Thursday, June 12, 2014

கடி ஜோக்ஸ் 89








கணவன், மனைவி நகைசுவை சிரிக்க மட்டும்:-
மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "
மனைவி: ???
கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி: கட்டிக்க போறது நான்தானே
கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்
மனைவி:???
மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை
எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"
கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும்
பார்த்துக்கலாம்.."
மனைவி:????
கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும்
புகார் சொல்றாங்க?
மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
கணவன்:????
ஒருவன்: "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா
பைத்தியமே பிடிச்சிடும்..."
மேனேஜர் :"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
ஒருவன் : "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"
ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..
கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
ஜோதிடர்: ????
..................................................................

தினம் ஒரு கடி ஜோக்:- 56
பெண் : சார் என்னை காப்பாத்துங்க, ரெண்டு பேர் சேர்ந்து என்னை முல்லைப்பெரியார் அணையா மாத்த பாக்குறாங்க.!
போலீஸ் : என்னம்மா சொல்றே. ?
பெண் : அந்த ரெண்டு பேரும் என்னை இடிக்க பாக்குறாங்க சார்!
போலீஸ் : ?????????

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பயஸ் : ஆமா நேற்றைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போனீங்களே என்ன ஆச்சு..?
பெல்டாஸ் : கூடங்குளம் மாதிரி இழுத்துக்கிட்டு கிடக்கு..!
பயஸ் : என்ன சொல்றே நண்பா.?
பெல்டாஸ் : அதான் , கொஞ்சம் பேர் வேணும்ங்கிறாங்க, கொஞ்சம் பேரு வேணாம்கிறாங்க....!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சையது : என் நண்பன் ஒருத்தன்:- 70
கிலோ வெயிட் இருந்தான் ஆனா ஒரே நாள்ல 5 கிலோ வெயிட் குறைஞ்சு 65 கிலோ ஆகிட்டான்..!
ஷாம் : ஏன் சுகமில்லாமல் படுத்திருந்தாரா..?
சையது : இல்ல .. ரொம்ப நாளைக்கு அப்புறம் அன்னைக்குத்தான் குளிச்சானாம்..
ஷாம் : ???????????
 




,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஒருவர் : என் பொண்டாட்டி ரொம்ப சின்ன விஷயத்துக்கெல்லாம் கூட ரொம்ப முன் ஜாக்கிரதையா இருப்பா.!

மற்றவர் : அப்படியா ? அப்படி என்ன விஷயத்துல முன் ஜாக்கிரதையா நடந்துக்கிட்டாங்க..?

ஒருவர் : வெளி பாத ரூம்ல குளிக்கறப்ப கூட யாராச்சும் எட்டிப்பாக்குறங்களான­்னு தெரிஞ்சுக்குறதுக்காக­ பாத்ரூம் கதவை திறந்து வெச்சிட்டு தான் குளிப்பான்னா பாத்துக்குங்களேன்...!)



,,,,,,,,,,,,,,,,,,



ஒருவர் : கூட்டம் முடிஞ்சதும் எல்லோரும் சேர்ந்து எதுக்காக தலைவரை இந்த திட்டு திட்டுறாங்க....?

மற்றவர் : கூட்டம் முடிஞ்சு " ஜண கண மண" பாடினப்போ, இந்த ஓல்டு ஹிந்தி பாட்டு வேணாம். புதுசா வந்திருக்குற "நெஞ்சுக்குள்ளே" பாட்டு பாடுங்கன்னு சொன்னாராம்.....!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 ஃபேஸ்புக்ல ரொம்ப ஆக்டிவா இருந்தீங்க . இப்ப ரொம்ப நாளா ஆளையே காணோம்.....?

ஒருத்தன் " தினம் ஒரு கடி ஜோக்" என்கிற பெயர்ல கழுத்தை அறுத்துக்கிட்டு இருந்தான். தாங்க முடியாம தான் கொஞ்ச நாள் காணாம போயிட்டேன்..!

: அது சரி , ஆனா உங்க லைக், கமென்ட்ஸ் தானே அதிகமா இருந்துச்சு!

