வரலக்ஷ்மி, ராவேமா இன்டிக்கி ......................பாக்யாத லக்ஷ்மி பாரம்மா ......................
இந்த வருஷம் வரலக்ஷ்மி நோன்பு 16 ந்தேதி ,ஆகஸ்ட் மாசம் வருகிறது.வழக்கமாக எல்லோரும் முக்கியமாக கொண்டாடும் பூஜை இது .
இந்தப் பூஜை செய்வதற்கு முன்பாக அதாவது செவ்வாய் அல்லது புதன் கிழமையே பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினால் கடேசி நிமிஷ டென்ஷன் இருக்காது.
பரணையிலோ அல்லது பேங்கிலோ இருக்கும் பூஜைக்கான வெள்ளி பாத்திரங்கள் -அம்மன் முகம், சொம்பு ,இவற்றை கொண்டு வந்து, வெள்ளை டூத் பேஸ்ட் கொண்டு துலக்கி வைக்கவும்.
பூஜைக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று லிஸ்ட் போட்டு, அதற்கான படி ஜிப் லாக் பேக்கில் மஞ்சள் கொம்பு/ மஞ்சள் தூள்:குங்குமம்/குங்கும சிமிழ்,பாக்கு,தட்சிணை, தேங்காய் போட்டு வைத்தால் பூஜை அன்று வெத்திலையுடன் ரவிக்கைத் துணி சேர்த்து கொடுக்கலாம்.
வியாழனன்று இழைமாக்கோலம் போட
1.அரிசியை ஊற வைத்து அரைக்கலாம்.
2.அரிசி மாவுடன் தண்ணீர் கலந்து கொள்ளலாம் .
3. மைதா மாவுடன் தண்ணீர் கலந்தும் போடலாம்.
வெள்ளை தரை உள்ளவர்கள் சிறிது மஞ்சள் பொடியோ, குங்குமப் பொடியோ,கேசரிப் பௌடரொ கலந்து கோலம் போடலாம். இன்றைக்கு தயவு செய்து ஸ்டிக்கர் மட்டும் ஒட்டாதீர்கள்.பிறகு செம்மண் இடவும். செம்மண் இல்லாதவர்கள் மஞ்சள் தூளுடன் சுண்ணாம்பு கலந்து இடவும்.
மாவிலைத் தோரணம்.
சாதாரணமாக மாவிலையிலேயே மடித்து துளை போட்டு தோரணம் கட்டுவார்கள்.இன்னும் ஒரு முறை ஸ்டேப்ளர் எடுத்து இலையை மடித்து கயரில் ஸ்டேபில் செய்யலாம்.இது கொஞ்சம் டீசண்டாக இருக்கும்.
அம்மன் முகம்
எப்பொழுதும் ஒரே நகைகளையே அலங்காரம் செய்ய வைத்துக் கொள்ளலாம். கூடுமானவரை நாம் அணிந்து கொள்ளாதவைகளாக இருந்தால் நல்லது.
பட்டுப் பாவாடைக்கு அம்மன் முகத்தை கலசத்துடன் வைத்து அளவுப் பார்த்து துணி வாங்கி தைத்து வைத்துக் கொள்ளலாம் .இதற்கு பட்டு ரவிக்கைதுணியுடன் பார்டர் வாங்கி தைக்கலாம்.இடை முதல் நாளே துவைத்து இஸ்திரி செய்து வைக்கவும்.
ஜடை
ஜடைக்கு நியூஸ் பேப்பரை எடுத்து ஒரு அடி அளவுக்கு மடிக்கவும். அதில் சின்ன சின்ன துண்டாக கத்தரித்த தாழம்பூவை வைத்து ஸ்டேபிள் செய்யவும்.'v 'ஷேப்பில் இங்கொன்றும் அங்கொன்றும் மாக வைக்கவும்.
குஞ்சலம்
கடையில் கிடைக்கும் உல்லனை வாங்கி உருட்டி எடுத்து குஞ்சலமாக உபயோகிக்கவும் அல்லது ரிப்பைனைப் பூமாதிரி செய்து கொள்ளவும்
அம்மனை சிறிது உயரமாக செய்ய வேண்டுமானால் கலசத்துக்கு கீழே சம்படத்தில் அரிசிப் போட்டு வைக்கவும்.
நீங்கள் போட்டுக் கொண்ட நகைகளாக இருந்தால் அதை நன்றாக அலம்பி கலசத்தை அலங்கரிக்கவும்.
காதோலை, மரசீப்பு, கருகுமணி, தட்சிணை,எலுமிச்சம்பழம், காகிதத்தில் பொட்டலம் கட்டிய மஞ்சள் தூள், இவைகளை ஒரு ஜிப் லாக்கில் போட்டு கலச அரிசியுடன் வைக்கவும்.
