Monday, March 10, 2014

குரு உபதேசம்:

குரு உபதேசம்: 022 தேதி: 03.03.2014

தானம் பண்ணுவது வெளியிலே தெரியக்கூடாது. வெளியிலே தெரிந்தால் மற்றவர்களும் "தேஹி" என்று பிடுங்குவார்களோ என்பதால் அல்ல.

இவன் தர்மிஷ்டன் என்று நாலு பேருக்குத் தெரிந்து நம்மை ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பித்தால் நமக்கு அஹம்பாவம் வந்துவிடும். அது தானத்தின் பலனையெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போய்விடும்.

"இன்ஸ்டிட்யூஷனலைஸ்" செய்யாமல் தன்னியல்பாக நம் வாழ்க்கை முறையிலேயே கண்ணுக்குத் தெரியாமல் ஒட்டிக் கொண்டு பரோபகாரம் நடை பெறுவதில் ஒரு உத்தமமான அம்சம் என்னவென்றால் இங்கே தான் அஹங்காரம் தலைதூக்கவே இடமில்லாமல் இருக்கிறது.

தான் இருக்கிற இடமே தெரியாமல் தன் காரியம் மட்டுமே தெரிவது தான் தொண்டின் லக்ஷணம்.

நாம் "தானம் கொடுக்கிறோம்" என்ற வார்த்தையைச் சொல்வது கூடத் தப்பு தான். "பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்" என்று அடங்கி பவ்யமாகக் கொடுக்க வேண்டும். எங்கே இதிலும் ஓர் அஹங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.

தியாகம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.

No comments:

Post a Comment