Friday, July 12, 2013

பொன்னாடை எதற்கு ?-பரமாச்சார்யார்

 
பொன்னாடை எதற்கு ?

காஞ்சி முனிவரின் ஜெயந்தி விழா நடந்து கொண்டிருந்தது அயோத்யா 

மண்டபத்தில். ரொம்பப் பிரமாதமாகவும் உருக்கமாகவும் பேசினார் அந்தப் 

பிரமுகர். கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் வியப்பு. 

பரமாச்சார்யார் மேல் இவருக்கு இத்தனை மதிப்பா ?!

அவருக்குப் பொன்னாடை போர்த்த வந்தபோது, “இந்தப் 

பொன்னாடையால் என்ன பயன் ? பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்‘ 

நூலை அன்பளிப்பாக அளித்தால் எவ்வளவோ உபயோகம் அல்லவா ?” 

என்று கூறினார்.

இதைக் கேட்ட இன்னொரு வி.ஐ.பி. நெகிழ்ந்து போய், தனிப்பட்ட 

முறையில் ‘தெய்வத்தின் குரல்‘ ஆறு பாகங்களையும் வாங்கி அவருக்கு 

அனுப்பி வைத்தார்!

அனுப்பியவர் பத்மா சுப்பிரமணியம். 


யாருக்குத் தெரியுமா ? அப்துஸ் சமது!

No comments:

Post a Comment