சுமங்கலிகளுக்கும், கன்னி பொண்ணுங்களுக்கும் வைத்துக் கொடுக்க ரவிக்கைத் துணி, ஸ்டிக்கர் பொட்டு, பிளாஸ்டிக் கூடைகள் மொபைல்பவுச் ,ஹேர் பேண்ட் , ஹேர் கிளிப்ஸ், வளையல்கள், பூஜை தட்டுகள், சின்ன ட்ரேஸ்,ப்ருட்போல்ஸ்,மைக்ரோ கிண்ணங்கள் மூடிப் போட்ட எவர்சில்வர் டப்பாக்கள், ஆரத்தி ,டிபன் தட்டுகள் ஸ்பூன்கள் அகர்பத்தி ஸ்டேண்ட்,ஸ்லோக புத்தகங்கள், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கைக்குட்டைகள், சின்ன டவல்கள்..............இப்படி வரவர்கள் சவுகரியப்படி வாங்கிக் கொடுக்கலாம்.
வயதான சுமங்கலிகளாக இருந்தால் பெரிய எழுத்துப் போட்ட ஸ்லோகப் புத்தகங்கள் கொடுக்கலாம்.
என்ன சமைக்க வேண்டுமோ அந்த மெனுவை முதல் நாளே எழுதி பிரிட்ஜில் ஒட்டி விடவும்,,,, ஊரப் போடுவதிலிருந்து அரைப்பது வரை...சிம்பிள் சமையல் என்றால், மோர் குழம்பு, கத்தரிக்காய் கறி, சுண்டல் சர்க்கரைப் பொங்கல் ....பவர் கட் எத்தனை மணியிலிருந்து எப்ப வரை என்று எழுதி ஒட்டவும்
பூரணத்தை முதல் நாளேக்க கிளறி வைக்கலாம். தேங்காயையும் துருவி பிரிட்ஜில் வைக்கலாம். கொழுக்கட்டைக்கு துணி பார்த்து வைக்கவும்.
முதல் நாள் எல்லா வேலையும் சமையல் அறையில் முடிந்ததும் அடுத்த நாளுக்கு ஊறவைக்க , வறுக்க வேண்டியவைகளையும் வேகவைக்கவேண்டியவைகளையும் தயாராக வைக்கலாம் .
இட்லிதட்டை ரெடியாக வைக்கவும். அடுத்த நாள் குளித்து முடித்ததும் முதலில் வேகவைக்க வேண்டியவைகளை வேகவைக்கவும் , இதற்கு ஏத்தாப்போல குக்கரை எடுக்கவும்.
கொழுக்கட்டைக்கு மாவைக்கிளறி ஈரத்துணியில் வைக்கவும்.
முதலில் நெய்வேதியத்திர்கானவைகளை சமைத்து முடிக்கவும். கொழுக்கட்டை, இட்லி இவைகளை ஒத்தப் படை எண்ணில்எடுத்து வைத்து மீதியைப் பிறகு செய்யலாம்.
கொழுக்கட்டைக்கு பூரணம் -சொப்பு மாவை சரி சமமாக உருட்டி வைத்தால் ஒரே மாதிரி வரும்.பூரணம் மீந்து விட்டால் அடுத்த நாள் பரோட்டவோ, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவோ, பாயசமாகவோசெய்துக் கொள்ளலாம்.
சுண்டல் வடை, பொங்கல் இவற்றை வருபவர்களுக்குக் கொடுக்க டிஸ்போசபில் கப்,டம்ளர் தொண்ணை, ஜிப்லாக் கவர்ஸ் ரெடியாக வைக்கவும் .
முதல் நாளே விரத பூஜா விதானம் புஸ்தகத்தை படித்து பூஜைக்கு என்ன என்ன வேண்டுமோ தயாராக வைக்கலாம். கேசட் கேட்பவர்கள் ஒரு முறைக் கேட்கவும். எதற்கும் புஸ்தகத்தையும் ரெடியாக வைக்கவும், யார் கண்டா, கரண்ட் இருக்குமோ இல்லையோ.
காலையில் எழுந்ததுமே பக்தி பாடல்களை ஒலிக்கவும்.வீட்டிற்கு வெத்திலைப் பக்கிற்கு வருபவர்களுடன் நல்ல விசயங்களைப் பற்றி பேசவும். வந்தவர்களைக் கதவு வரை போய் விடவும்.
புடவை, ஒம்பது கஜம் மடிசார் கட்டுபவர்கள் முன் கூட்டியே ஒரு ட்ரயல் செய்வது நல்லது. கேமராவை சார்ஜ் செய்து வைக்கவும், அம்மன் அலங்காரத்தையும், பூஜை முடிந்ததும் போட்டோ எடுத்தால் அடுத்த வருஷம் ஈசியாக போகும் . நீங்களே உங்கள் முதுகைத் தட்டிக் கொடுக்கலாம்!
jadaikku, getti vazhai naar eduthu, pinnal pola pinni vythukondal, adu mela thazhambu vaithu mudalil thaithuvittu, adukum mela kanakambaram, malli, marukozhundu endru mathi mathi vaithu thaithal azhagana jadai pudusaga thaithadu polave irukkum. Ovvoru varushamum, kayndu pona poovai mattum pitchi pottu vittu, vazhai naar mela pudu poo vaithu thaithu kollalam.
ReplyDeleteHemalatha Vishwanathan