ஹிஹிஹிஹி.. "இன்னா செய்தாரை ஒறுத்தல் , அவர் நாண நன்னயம் செய்து விடல்" அல்லவா....!

: ? ? ? ? ? ? ? ? ?

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 (பக்கத்தில் நல்லா தூங்கிட்டிருந்தவரை தட்டி எழுப்பி ). ஏன் அண்ணாச்சி பஸ்ல ஏறி சீட்ல உக்காந்த உடனேயே தூங்க ஆரம்பிச்சுட்டீங்களே,...­ அட் லீஸ்ட் டிக்கெட் வாங்குற வரைக்குமாவது தூங்காம இருக்கலாமே.?

தம்பி , டிக்கெட் வாங்குறதா இருந்தா நான் ஏன் இப்படி சிரமப்பட்டு தூங்கணும்..!

? ? ? ? ? ? ? ? ?)




..............
எங்க அம்மா புடவையை நீ ஏன் எரிச்சே..?
 மாமி தான் புடவையை கட்டிப்பாத்துட்டு பத்தலையின்னு சொன்னாங்க..!!
????????
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


 என்னோட நண்பர் ஒருத்தர் யார் டைம் கேட்டாலும் கூட 5 நிமிஷம் 10 நிமிஷம் குறைச்சு தான் சொல்வார்.
 ஏன் காலத்தை சேவ் பண்றாரா..
இல்லைங்க . அவர் சரியான கஞ்சப்பேர்வழி அதான்.
 ?????

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


 என் ஃப்ரெண்டோட அப்பா மிக பிரபலமான எழுத்தாளர்..!
அப்படியா நாவல் எழுதுறவரா.. நாடகம் எழுதுறவரா.?
ஷாஜஹான் : இரண்டும் இல்ல. "ஆதாரம்" (uyil) எழுதுறவர்.
ஹமீத் : ??????)
 —






,,,,,,,,,,,,,,,,,,
சையது : ஒருத்தர் லேட்டா ஆபீசுக்கு வர்றார், அவரை பார்த்ததும் எல்லாருமே பயப்படறாங்க, ஏன்னு சொல்லுங்க...!
ஷாம் : ஏன் , அவர்தான் மேனேஜரா?
சையது : இல்லைங்க, "லேட்" ஆகிப்போன ஒருத்தர் ஆபீசுக்கு வந்தா அவரை பார்த்து மற்றவங்க பேய் பிசாசுன்னு நெனச்சு பயப்படத்தானே செய்வாங்க!?

............................

நம்ம நடிகை ரீமா சென்னுக்கு இப்போ என்ன வயசிருக்கும்....?
 பார்த்தாலே தெரியலையா. 35 ல இருந்து 40 வயசு இருக்கும்..!
இல்ல 28 ல இருந்து 30 வயசு இருக்கும்!
எதை வச்சு இப்படி அடிச்சு சொல்றீங்க?
அவங்களே ஒத்துக்கிட்டு இருக்காங்களே... "மே மாசம் 98ல் மேஜர் ஆனேன்னு..!"

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இந்த மதிய நேரத்துல கொளுத்துற வெயில்ல இப்படி நடை பயிற்சி பண்றீங்களே ஏன்..?
டாக்டர் சொன்னாரு தினமும் உடம்பு வியர்க்குற அளவுக்கு நடக்கணும்னு. இந்த ந் நேரம் நடந்தோம்ன்னா 5 நிமிஷத்துல உடல்
வேர்த்துடும். அதான் !)
...........................................................................



.
நிருபர் : உங்க புது படத்தின் விளம்பரங்களை எல்லாம் கொட்டைஎழுத்துல " குடும்ப படம்" னு போட்டுக்கிட்டு கூடவே சின்ன எழுத்துல 'குளியல் அறை காட்சிகள் நிறைந்தது'ன்னு போட்டிருக்கீங்களே ..ஏன்..?

இயக்குனர் : ஏன் உங்க குடும்பத்துல யாருமே குளிக்கிறதில்லையா..?




நிருபர் : ..? ? ? ? ? ? ? ? ?)
 



,,,,,,,,,,,..............

