Thursday, September 5, 2013

கடி ஜோக்ஸ் 24


நிர்வாகி: எதையும் குழுவா செய்யுங்கன்னு சொன்னது ரொம்பத் தப்பாப் போச்சு.
ஏன் சார்?
ஒரு டேபிளை இன்னொரொரு இடத்திலே வைக்கிறதுக்கு அஞ்சுபேர் குழு அமைச்சு ரெண்டு நாளா பேசிக்கிட்டே இருக்காங்க. இன்னும் வேலை ஆகல.
........................................................................................

 ஒரு நண்பன்: பாவம் அந்த பிச்சைக்காரன் விளம்பர பேனர்ல டிரெஸ் தச்சு போட்டிருக்கான் பாத்தியா?

இன்னொரு நண்பன்: நீ வேறடா, அவர் பிரபலமான பிச்சைக்காரர்னு சொல்லி அந்தக் கம்பெனி அவரை விளம்பர தூதரா நியமிச்சிருக்கு.
...........................................................................................................

ஆசிரியர்: சூரியன் மேற்கே மறையும். இது என்ன காலம்?

மாணவன்: சாயங்காலம் சார்!
..........................................................................

 இளைஞன் பாடுகிறான்: கலக்கப் போவது யாரு?

அவன் அப்பா: நீ தின்ன தீனிக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில உன் வயிறுதான்.
..........................................................................................................

 ஏண்டா நான் பாட்டுக்கு அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா கம்ப்யூட்டரை விட்டு எழுந்திக்க மாட்டேங்கற?

நீங்கதானே தாத்தா சொன்னீங்க, மவுசோடு வாழணும்னு, அதான்.
.................................................................................

காதலன்: நேத்து தைரியமா உங்க அப்பாகிட்டபோய் நான் உங்க பொண்ணை லவ்பண்றேன்னு சொல்லிட்டேன்.காதலி: ரொம்ப கோபப்பட்டாரா?

காதலன்: இல்லை. என்ன ரொம்ப பரிதாபமா பாத்தாரு.
..................................................................................

 அந்தப் பொண்ணைப்பாத்து மத்தாப்பூ மாதிரி சிரிக்கிறேன்னு சொன்னது ஒரு தப்பா?

ஏண்டா, என்ன ஆச்சு?
அவளோட அண்ணன் சாட்டையோட வந்து வெளுத்துட்டான் முதுகை.
............................................................................................

 ஏண்டா தம்பி, உங்கப்பா உன்னை இந்த அடி அடிச்சாரு, அப்பக்கூட நீ அழலையே?

அழுதா மட்டும் என்ன பிரயோஜனம்? எங்கப்பாவுக்குக் காது கேக்காதே?

.............................................................................................

என் லவர் சிரிச்சா அழகா கன்னத்தில குழி விழும்.

இதென்ன பெரிசு, என் லவர் சிரிச்சா பல்லே விழும்.
...........................................................................

 கண் டாக்டருக்குக் கால் இல்லைனா என்ன ஆவாரு?

தெரியலையே?
கண்டக்டர் ஆவாரு.
............................................................................

"ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சி." "ஏன்?" "எப்பப் பார்த்தாலும் எடையை குறை எடையை குறை என்கிறார்."

..............................................................................................

இன்ஸ்பெக்டர்: கண்டெய்னர்ல ரேஷன் அரிசி தான் கடத்திட்டு வறாங்கன்னு எப்படிய்யா அவ்ளோ கரெக்டா செல்ற.. ஏட்டு: அவ்ளோ தூரத்துல வரும் போதே ரொம்ப மோசமான ஒரு நாத்தம் அடிக்கிதே அத வச்சித்தான்.

..............................................................................................................................

எதையோ பத்தி ரெம்ப ஆழ்ந்து சிந்திச்சிக்கிட்டிருக்கீங்க போல... எதைப் பற்றி சிந்திக்கிறதுன்னுதான் சிந்திச்சிக்கிட்டிருக்கேன்! வேற என்ன?


.............................................................................................................................

கோபு: நான் ஆபீசில் நல்ல பெயர் எடுத்திருப்பதற்கு என் மனைவிதான் காரணம்.

 பாபு: எப்படி? 

கோபு: வீட்டுக்கு பேற டைம் வந்ததும் என் மேஜை மீதிருக்கும் அவளது போட்டோவை பார்ப்பேன்.. அவ்வளவுதான் அப்படியே நிறைய வேலை செய்து முடித்து விடுவேன்.
......................................................................................................................

மெகா சீரியல் தயாரிப்பாளர்: என்ன சார் இது 1 எபிசோடுக்கு 2 கோடி ரூபாய் பட்ஜெட் போட்ருக்கீங்க..? 


டைரக்டர்: அப்படியே எல்லா கேரக்டரையும் அழ விட்டாத்தான் சார் சீரியல் லேடீஸ் மத்தியில ஹிட் ஆகும், அதனால்தான் கிளிசரின் மட்டும் ஒரு குவிண்டால் செலவாகும் சார்!

.............................................................................................................................................

"என்ன பிரச்சினையாயிருந்தாலும் உங்க பாஸ் ஐ Don't Mind அப்படீன்னு சொல்றாரே, 


பரவால்லியே!" "மண்ணாங்கட்டி, அவருக்கு மூளையில்லங்கறதத்தான் இந்த லட்சணத்தில் சொல்றாரு."

...................................................................................................


பூனை: உன் வயசு என்ன? 

யானை: பத்து வயசு பூனை: ஆனா நீ பாக்கறதுக்கு ரொம்ப பெரிசா தெரியிறியே

யானை: ஆமாம், ஏன்னா நான் காம்ப்ளான் பாய்

பூனை: எனக்கு 15 வயசு 

யானை: ஆனா நீ ரொம்ப சின்னதா தெரியிறியே

பூனை: அதுக்கு காரணம் பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கிள்.

........................................................................................

வாத்தியார்: தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே விழுது, ரெண்டையும்? கூட்டினால் என்ன வரும்? மாணவன்: குப்பை தான் சார்.


............................................................................................................


"Global Warming, Pollution இப்படி ஏன் உலகம் போகுது?" ஏன்னா, கிரீன் டிரீஸ் இருக்க வேண்டிய இடத்தில், இண்'டஸ்ட்'ரீஸ் இருக்கு.


..............................................................................

நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...
...................................................................................................................


"பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?" "முதல்ல பூட்டை பூட்டணும்...!"


.................................................................................................

"எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்?"

"எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக்கும்."
..........................................................................................



No comments:

Post a Comment