வெட்டுவது அவ்வளவு பெரிய தர்மம். தாகமெடுத்த
பசுக்களும் மற்ற பிராணிகளும் நீர் அருந்துவதற்காகத் கிராமத்துக்கு வெளியே
மேய்ச்சல் பூமியில் ஒரு குளம் வெட்டினால் எவ்வளவோ புண்ணியம். ஒரு
கிராமத்தில் அல்லது பேட்டையில் இருக்கிற சகலரும் - பணக்காரர், ஏழை என்கிற
வித்தியாசமில்லாமல் ஒன்று சேர்ந்து மண்வெட்டியை கையில் எடுத்துக் கொண்டு
இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவையில்ஈடுபட
வேண்டும். இதனால் சமூக ஒற்றுமையும் அதிகமாகும். புத்தியை சுத்தப்படுத்திக்
கொள்வதற்காக கல்வி, மனசு சுத்தமாக தியானம்ஸ வாக்கு சுத்தமாக சுலோகம்
இப்படியெல்லாம் இருக்கின்றன அல்லவா. சரீரம் சுத்தமாவதற்கு அந்த சரீரத்தால்
சேவை செய்ய வேண்டும். உழைக்க உழைக்க சித்த சுத்தியும் வரும். உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்றில்லாமல் எல்லோருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும்போது
அகங்காரத்தையும் வெட்டி எடுத்ததாகும். குளத்தில் தண்ணீர் ஊற்றுவதைவிட நம்
இருதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம். வெளிவேஷம், டெமான்ஸ்ட்ரேஷனே வேண்டாம்.
அவரவரும் பிறருக்குத் தெரியாமல் ஏதாவது ஒற்றையடிப் பாதைக்குப் போய்
அங்கேயிருக்கிற கண்ணாடித் துண்டிகளை அப்புறப்படுதிதனால்கூடப் போதும் -
அதுவே பரோபகாரம். சித்த சுத்தி என்கிற ஆத்ம லாபமும் ஆகும்.
பகவத் ஸ்வரூபமாக எல்லோரையும் நினைத்து, நமக்குக் கர சரணாகதிகள்க் கொண்டு பரோபகாரம் செய்வோம்.
சேவையே மேலான பாக்கியம்
மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலாக பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.
சேவை என்று தெரியாமலே அவரவரும் குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு
நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ
தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்யவேண்டும் என்கிறேன். நமக்கு
எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்திரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை,
வீட்டுக் கவலை இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டங்களுக்கு நடுவில்,
சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதனாலேயே
சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட அசலார் குழந்தைக்குப்
பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும் என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின்
பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான்.
ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத்
தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால்
போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்கே
ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில்
மேலும் மேலும் செல்வோம்.
மனிதர்களுக்கு
மட்டுமின்றி, மாடு போன்ற ஜீவன்களுக்கும் சேவை செய்ய வேண்டும். பழைய நாளில்
கால்நடைகளுக்காக என்றே குளம் வெட்டுவது. அவை தினைவு தீர்த்துக்
கொள்வதற்காக உராந்ந்து கொள்வதற்கு அங்கங்கே கல் போடுவது என்று வைத்துக்
கொண்டிருக்கிறார்கள். தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி
புல்லோ, அகத்திக் கீரையோ கொடுக்க வேண்டும். மாட்டுக் ஒரு பிடிபுல் கொடுப்பதை "கோ க்ராஸம் என்றால் ஒரு வாயளவு (Mouthful) இங்கிலீஷில் புல்லை grass என்பதுகூட இதிலிருந்தே வந்திருக்கலாம்.
யாகம்,
யக்ஞம், தர்ப்பணம், திவஸம் முதலிய இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு
மட்டுமின்றி, மற்ற உலகங்களிலிருப்பவர்களுக்கும் நம் சேவையை விஸ்தரிக்கின்றன
என்ற உணர்வோடு அவற்றைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மந்திரத்தோடு
சேர்த்துச் செய்யப்படும் சேவை.