உங்க வீட்ல செத்துப்போன பூனையைஅ தூக்கி பப்ளிக் ரோட்ல வீசுறாங்களே இதுவே சிங்கப்பூர் துபாய்லன்னா நடக்குமா..?
பென்சிகர் : சிங்கப்பூர் துபாய் மட்டுமில்ல உலகத்துல எந்த மூலைலயுமே செத்துப்போன பூனை நடக்காது!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 பொண்ணுக்கு உடல்ல ஒரு குறை இருக்குறதை மறைச்சு கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டீங்களே. இது நியாயமா ?
நான்தான் உங்ககிட்ட அப்பவே சொன்னேனே கல்யாணத்துல பொண்ணுக்கு எந்த 'குறையும் தெரியாம பாத்துக்குவாங்க'ன்னு...!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எங்க சித்தப்பாவும் முல்லைப்பெரியார் அணையும் ஒண்ணுதான்!
 எதை வெச்சு அப்படி சொல்றீங்க...?


 இரண்டுமே தண்ணியை குறைக்கணும்னு தான் நினைக்குது ஆனா நடக்க மாட்டேங்குது....!)



,,,,,,,,,,,
 ஏன்யா ஆஃபீஸ்க்கு வந்ததும் வராததுமா முதல் வேலையா ஃபேஸ்புக்கை ஓபன் பண்ணிட்டு உக்காந்திருக்கியே. உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா....?

நீங்கதானே ஸார் மறந்துடாம LOG IN &LOG OUT, பண்ணுங்க தேங்க்ஸ்ன்னு நோட்டீஸ் போட்டிருக்கீங்க....!

: அது அட்டெண்டன்ஸ் யா.. உன்னோட ENTRY & EXIT...!


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆசிரியர்:- நான் இன்னைக்கு முக்காலங்கள் பற்றி சில கேள்விகள் கேட்க போறேன். "மனைவி கணவனை கண் கண்ட தெய்வம் போல் வழிபடுகிறார்."இது எந்த காலம்..?

மாணவன்:- திருமணமான ஆரம்ப காலமா இருக்கும் சார். போகப்போக பாருங்க அந்த ஆளோட கஷ்ட காலம்...!




ஆசிரியர் : ?????????????




,,,,,,,,,,,,,,,,,,

: துபாய்க்கு போகும் போது தலை நிறைய முடியோட போன தன் கணவன் திரும்பி வரும் போது வழுக்கை தலையோட வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி ஒரு கடிதம் எழுதி வெச்சிட்டு தற்கொலை பண்ணினாங்க. அந்த கடிதத்துல என்ன எழுதி இருந்தது தெரியுமா..?

 உங்களோட என்னால வாழ 'முடி'யாதுன்னு எழுதி இருந்தாங்களா..?

"உன் தலை முடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே"....!




 ? ? ? ? ? ? ? ?




,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.


பழைய காலத்தில் வாழ்ந்திருந்த ஒரு மிருகத்தோட பேர் சொல்லு!

 ம்ம் . டைனோசரா..?

 டைனோசரும் இல்ல அப்துல் நாசரும் இல்ல. " வரிக்குதிரை"!

 என்னது வரிக்குதிரையா .எப்படி..?

அதுதான் முழுக்க முழுக்க "ப்ளாக் அண்ட் ஒயிட்" ( கருப்பு வெள்ளை) ஆச்சே...!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



தளபதி : மன்னா , எதிரி நாட்டு மன்னன் பெரும் படையுடன் நமது நாடு நோக்கி வந்து கொண்டிருக்கிறான்!

அரசர் : அப்படியா..! உடனே நம் அரண்மனை வைத்தியரிடம் சொல்லி
படைக்கான களிம்பு தயாரிக்க சொல்லுங்கள் தளபதியாரே.!

......................................................................

ஒருவர் : ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சப்புறம் தான் தெரிஞ்சது கையில காசில்லைன்னு..!

மற்றவர் : அப்புறம் மாவாட்டினீங்களா...?

ஒருவர் : கையில இல்லைன்னா என்னங்க, பையில இருந்தது, எடுத்து
கொடுத்தேன்!




...........................

 ஒரு விலங்கு மார்கெட்ல ஒரு யானையையும் எறும்பையும் ஏலத்திற்கு விட்டாங்க. எறும்பு தான் அதிக விலைக்கு ஏலம் போச்சு, ஏன் தெரியுமா..?

