மகாபெரியவாவின் நகைச்சுவை ரசனை !!!!!
பச்சை மாவும் பவள வாயும்.
இரவு வேளை.
விஷய ஞானமுள்ள அடியார் ஒருவர் வந்து பெரியவாள் முன் உட்கார்ந்தார்.
“ஆகாரம் பண்ணியாச்சா?”
” ஆச்சு”
“என்ன சாப்பிட்டே?”
“உப்புமா”
ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள். “உனக்கு ஒரு கதை தெரியுமோ? உப்புமாக் கதை”
“தெரியாது”
“கேளு. ஒரு பக்தன் ஸ்ரீரங்கத்துக்கு; போனான். பெருமாளை சேவித்தான். ஒரு சத்திரத்தில் ராத்திரி சாப்பிடப் போனான். உப்புமா போட்டார்கள். உப்புமா சரியாக வேகவில்லை.சின்னச் சின்னதாய் நிறைய கல் வேறே இருந்தது. பல்லில் அகப்பட்டு, வாயெல்லாம் புன்ணாகி , சிவப்பாகி விட்டது. நிறைய மிளகாய் தாளித்துப் போட்டிருந்ததால், காரம் தாங்கவில்லை. கண்களில் நீர் வழிந்து, சிவந்து போச்சு. அப்போ, ரொம்ப சிரமத்திலே ஒரு பாட்டுப் பாடினான். உனக்குத் தெரியுமோ?”
“தெரியாது”
“என்ன அப்படிச் சொல்றே? பச்சை மால் மலை போல் மேனி…..”
“இது எனக்குத் தெரியும்.”
“இவன் கொஞ்சம் மாற்றிப்பாடினான் . பச்சை மா (வேகாத மாவு) , மணி போல் மலை ( உப்புமாவில் மணி மணியாகக் கற்கள்) , பவள வாய் (சாப்பிட்டவனுக்கு, வாய் புண்ணாகிச் சிவந்தது), செங்கண் ( காரம் தாங்காமல் கண்ணீர் வழிந்ததில், கண்களும் சிவந்து விட்டன), அச்சுதா….”
அருகிலிருந்தவர்களுடன் பெரியவாளும் சேர்ந்து கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்!

No comments:
Post a Comment