நம்மைப்
போலவே செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லோரும்
ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம்.
அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பண் செய்ய முடியும்.
சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கடங்கள் உடையாமல் காக்க
வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம்.
மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.
பொழுதுபோக்கு
என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கிற காட்சிசாலைகளிலும்
பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதை பிறருக்குச் சேவை செய்வதில்
செலவழிக்க வேண்டும்.
வாழ்க்கைத்
தொல்லைகளிலேயே கொஞ்சம் உல்லாசமாகப் போக்குவது ஒரு தப்பா என்று
கேட்பீர்கள். உங்களுக்குச் சொல்கிறேன். பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே
பெரிய உல்லாசம் என்று தெரியும். அதுவே விளையாட்டு. அதுவே இன்பம்.
கிருஷ்ண
பரமாத்மா இப்படித்தான் வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும், உள்ளே
அத்தனையும் பரோபகார சேவைதான் செய்தான். எத்தனை பேருடைய, எத்தநை எத்தநை
கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான். குன்றைத் தூக்கிப் பிடித்தது
விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால் கோபர்களைக் காப்தற்கே அவ்வளவு பெரிய
மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். சின்னக் குழந்தை விஷம் கக்கும் காளிங்கனின்
படத்திலே நர்த்தனம் செய்தது வெளியிலே பார்த்தால் விளையாட்டு. உண்மையில்
அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காக
செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ சேவைகள் செய்தான். இப்படித்தான்
எத்தனையோ விளையாட்டுகள் செய்தான். அத்தனையும் சேவை. எவனைப்போல்
விளையாடினவன் இல்லையோ அவனைப்போல் சேவை செய்தவனும்மில்லை என்று கிருஷ்ண
பரமாத்மாவின் உதாரணத்தில் பார்க்கிறோம். லெனகிக சேவை மட்டுமில்லை. ஞான
சேவையும் நிறைய செய்தான். அர்ஜுனன், உத்தவர் போன்றவர்களுக்கு மகா
உபதேசங்கள் செய்தான். சேவை, ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக
இருந்தன. துளிக்கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான். அதனாலேயே
அநாயசமாகச் செய்ய முடிந்தது. நம்மிலும் சேவை செய்கிறவர்களுகெல்லாம் இந்தச்
சிரிப்பும் சாந்தமும் எப்போதும் இருக்க வேண்டும். தைரியம், ஊக்கம்
இவற்றோடு.பகவான் எடுத்த பல அவதாரங்களில் கிருஷ்ணவதாரத்திலிதான்சேவை அதிகம். ராமாவதாரத்தில் சேவைக்கென்றே ஆஞ்சநேயஸ்வாமி வந்தார். இவர்கள்
இருவரையும் ஸ்மரித்து நாமும் சுத்தமான உள்ளத்துடன், எந்த சுய நலமும்
கருதாமல் எவ்வித விளம்பரத்துக்கும் ஆசைப்படாமல் சேவை செய்ய வேண்டும்.
நமக்குத் தீட்டு ஏற்பட்டால் அச்சமயத்தில் உலகோடு சேர முடியாமல்
ஒதுங்கியிருக்கிறோமல்லவா. அவ்விதமே உலகுக்கு உபயோகமாக சேவை செய்யாத ஒவ்வொரு
நாளும் நமக்கு தீட்டுநாள் என்று கருதி, அவரவரும் தம்மாலான சேவையில்
ஈடுபடவேண்டும்.
ஜீவராசிகளுக்கு
செய்கிற உபகாரத்தால் சகல பிராணிகளுக்கும் மாதா பிதாவாக இருக்கப்பட்ட
பரமேஷ்வரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர்
திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறது.
நடமாடக் கோயில் நம்பர்க் கொன் றீயின்
படமாடக் கோயில்பகவற்கீ தாமே.
இதற்கு அர்த்தம், மக்களுக்குச் செய்கிற உதவி சாட்சாத் ஈசுவர ப்ரீதியாகச் செய்கிற பூஜையே ஆகும் என்பது.
No comments:
Post a Comment