ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயனத்தில்ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அன்று நடுநிசியில் பிறந்தார்.
நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள்.
நமக்கு உத்தராயணம் அவர்களுக்கு பகல்.
தக்ஷிணாயணம் அவர்களுக்கு ஒரு இரவு.
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு நேரம் ஆகிறது. இம்மாதிரியே நம்முடைய ஒரு மாதம் பித்ருகளுக்கு ஒரு நாள் ஆகிறது.
நமது சுக்ல பக்ஷம் அவர்களுக்கு பகல், க்ருஷ்ண பக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண பக்ஷம் பித்ருக்களுக்கு இரவாகிறது.
அஷ்டமி திதி நடுவில் வருவதால் அன்று அவர்களுக்கு நடுநிசி பொழுது ஆகிறது. இதனால் என்ன ஏற்படுகிறது, ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் எல்லா தினுஸிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம்.
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருட்டு நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரகாலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை. அவருடைய பெயரும் கிருஷ்ணன்.
கிருஷ்ண என்றால் கருப்பு என்று பொருள்.அவனுடைய மேனியும் கருப்பு. இப்படி ஒரே கருப்பு மயமான ஸமயத்தில் தானும கருப்பாக ஆவிர்பவித்தாலும் அவனே ஞானஒளி.
காளமேகங்களுக்கு இடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றியதான ஒளி.
ஞான ஒளி ஆதலால் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜ்வலித்துக்கொண்டு இருக்கிறது.அஞ்ஞானத்தால் இருண்டு இருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும்.
உடலுக்கு ஒளி அளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக உயிர்களுக்கு எல்லாம் ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன்.
தென்நாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகிவிட்டான்.அகக்கண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம் அவனுடையது.
அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்ககள் நிறைந்திருக்கும் ஸ்ரீமத்பாகவதம் புரான சிரேஷ்டமாக விளங்குகிறது.
"அவனைப்பத்தின அத்...தனையுமே மதுரந்தான்!" தன்னுடைய மதுரமதுரக் குரலில், மதுரமான சிரிப்போடு மதுராநாதனைப் பற்றி பெரியவா சொன்னார்....
"அவன் பொறந்ததே மதுரைல. நம்ம பாண்ட்யதேசத்து மதுரை இல்லே! இங்கே மதுரமயமா அம்பாள் இருக்கா......அவகிட்டேர்ந்துதான் சங்கீதம் பொறந்தது. நான் சொன்னது வடமதுரை. அங்கே அவன் பொறந்த ஒடனேயே அப்பாக்காரர் வஸுதேவர் கொழந்தையை தூக்கிண்டு கோகுலத்துல கொண்டு போயி விட்டுட்டார். யமுனையோட மேலக்கரைல கோகுலம்; பிருந்தாவனம்..ல்லாம் கீழக்கரை. ஆத்துல அளைஞ்சுண்டே தாண்டிப்போய் கோகுலத்ல யசோதைக்கு பக்கத்ல விட்டுட்டு, அப்பத்தான் அவளுக்கு பொறந்திருக்கற பொண் கொழந்தையை தூக்கிண்டு ஜெயிலுக்கு திரும்ப போய்ட்டார்....இங்கே எல்லாமே திருட்டு மயம்.." பெரிதாக சிரித்தார்.
...."அங்க ஜெயில் காவலாளிகளுக்கு தெரியாம திருட்டுத்தனமா வெளில வந்தது, இங்க கோகுலத்ல ப்ரஸவிச்சவளுக்கும் சரி, ப்ரஸவம் பாத்தவாளுக்கும் சரி, பொறந்தது பொண் கொழந்தைன்னோ...அதுக்கு பதில புள்ளைக்கொழந்தையை வஸுதேவர் வெச்சுட்டு போனதோ, தெரியாது! இங்கேயும் திருட்டுத்தனம்! க்ருஷ்ணன்..ன்னாலே ஒரே திருடு.ங்கறோமே! வெண்ணையையும் திருடினான்....மனசையும் திருடினான்! நவநீத சோரன், சித்த சோரன்...ங்கறோமே.....அவனுக்கு அந்த திருட்டு புத்தி எப்டி வந்துதுன்னா.....அவனோட அப்பா அவன் பொறந்த ஒடனேயே பண்ணின திருட்டுத்தனந்தான், அவனுக்கும் பிதுரார்ஜிதமா வந்துடுத்துன்னு தோண்றது!..." கண்ணனின் திருட்டில் ஊறிய புன்னகை பெரியவா முகத்தில் சோபை பெற்றது.......தொடர்ந்தார்....
