Wednesday, July 17, 2013

"எங்கள் தெய்வம்...இவர்தான்...காஞ்சி மகான்

ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த எழுத்தாளர்மணியன். பிற்காலத்தில் தனக்குச் சொந்தமாக-இதயம் பேசுகிறது என்கிற பத்திரிகையைஆரம்பித்தார்.அந்தப் பத்திரிகையில் அவர் வெளிநாட்டுக்குச்சென்று இருந்தபோது நடந்த ஓர் அற்புதமான விஷயத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார். எந்தநாட்டிற்குப் போனாலும் அவர் தங்கும் அறையில்இருக்கும் மேஜை மீது காஞ்சி மகானின் படத்தைவைத்து, தினமும் வணங்குவது வழக்கம். அவர் அப்போது தங்கி இருந்தது ஓர் ஆங்கிலேயரின் வீடு.

வீட்டின் சொந்தக்காரர், மணியனிடம் "படத்தில் இருப்பவர் யார்?" என்று கேட்டுஇருக்கிறார். "அவர் நான் வணங்கும் தெய்வம்"என்று பதில் சொன்னார் மணியன்.
"சக்தி வாய்ந்த தெய்வமா அவர்? நாம் நினைத்தது நடக்குமா? என்று ஆங்கிலேயர் ஒரு வினா எழுப்ப அதற்கும் மணியன் பதில் சொன்னார்.

"நாம் உண்மையாக வேண்டிக் கொண்டால்,நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும். அந்தகருணைக்கடல் அதை நிறைவேற்றி வைப்பார்.

மணியன் சொன்ன தோரணை,அவர் குரலில்ஒலித்தபக்தி, ஆங்கிலேயரை நம்பச் செய்தது.

"என் மகன் எங்கோ போய்விட்டான்...அவனைப் பிரிந்து என் மனைவி ஓயாமல் அழுது கொண்டு இருக்கிறாள். அதனால்தான் ஒரு நம்பிக்கையோடு உங்களிடம் கேட்டேன்.

"எங்கள் குருவான காஞ்சி மகானை நீங்கள் மனமுருகிபிரார்த்தியுங்கள்..உங்களுக்கு அவரது அருள் நிச்சயம் கிட்டும்.

மணியன் வாக்கை அப்படியே ஏற்றுக்கொண்டஆங்கிலேயர், காஞ்சி தெய்வத்தின் படத்தின்
முன் நின்று மனமுருகி வேண்டி தனக்குஅருள் புரியும்படி வேண்டிக் கொண்டார்.

சில மணி நேரம் கடந்ததும், அவரது வீட்டுபோன் ஒலித்தது.ஆங்கிலேயர் போய் போனைஎடுத்தார். போனில் வந்த செய்தி அவருக்கு அளவு கடந்த வியப்பை அளித்தது.

காணாமற்போன அவரது மகன்தான் பேசினான்,தான் எங்கேயோ பொயிருந்ததாகவும்,
இப்போது ஊருக்கு வந்துவிட்டதாகவும்,உடனேவீட்டுக்கு வருவதாகவும் தகவல் சொன்னான்.
ஆங்கிலேயருக்கு மெய் சிலிர்த்தது.காஞ்சி மகானைவணங்கியபடியே,மணியனுக்கு நன்றி சொன்னார்.

"எங்கள் தெய்வம்...இவர்தான்....இந்த உருவில்தான்தெய்வத்தைப் பார்ப்போம்" என்று கடல் கடந்துஎங்கேயோ இருந்த ஆங்கிலேய தம்பதிகள்  ஆனந்த அனுபவத்தில் உருகி நின்றார்கள்.
 

No comments:

Post a Comment