Monday, July 22, 2013

உபநயனம்: ("வேதமும் பண்பாடும்" புத்தகத்தில் இருந்து..}

உபநயனம்:
("வேதமும் பண்பாடும்" புத்தகத்தில் இருந்து..}

உபநயனத்தை உத்தராயணத்தில் நல்ல முகூர்த்தத்தில் உரிய லக்னத்தில் யதோக்தமாக செய்துவிக்க வேண்டும். 

லௌகீகமான அம்சங்கள் :
உபநயனத்தில் வந்தவர்களை உபசரிப்பது, போட்டோ, வீடியோ முதலிய ஏற்பாடுகள், விருந்தோம்பல் மற்றும் பல லௌகீகமான அம்சங்கள் அவசியம்தான். சந்தேகமில்லை. ஆனால் வைதிகத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் லௌகீகத்திற்கு ப்ராதான்யம் அளித்தால் அது தவறாகும்.

வைதிகத்தை மையமாக வைத்துதான் உபநயனம் ஏற்பாடு செய்ய வேண்டும். வைதிகத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றால் அதில் என்னவெல்லாம் அடங்கும் என்று சிலருக்கு மனதில் கேள்விகள் எழலாம்.

அவைகள் இதோ :
1. ஜபம் செய்வதற்கு அவரவர் சக்திக்கேற்ப நல்ல எண்ணிக்கையில் ரித்விக்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
2. வைதிக சாமான்கள் நல்லவைகளாகவும், தரமாகவும் இருத்தல் அவசியம்.
3. நாந்தி போன்ற விஷயங்களில் ஏனோதானோவென்று இராமல் முறையாக செய்ய முயற்சி எடுத்தல்.
4. ப்ராயஸ்சித்தம் ஏதாவது இருந்தால் அதை முறைப்படி செய்வது.
5. உபநயனம் ஆன தினத்திலிருந்து குறைந்தது 4 நாட்களாகவது விடாமல் ஸமிதாதானம் செய்வதற்கு முன் கூட்டியே ஏற்பாடு செய்தல் வேண்டும்.
6. வைதிக சம்பாவனை விஷயத்தில் கஞ்சத்தனம் பார்க்காமல் தாராளமாக நடந்து கொள்வது.

உபநயனத்தில் இடம் பெறும் ப்ரயோகங்கள்:
உபநயனத்தில் அங்கமாக வேத மந்திரத்துடன் கூடிய பல அம்சங்கள் ரிஷிகளால் விதிக்கப்பட்டுள்ளன.

அவைகள் என்னவென்றால்......
1. உதகசாந்தி ஜபம்
2. அங்குரார்ப்பணம்
3. ப்ரதிஸர பந்தம்
4. நாந்தி ச்ராத்தம்
5. புண்யாஹவாசனம்
6. யக்ஞோபவீத தாரணம்
7. குமார போஜனம்
8. சௌளம். 3வது வயதில் இது செய்யப்பட வேண்டும். ஆனால் தற்காலத்தில் இந்த சௌள கர்மா (மந்திரபூர்வமாக சிகை வைத்துக் கொள்வது) உபநயனத்தன்று நடைபெறுகின்றது.
9. ப்ரஹ்மசர்ய அடையாளங்கள்
10. அஸ்மாரோஹணம்
11. மௌஞ்ஜீ பந்தனம்
12. ஹஸ்த க்ரஹணம்
13. ப்ரதான உபநயன ஹோமம்
14. ப்ரஹ்மோபதேசம் (காயத்ரி மந்திர உபதேசம்)
15. ஸமிதாதானம்
16. பிக்ஷ£சரணம்
17. ஆசிர்வாதம்
18. ப்ரணவ & சிரத்தா&மேதா பூஜை
19. ஹாரத்தி
20. மாத்யாஹ்னீகம்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ப்ரயோகங்களும் மிக கவனமாகவும், ச்ரத்தையாகவும் நடை பெற வேண்டும்.

தக்க வயதில்...:
தக்க வயதில் ஒழுங்காக உபநயனம் செய்விக்கப் பெறும் ஒவ்வொரு சிறுவனும் ப்ரஹ்ம தேஜஸால் ப்ரகாசிக்கப்பட்டு வாழ்க்கையில் எல்லா விதத்திலும் உயர்வான்.

ஸந்தியாவந்தனம் :
உபநயனம் ஆனப் பிறகு எல்லோரும் ஸந்தியாவந்தனத்தை செய்துத்தான் ஆகவேண்டும்.



Sarma Sastrigal

Those who like to get a copy may send Rs.250/- drawn in favour of Sarma Sastrigal, flat No.8, Godavari apartments, West mambalam, Chennai 600 033. For overseas buyers it is 10$ including shipping.

No comments:

Post a Comment