"ஆனா, அப்டி நெனைக்கறது செரியில்லே! சும்மாக்காக வேடிக்கை பண்ணினேன். வஸுதேவர் பாவம், ஸாது! கொஞ்சங்கூட திருட்டுபொரட்டே தெரியாதவர்! அவரை திருட்டுத்தனம் பண்ணப் பண்ணினதே இந்தக் கொழந்தைதான்! அது பொறந்த ஒடனேயே காவலாள்ளாம் மயக்கம் போட்டா மாதிரி தூங்கினதாலதான் அவர் ஜெயில்லேர்ந்து தப்பிச்சு போக முடிஞ்சுது...ஜெயில் பூட்டு தானா தொறந்துண்டது......அங்க கோகுலத்துலேயும் எல்லாரும் தூங்கி வழிஞ்சதாலதான் அவர் கார்யத்தை சௌகர்யமா முடிக்க முடிஞ்சுது. இதெல்லாம் பாவம் அந்த அப்பாவி மனுஷரா பண்ணினார்? அவருக்கு பிள்ளையா வந்தானே ! ஒரு அப்பன்! அவன்தான் இத்தனையும் மாயாவித்தனமா பண்ணினது!
அயோத்திக்கப்புறம் சப்த மோக்ஷபுரில, மதுரா இருக்கு. அவன் அவதாரம் பண்ணின ஊருக்கே அவனோட ஸ்வபாவம் இருக்கே! க்ருஷ்ணன்..ன்னா என்ன? மதுரந்தான்! தித்திப்புன்னா....தித்திப்பு! அப்டியொரு தித்திப்பு அவன்! மதுரம்ன்னு சொல்லறச்சே கூட "dhu "கொஞ்சம் கடுமையா இருக்கு. இன்னும் நைஸா "ஸ்வாது"ன்னும் ஒரு வார்த்தை இருக்கு. "ஸ்வாது" லேர்ந்துதான் "ஸ்வீட்" வந்தது.....இப்போ, நான் ஒரு விஷயம் செரியா சொல்லலைனா....கொஞ்சம் apologise பண்ணிக்கறா மாதிரி சரி பண்ணிக்க பாத்தேனோல்லியோ?...கிருஷ்ணனா இருந்தா, அப்டி பண்ண மாட்டான்! அவன் பண்ணறதுல... ஸரி, ஸரியில்லை..ங்கற ரெண்டே கெடையாது! அந்த வார்த்தைகளே அவனோட அகராதியில ஏறாது! அவன் பண்ணற சகலமும் மதுரம், மதுரம்...ங்கற ஒண்ணுதான்! மத்தவா பண்ணினா ஸரியில்லாததெல்லாங்கூட அவன் பண்ணறப்ப, மதுரந்தான்! இதை நெனைச்சுத்தான் பரம பக்தரான ஸ்ரீ வல்லபாச்சார்யார்... ங்கறவர் "மதுராதிபதே அகிலம் மதுரம்"..ன்னு பாடி வெச்சுட்டுப் போய்ட்டார்."
--------------------------
ஜென்மாஷ்டமியன்று ஸ்ரீ ராதா ஸமேத க்ருஷ்ணன் எல்லாருக்கும் சகல ஸௌபாக்யங்களையும் அனுக்ரஹிக்க என் ஸத்குருநாதரை ப்ரார்த்திக்கிறேன்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே|
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே||
Courtesy: Smt Prema Subramaniam (through email)
கிறிஸ்துவும் சிவ-விஷ்ணுக்களும்
அந்த இரண்டுக்கும் நடுவிலே இன்றைக்கு கிறிஸ்துமஸ்*. அது லோகம் பூராவிலும் ரொம்பப் பேர் மதாநுஷ்டான தினமாகவோ, அல்லது ‘ஹாலிடே’ உல்லாஸமாகவோ – ‘ஹோலிடே’யாகவோ, வெறும் ‘ஹாலிடே’யாகவோ – கொண்டாடும் நாளாக இருக்கிறது. இதன் காரண புருஷரையும் நம்மைச் சேர்ந்தவராக, அதிலும் தம்முடைய பேராலேயே நான் சொன்ன அந்த சிவ-விஷ்ணு அபேதத்தைக் காட்டுகிறவராக, சொல்லிக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது!
•உரை நிகழ்ந்தது 1966-ல் வைகுண்ட ஏகாதசியான டிஸம்பர் 23-க்கும் திருவாதிரையான அம்மாத 27/28க்கும் இடையிலுள்ள 25-ந்தேதி என்று வாசகருக்கு மீண்டும் நினைவூட்டுகிறோம்.