மிச்சத்தையும் நீங்களே சொல்லுங்க...!

அந்த எறும்பு ரஞ்சிதாகூட "கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு " பாட்டுல நடிச்சதாம்..!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 மரத்திலேயும் சுவத்திலேயும் அடிக்க முடியாத ஆணி எது சொல்லுங்க..!

அப்படி ஒரு ஆணியா.அது என்ன ஆணி..?

"அண்ணிய செலவாணி"

 ஆணியே புடுங்க வேணாம்...!
.......................................................................

 எல்லா ஹோட்டல்களிலும் "அடுக்களைக்குள் அன்னியர்களுக்கு அனுமதியில்லை"ன்னு எழுதி வெச்சிருக்காங்களே ஏன் தெரியுமா..?

 ஏன் ..?

அங்கே சாப்பிட்டதை அங்கேயே வாந்தி எடுக்காம இருக்கத்தான்...!

 : ? ? ? ? ? ? ? ? ?)
 
..........

மனைவி :இந்த காலத்து ஆம்பளைங்க திருமண நாளைக்கூட மறந்துடறப்ப நீங்க இப்பவும் நம்ம கல்யாண சி டி யை திரும்ப திரும்ப போட்டு பாக்கறீங்களே, உங்களால நம்ம கல்யாண நாளை மறக்கவே முடியலையா மாமா..?

கணவன் ; இவ யாருடா நடுவுல வந்து காமெடி பண்ணிக்கிட்டு..! நான் கடைசியா சிரிச்ச அந்த நாளை போட்டு பார்த்து ஆறுதல் பட்டுக்கிட்டிருக்கேன­். இதுல கல்யாண நாளை சொல்லி கடுப்பை கிளப்பிக்கிட்டு....!






மனைவி :? ? ? ? ? ? ? ? ?)
 
.........................

தலைவர் : தமிழ்நாட்டுல அந்த நடிகருக்கு நல்ல வாய்ஸ் இருக்குனு நீங்க சொன்னதை கேட்டு கூட்டணி அமைச்சு போட்டி போட்டா இப்படி மண்ணை கவ்வ வச்சுட்டீங்களே..!
செயலாளர் : அட போங்க தலைவரே, நான் அவரோட "குரல்" நல்லா இருக்கும்னு சொல்ல வந்ததை தப்பா புரிஞ்சுக்கிட்டு நீங்கதான் அவசரப்பட்டு கூட்டணி வெச்சிட்டு இப்ப தலைல துண்டைப்போட்டுட்டு நிக்கறீங்க...!






தலைவர்: ..??????)
 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நோயாளி :டாக்டர், எங்க ஊரு ரேஷன் கடையில சீனி எடை குறைவா போடறாங்க டாக்டர்!

டாக்டர் : சரி , இதை ஏன் எங்கிட்ட வந்து சொல்றீங்க?

நோயாளி : நீங்க தானே டாக்டர் , சுகர் ப்ராப்ளம் ஏதும் இருந்தா வந்து சொல்லணும்னு சொன்னீங்க...!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஒருத்தர் ஒரு தையல் கடையில சட்டை ஒண்ணு தைக்க கொடுத்தார். வாங்கி போட்டு பார்த்தா போட முடியாத அளவுக்கு டைலர் கோக்கு மாக்கா தச்சு வெச்சிருந்தார்.உடனே கோபமா கோர்ட்டுக்கு போறார். ஏன்..?

டைலர் மேல கேஸ் குடுக்கva...?

ஏன்னா அங்க தான் சட்ட சிக்கல்களையெல்லாம் தீர்த்து வைப்பாங்களாமே...!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அப்பா ; அழாதேடா மகனே .. சாக்லேட் வாங்கித்தர்றேன். நம்ம அம்மா தானே அடிச்சாங்க..!

மகன் : அட போங்கப்பா ! உங்க அளவுக்கெல்லாம் என்னால அம்மாவோட அடியை தாங்கிக்க முடியாது..!






அப்பா : ? ? ? ? ? ? ? ? ?)
 
......................................

