"வேதமும் பண்பாடும்" புத்தகத்தில் இருந்து.....
கேள்வி :இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றனவா?
பதில் :
உள்ளன. தேசாச்சாரத்தின் காரணமாக சிலவைகள் மாறலாம். ஆனால் பொதுவாக சிலவைகளை நாம் கடைப் பிடித்துத்தான் ஆக வேண்டும்
அவைகள்:
* துக்கம் கேட்க போகும்போது நாம் நம்மை அலங்கரித்துக் கொண்டு செல்லக்கூடாது.
* குளித்துவிட்டு ஈரத்துடன் கர்மா செய்யும் கர்த்தாமீது படாமல் நாம் அங்கு இருக்க வேண்டும்.
* சரீரம் இருக்கும்போது அங்கு செல்லுபவர்கள் உடனே திரும்ப நேரிட்டால் கர்மா துவங்குவதற்கு முன்பே கிளம்பி விடவேண்டும். இல்லையேல் சரீரம் இல்லத்திலிருந்து மயானத்திற்கு கிளம்பிய பிறகுதான் நகர வேண்டும்.
நடுவில் கிளம்புவது உசிதம் அல்ல.
* தீட்டுள்ள இல்லத்தில் (10 நாட்கள்) மற்றவர்கள் எந்த உணவையும் (டிபன், காபி போன்றவை) சாப்பிடக் கூடாது.
* 10 நாட்களுக்குள் (9வது நாள் தவிர) நாள் பார்க்காமல் எந்த நாளிலும் பொதுவாக துக்கம் விசாரிக்கலாம் என்று ஒரு அபிப்ராயம் உண்டு.
ஞாயிறு விசேஷம்.
கணவர் இருந்தால், மனைவியை துக்கம் விசாரிக்க செல்லும்போது, செவ்வாய் வெள்ளிக் கிழமைகளை தவிர்க்க வேண்டும்.
* குறிப்பாக இறந்த நாள் அன்றே சென்று விசாரித்து, தேவைப்
பட்டால் அவர்களுக்கு உதவி புரிவது மிகவும் உன்னதம். அதற்காக தனக்கு தெரியும் என்று காட்டிக் கொள்ளுவதற்காக அங்கு நடைபெறும் வைதிக கார்யங்களுக்கும், மற்றவைகளுக்கும் இடையூறு ஏற்படும்படி நடந்துக் கொள்ளக்கூடாது. இங்கிதமாகவும், பக்குவமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
* “இதுவே அதிகம்” என்று கூறாமல் கர்மாவை வைதிகத்தில் குறைவில்லாமல் நன்கு நடத்துமாறு கர்த்தாவிற்கு எடுத்துச் சொல்லலாம்.
Sarma Sastrigal
Those who like to get a copy may send Rs.250/- drawn in favour of Sarma Sastrigal, flat No.8, Godavari apartments, West mambalam, Chennai 600 033. For overseas buyers it is 10$ including shipping.
No comments:
Post a Comment