அவர் பெயர் என்ன? ஜீஸஸ் க்ரைஸ்ட்’ என்கிறோம். அது ஜெர்மானிக் என்றும் Teutonic என்றும் சொல்கிற பாஷா ‘க்ரூப்’பைச் சேர்ந்த ஜெர்மன் பாஷை, இங்கிலீஷ், டட்ச், இன்னும் ஸ்காண்டினேவியன் பாஷைகள் என்பதாக நார்வே, ஸ்வீடன், டென்மார்க் முதலான தேசங்களில் பேசப்படும் பாஷைகள் ஆகியவற்றில் அவருக்கு ஏற்பட்டிருக்கிற பெயர்தான். அவருக்கு மூலத்தில் ஹீப்ருக்களின் பாஷையில் என்ன பெயரோ அதுவே – ஸம்ஸ்க்ருத ‘ச்ராவணீ’ தமிழ் ‘ஆவணி’யாக உருமாறின மாதிரி – இந்த பாஷைகளில் ஜீஸஸ் என்று ஆகியிருக்கிறது.
அவர் இந்த பாஷைகள் வழங்குகிற ஐரோப்பாவைச் சேர்ந்தவரேயில்லை. நம்முடைய ஆசியாக் கண்டத்துக்காரர்தான் அவர். அவருடைய தாய்பாஷை அரமீயன் என்கிறது. அது ஹீப்ருக்களின் பாஷைகளான ஸெமிடிக் க்ரூப்பைச் சேர்ந்த ஒரு பாஷையே. அதிலே அவருக்கு வைத்த பெயர் ‘யீஷுவ (Yeshua) என்கிறதே! அந்த final ’வ’வை ‘அ’ மாதிரி பட்டும் படாமலும் சொல்ல வேண்டும். அதுதான் மற்ற ஐரோப்பிய பாஷைகளில் ‘ஜோஷுவா’ என்றும் ’ஜீஸஸ்’ என்றும் ஆயிற்று.
‘ய’கர வரிசை ‘ஜ’கர வரிசையாவது எல்லா இடத்திலேயும் உண்டு. வேதத்திலேயே மற்ற சாகைகளில் (கிளைப் பிரிவுகளில்) ‘ய’ என்று வருவது வடதேசத்தில் இப்போதும் அநுஷ்டானத்திலிருக்கிற சுக்லயஜுர் வேதத்தின் மாத்யந்தின சாகையில் ‘ஜ’ என்றுதான் வரும்…. யமுனாவை ஜமுனா என்கிறார்கள். யந்த்ரம் என்பதை ஜந்தர் என்கிறார்கள். தமிழிலே ஸம்ஸ்க்ருத ‘ஜ’வை ‘ய’ ஆக்குவது ஸஹஜம். வேடிக்கையாக இதற்கு ஒரு ‘கான்வெர்ஸ்’! ஸம்ஸ்க்ருதத்தில் ‘யாமம்’ என்றே இருப்பதை நாம் ‘ஜாமம்’ என்கிறோம்! எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், ‘யீஷுவ’வின் ‘யீ’தான் ‘ஜீஸ’ஸில் ‘ஜீ’யாகியிருக்கிறது. அந்த ‘ஜீ’யை நாம் மறுபடி ‘ய’காரப்படுத்தி, ஆனால் கொஞ்சம் வித்யாஸமாக, ‘யேசு’ என்கிறோம்.
மூல ‘யீஷுஅ’ நம்முடைய ‘ஈச’ தான், அதாவது சிவ நாமாதான் என்று வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது.
அப்படிச் சொன்னால் நம்மவர்கள், அந்த மதஸ்தர்கள் இரண்டு பேரிலுமே யாராவது அபிப்ராய பேதமாகச் சொல்வார்களோ, என்னவோ? பேதம் வேண்டாம் என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்? ஆனபடியால் வைத்துக் கொள்ளலாமேஎன்றில்லாமல் வைத்துக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது என்று வேண்டுமானால் திருத்திக் கொள்கிறேன்!
‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’டில் ‘ஜீஸ’ஸை ‘ஈச’னாகச் சொல்லலாமோ என்று!