.ஒருத்தர் பல் வலின்னு பல் டாக்டரை பார்க்க போனார், அப்ப ஒரு நர்ஸ் வந்து அவர்கிட்ட ஏதோ சொல்றாங்க.உடனே அவர் எழுந்து பக்கத்தில இருக்குற கண் டாக்டரை பாக்க போய்ட்டார், ஏன்..?

நர்ஸ் சொன்னாங்களாம், உங்க பார்வை சரியில்லைன்னு..!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சந்திரிகா டெக்ஸ்டைல்ஸ்ல ஒரு ஆன்டி ஸ்கூட்டில வந்து ஒரு டீ கேக்குறாங்க, அது என்ன டீ தெரியுமா?

"நைட்டீ..!"

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பாலு : நான் பொத்தி பொத்தி வளர்த்த பொண்ணு கடைசியில என் கண்ணுல மண்ணை தூவிட்டு ஒருத்தன் கூட ஓடிபோயிட்டா...!

கோபு :இது பரவாயில்லையே, என் பொண்டாட்டி என் கண்ணில மிளகாய் பொடிய தூவிட்டில்ல ஓடிப்போனா....!


பாலு : ? ? ? ? ? ? ? ? ?)


,,,,,,,,,,,,,,,,,,




.ஒரு யானையும் எறும்பும் விளையாடிக்கிட்டு இருக்கும் போது ஒரு சின்ன தகராறு. உடனே எறும்பு கோபமா ஒரு வார்த்தை சொல்லிச்சு. அதை கேட்டு யானை ரோஷமா போய் பேட் பால் எடுத்துக்கிட்டு வேறு சில யானைகளையும் கூட்டிக்கிட்டு வந்துச்சு , ஏன் தெரியுமா..?

எறும்பு ஒண்டிக்கு ஒண்டியா வர்றியான்னு கேட்டது யானை காதுல 20/20 க்கு வர்றியான்னு கேட்டுச்சாம்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


நம்ம கன்னியாகுமரி மாவட்டத்துல இந்த ஊர்ல இருக்குறவங்க யாரும் கடி ஜோக் சொல்ல மாட்டாங்க அது எந்த ஊர் தெரியுமா..?

"கடியாப்பட்டணம்".

................................................................


கணவன் : (முதலிரவில்) இன்னைல இருந்து நீதான் எனக்கு "பாக்ய லக்ஷ்மி, ஐஸ்வர்யா, சௌபாக்யா " எல்லாமே..!

மனைவி : அப்போ இன்னைல இருந்து நீங்களும் எனக்கு "சுரேஷ் ஆன்டனி, நஸீர் " எல்லாமே.!)
 


,,,,,,,,,,,,,,,,,,,,,,

 அக்கா, உங்க புருஷன் கண்ணை கட்டிக்கிட்டு உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டிரு­க்காரே...., உங்க சமையல் அவ்வளவு கேவலமாவா இருக்கும்..?



அட நீ வேற. டாக்டர் சுகர் டெஸ்ட் பண்ணி பாத்துட்டு, ஸ்வீட்டை கண்ணாலேயே பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டாராம்..! அதான் நான் சுட்ட ஜாங்கிரியை கண்ணை கட்டிகிட்டே சாப்பிடுறார்....!)


..............................

என் புருஷன் உடம்புல அங்கங்க கருப்பு திட்டா கிடக்குதுன்னு அந்த டாக்டர் கிட்ட போனா அப்புறம் தான் தெரிஞ்சது அவர் போலி டாக்டர்ன்னு..!

எதை வெச்சு அப்படி சொல்றீங்க?

உங்க சந்தேக நிழல் தான் அவர் மேல படிஞ்சிருக்குன்னு சொல்றார்..!

 ? ? ? ? ? ? ? ? ?)
 — 

.....................

 இத்துனூண்டு எறும்புக்கு கடிக்கிற சக்தியை கொடுத்த ஆண்டவன், இம்மாம் பெரிய யானைக்கு அந்த சக்தியை கொடுக்கல. ஏன்னு சொல்லுங்க..!

 அந்த பெரிய ரகசியத்தையும் நீங்களே சொல்லிடுங்க...!