‘க்ரைஸ்ட்’டுக்கு வருகிறேன். அது முழுக்கவும் ஐரோப்பிய பாஷையாகவே ரூபமான (உருவான) வார்த்தைதான். நாம் பட்டாபிஷேகம் என்று விசேஷமாக அபிஷேகம் பண்ணுகிறோமோல்லியோ? மங்கள ஸ்நானம் என்று தலைக்குத் தைலம் வைத்து அப்படிப் பண்ணுகிறது. இதே மாதிரி எல்லா தேசங்களிலும் மத சாஸ்த்ரபூர்வமாகத் தைலம் தேய்ப்பதாக இருந்திருக்கிறது. அப்புறம் ஸ்நானம் பண்ணுவிக்கிறது இல்லை; தைலம் தேய்த்து மட்டும் நிறுத்தி விடுவது. கொஞ்சமாகப் பூசுவதால், அதுவே உள்ளே போய் விடும். அதற்கு ‘அனாயிண்ட்’ பண்ணுவதென்பது பெயர். ஈச்வரனே அந்த மாதிரிச் சில பேரை லோகோத்தாரணம் பண்ணுவதற்காக ‘அனாயிண்ட்’ பண்ணி, அதாவது பட்டாபிஷேகம் பண்ணி, ‘மெஸையா’ (Messiah) என்று அனுப்புவதாகச் சொல்வார்கள். ஹீப்ரு ‘மேஷியா’ இங்கிலீஷில் ‘மெஸையா’ ஆயிற்று. அதற்கே ஐரோப்பிய பாஷையான க்ரீக் (Greek)-ல் இருக்கிற பெயர் ‘க்ரைஸ் டோஸ்’ என்பது. அதன் அடியாகத்தான் இங்கிலீஷ் முதலான பாஷைகளில் ‘க்ரைஸ்ட்’ என்ற வார்த்தை ஏற்பட்டது. ஜீவ ஸமூஹ உத்தாரணத்துக்கென்றே ஈச்வரன் அனாயிண்ட் பண்ணி அனுப்பினவரே ஜீஸஸ் என்கிற நம்பிக்கையுள்ள மதஸ்தர்கள் அவரொருத்தரையே குறிப்பாக அப்படிச் சொல்வதாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘ஜீஸ’ஸுக்கு ‘ஈச’ ஸம்பந்தம் காட்டின மாதிரி இந்த ‘க்ரைஸ்டு’க்கு க்ருஷ்ண ஸம்பந்தம் காட்டினாலென்ன என்று தோன்றுகிறது!
க்ருஷ்ணனை நாம் கிஷ்டன், கிட்டன், கிருட்டிணன் என்றெல்லாம் சொல்கிறோமோ இல்லியோ? இந்த மாதிரி ‘க்ரிஸ்டன்’ என்றும்தான் சொல்லலாம். முடிவிலே சொல்லும் ‘அன்’ விகுதி தமிழில்தான் உண்டு. நாம் ‘ஈச்வரன்’ என்பது வடக்கத்திக்காரர்களுக்கு ‘ஈச்வர்’தான்; நம் சங்கரன், ராமன் எல்லாமே சங்கர், ராம் என்றிப்படித் தான்! வர வர இங்கேயும் அதுவே ஃபாஷனாகி வருகிறது… அது இருக்கட்டும்…. ‘அன்’ விகுதி போய்விட்டால் க்ரிஸ்டன் ஆன க்ருஷ்ணன் என்ன ஆவான்? ‘க்ரிஸ்ட்’ என்று தானே ஆவான்? ‘சிவ’ ஸம்பந்தமானது ‘சைவம்’, ‘விஷ்ணு’ ஸம்பந்தமானது ‘வைஷ்ணவம்’ என்று ஆரம்ப இகாரம் ஐகாரமாகிற மாதிரி ‘க்ரிஸ்ட்’ ஸம்பந்தமானது ‘க்ரைஸ்ட்’ என்றே ஆகும்! அப்படித்தானே?
ஆகக்கூடி, ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’ = ‘ஈச க்ருஷ்ணன்’.
(நெடுநேரம் தாமும் சிரித்து உடனிருந்தோரையும் சிரிக்க வைத்து விட்டு ஸ்ரீசரணர் தொடர்கிறார்: ) இப்படியாகத்தானே சிவ-விஷ்ணு அபேதம் காட்டுகிற மாஸத்திலே அந்த இரண்டு பேருக்குமான திருநாள்களுக்கு மத்தியிலே வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரண புருஷர் தம்முடைய பெயரிலேயே ஈச்வரன் என்று சொல்லப்படும் சிவன், விஷ்ணுவின் பூர்ணாவதாரமான க்ருஷ்ணன் ஆகிய இரண்டு பேரின் பேர்களையும் பேதம் பார்க்காமல் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்ட மாதிரிக் காட்டுகிறார் என்று ஸமய ஸமரஸத்தை மேலும் கொஞ்சம் நீட்டிப் பார்க்கலாமோ என்று தோன்றிற்று. தோன்றினதைச் சொன்னேன்.
Source: Email message forwarded by our respected member Sri Ramanathan

No comments:
Post a Comment