 எறும்பு நம்மள கடிச்சா அப்படியே நசுக்கி தூக்கி போட்டுடலாம். இதுவே யானை நம்மள கடிச்சா..?
...........................................................


இரண்டு நண்பர்கள்ல ஒருத்தர் பி. எட்., பாஸ் ஆனவர். இன்னொருவர் எட்டாவது ஃபெயில் ஆனவர். ஆனா ரெண்டு பேருமே கிளாஸ் எடுக்குறாங்க .. எப்படி..?

அது எப்படிங்க முடியும்,?

 ஒருத்தர் ஸ்கூல்ல கிளாஸ் எடுக்குறார், இன்னொருத்தர் டீ கடையில கிளாஸ் எடுக்குறார்...!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


நண்பன் 1 : பாம்பு கடிக்கு என்ன பண்ணணும் ..?

நண்பன் 2 ; வெரி சிம்பிள். பாம்பு படமெடுத்து நிக்குறப்போ அது முன்னாடி கையையோ காலையோ காட்டினா மட்டும் போதும்.!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,


,ஒருவர் :தலைவர் , வர்ற பாராளுமன்ற தேர்தல்ல தனித்து போட்டியில்லை, 3வது அணியுடன் கூட்டணி அமைத்துத்தான் போட்டின்னு சொன்னதற்காகவா தொண்டர்கள் எல்லாம் படு கோபமா இருக்காங்க....?

மற்றவர் : நிருபர் எந்த அணியுடன் கூட்டணி அமைப்பீர்கள் என்று கேட்டதற்கு ,"சென்னை சூப்பர் கிங்ஸ்"அணின்னு சொல்லி இருக்காரு அதான்..!

.........................................................................

நண்பன் 1 : எதை வெச்சு அவர் போலி டாக்டர்ன்னு சொல்றே.?

நண்பன் 2 : மெமரி பவர் குறைவா இருக்குன்னு சொல்லி அவர்கிட்ட போனா , உங்க மூளைல இருக்குற 2 ஜி பி மெமரி கார்டை எடுத்துட்டு 8 ஜி பி கார்டை ஆபரேஷன் பண்ணி வெச்சிட்டா சரி ஆகிடும்னு சொல்றாரே...!
..........................................................................


மாப்ளே , நடிகை இனியாவுக்கும் நடிகை இலியானாவுக்கும் இடையில ஆறு வித்தியாசம் சொல்லு டா..!

ஐயையோ.. என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா திட்டுவா நீயே சொல்லிடு டா மாப்ளே...!

 சிம்பிள் டா . இனியாவோட ஊர்ல ஓடுறது முல்லை பெரியார், இலியானாவோட ஊர்ல ஒடுறது கிருஷ்ணா ஆறு!)
 

.......................................
நண்பர் 1 : யானை ஒண்ணு ஒரு சிற்றெறும்பை காதலிச்சிட்டிருந்ததா­ம். திடீர்னு அதை கை கழுவிட்டு (!) ஒரு கட்டெறும்பை கல்யாணம் பண்ணிக்கிச்சாம். ஏன்..?

நண்பர் 2 : ஜோடிப்பொருத்தம் சரியா இல்லாம இருந்திருக்கும்..!

நண்பர் 1 : அந்த கட்டெறும்பு வீட்ல 1000 ஏக்கர் கரும்புத்தோட்டம் வரதட்சணையா கொடுக்கலாம்னு சொன்னாங்களாம்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கணவன் : என் அம்மா மூச்சு விட முடியாமல் திணறினப்ப நீ பார்த்தும் பார்க்காத மாதிரி போனியே ஏன்..?

மனைவி : நீங்க தானே சொன்னீங்க குடும்பத்தில சில நண்மைகள் நடக்கணும்னா சில விஷயங்களை பார்த்தும் பார்க்காத மாதிரி போகணுமின்னு...!

கணவன் : ? ? ? ? ? ? ? ? ?

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு தமிழ் படத்துல ஒரு யானைக்கு ஹீரோவாகவும் ஒரு எறும்புக்கு ஹீரோயினாகவும் நடிக்க வாய்ப்பு வந்தது. யானை ஒத்துக்கிச்சு. எறும்பு ஒத்துக்கல..
ஏன்.?

பாடல் காட்சியில 'நீச்சல் உடை'யில நடிக்க சொன்னாங்களாம்...!)
 

...................

 டாக்டர் எனக்கு எப்பவுமே எல்லாத்துலயுமே ஒரே சந்தேகமா இருக்கு..


அப்படி உங்களுக்கு என்ன தான் சந்தேகம்..?

 வீட்டை பூட்டினேனான்னு சந்தேகம். பஸ்ல போறப்போ டிக்கட் எடுத்தேனான்னு சந்தேகம். மத்தியானம் சாப்பிட்டேனான்னு சந்தேகம். இப்படி நிறைய....!

இது எல்லோருக்குமே நார்மலா வர்ற சந்தேகம் தான். இப்போ என்ன சந்தேகம் உங்களுக்கு..?

 நீங்க நிஜமான டாக்டரா இல்ல போலியான்னு சந்தேகமா இருக்கு..!)




? ? ? ? ? ? ? ? ? 
,,,,,,,,,,,,,,,,,,,,


நம்ம தலைவர் சொந்த கட்சியிலேயே ஊழல் பண்ணிட்டாரு....!


அப்படி என்ன ஊழல் பண்ணாரு...?


'சலவை' செய்த செலவுன்னு சொல்லி ஒரு கோடி ரூபாயை மோசடி பண்ணிட்டாராம்...!


எதை சலவை பண்ணினதா கணக்கு காட்டினாராம்..?


தொண்டர்களுக்கு "மூளை சலவை" செய்த செலவுன்னு சொல்லி.....!


சிவா தமிழ்.. : ? ? ? ? ? ? ? ? ?)

................................................................................................

உங்க நண்பரோட அலப்பறை தாங்க முடியல.. "நான் பிறக்கும் போதே ஏ.சி. ரூம் ல பிறந்தவன்"னு பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டு திரியுறாரு..!

அவர் சொல்றது உண்மைதாங்க..!

அப்படியா..! அப்போ அவர் பாரம்பரியமா வசதியான குடும்பத்து பையனா..?

 அட நீங்க வேற.. அவன் சிசேரியன் ஆபரேஷன்ல பொறந்தவன்.. ஆபரேஷன் தியேட்டர் ஃபுல்லா ஏ.சி. தானே.... அதி சொல்றான்!

? ? ? ? ? ? ? ? ?)

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,'

உலகத்திலேயே மிகவும் கவர்ச்சிகரமான பறவை எது ?'
"பிரா"ய்லர் சிக்கன்.
..........................................................
"என் நண்பர் ஒருத்தர் ஊர்ல பழக்கடை வெச்சு நடத்திக்கிட்டு இருந்தார். தினமும் எக்கச்சக்கமான பழங்கள் அழுகி நாசமாகும். இருந்தும் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை, ஏன்னு சொல்லுங்க..!"
'ஏன்?'
"அவர் கூடவே ஜூஸ் கடையும் வெச்சு நடத்திக்கிட்டு இருந்தார்."
.....................................................................
டீச்சர் : உன் கிட்ட 10 சாக்லேட் இருக்கு. அதுல மூனு உமாவுக்கு கொடுக்குற, மூனு வித்யாவுக்கு கொடுக்குற , மூனு சிவா ரிஷிக்கு கொடுக்குற, அப்ப உனக்கு என்ன கிடைக்கும்....?
ஸ்டூடண்ட் : புதுசா எனக்கு மூனு கேர்ள் ஃப்ரெண்ட்கிடைக்கும் டீச்சர்..!

,,,,,,,,,,,,,,,...........................................

வேலு : நேத்து பல்லே விலக்கலை .. ..
ரமனன் : ஏன் .. ..
வேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை ..
.................



பைபாஸ் சர்ஜரின்னாலும், பைபாஸ் டிராவல்னாலும் ஒண்ணு தான்- காசு புடுங்கிற விஷயம்.
இங்க டாக்டர் ஃபீஸ், அங்க டோல் ஃபீஸ்.....!!!


,,,,,,,,,,,,,,,,,,,


No comments:

Post a Comment