Friday, July 26, 2013

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) வேதம் - வேத பாஷ்யம்



அர்த்தம் தெரியாமலே வேதத்தை அத்யயனம் பண்ணி அந்த சப்தத்தை ரக்ஷித்து வந்தாலும் போதும், மந்திர சக்தி வாய்ந்த அந்த சப்தமே க்ஷேமத்தைக் கொடுத்து விடும்;அர்த்தம் தெரியாமலும், 

ஒரு நம்பிக்கையின் பேரில் வேதாத்யயனம் பண்ணுவதுதான் வீர்யவத்தரம் - என்றெல்லாம் நடுநடுவே சொல்லியிருக்கிறேன். அதனால் அது தான் என் பூர்ணமான அபிப்ராயம் என்று அர்ததமில்லை! வேதத்துக்கு அர்த்தம் தெரிந்து கொள்வதென்றால் அதற்கு ஏகப்பட்ட காலம் படிக்க வேண்டியிருக்கிறது. அத்யயனத்துக்கு அப்புறமும் இத்தனை வருஷம் ஒருவனைப் பாடசாலையில் கட்டிப்போடுவது என்றால் சிரமம்தான். 

அதனால்தான் அர்த்தம் தெரிந்துகொண்டுதான் வேதாத்யயனத்தை ரக்ஷிக்க வேண்டும் என்றால் ரொம்பப் பெரிசாக எதிர்ப்பார்த்து அடியோடு ஒன்றுமே நடக்காமல் போய்விடப் போகிறதே, அத்யயனத்துக்குக்கூட யாருமே வராமல் போய்விடப் போகிறார்களே என்று நினைத்து பாதி ஸீரியஸாகவும், பாதி விளையாட்டாகவும், 'அர்த்தமே வேண்டாம்; (வேத) சப்தமே போதும்'என்று சொல்லி வந்தேன். 

வாஸ்தவத்தில், சப்தத்தை மட்டும் ரக்ஷித்துத் தருகிறவர்களாவது நிறைய இருக்கவேண்டும்;அதோடுகூட வேத மந்திரங்களுக்கு அர்த்தத்தையும் தெரிந்து கொண்ட சிலராவது இருக்கும்படியாகவும் பண்ணத்தான் வேண்டும். இதனால்தான் வேதபாஷ்யத்தில் ரொம்பவும் அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

வேதத்துக்கு விசேஷமான அர்த்த கௌரவம் இருப்பதால்தான் அநேக மஹான்கள் அவற்றுக்கு பாஷ்யம் என்கிற பேரில் விரிவாக அர்த்தம் (உரை) எழுதியிருக்கிறார்கள். அவை வீணாகப் போகவிடலாமா?

நாம் நம் அகங்களில் விவாஹம் முதலான பல காரியங்கள், சிராத்தம் முதலான பித்ரு காரியங்கள், இன்னம் சில ஹோமங்கள், ஆவணியவிட்டம் (உபாகர்மம்) முதலான வைதிக காரியங்கள் என்று பலவற்றைப் பண்ணுகிறோம். இவற்றின்போது வாத்தியார் சொல்லிக் கொடுக்கிற மாதிரி அநேக வேத மந்திரங்களைச் சொல்கிறோம். 

அடியோடு இந்தக் கர்மாக்களை விட்டுவிடுகிற துர்பாக்கிய ஈச்வராநுக்ரஹத்தில் இதுவரை ஏற்படவில்லை. ஆனாலும் முன்னைக்கு இப்போது தினந்தினமும் கர்மாக்கள் க்ஷீணித்துக் கொண்டுதான் வருகின்றன. இதற்கு ஒரு முக்யமான காரணம்,

 சொல்கிற மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாததுதான். அர்த்தம் தெரியாமலே, வாத்தியார் சொன்னதை ஒப்பிக்கிறது என்றால் இந்தக் காலத்தில் படிப்பாளிகளாக இருக்கப்பட்ட நாகரிகக்காரர்களுக்கு அதிலே ஈடுபாடு இருப்பதில்லை. அர்த்தம் தெரியாவிட்டாலும், சிரேயஸ் என்ற நம்பிக்கையோடு சிரத்தையை இந்தக் காலத்தில் எதிர்ப்பார்க்க முடியாது. 


வாஸ்தவத்திலும், ஒவ்வொரு சடங்குக்கும் வெவ்வேறு மந்திரம் இருப்பதாலேயே அததற்கும் பொருத்தமான அர்த்தத்தோடுதான் அவை இருக்கின்றன என்று ஆகிறது. அந்த தாத்பர்யத்தைப் தெரிந்து கொண்டால், அவற்றில் பலவற்றுக்கு scientific basis (விஞ்ஞான பூர்வமான ஆதாரம்) இருப்பதாகத் தெரிகிறது; இன்னும் பல மந்திரங்களுக்கு emotional appeal (உணர்ச்சி பூர்வமான கவர்ச்சி) இருப்பது அவற்றுக்கு அர்த்தம் தெரிகிறபோதுதான் வெளியாகிறது.

 இப்படி அர்த்தம் தெரிந்தால் ஈடுபாடு உண்டாகிறது. இதனால் தான் ஈடுபாடே இல்லாமல் மொண மொண என்று எதையாவது சொல்வதை 'திவச மந்திரம்' என்றே சொல்கிற வழக்கம் வந்துவிட்டது. ஆகையால், இனிமேலாவது திவஸ மந்திரம் உள்பட எல்லாவற்றுக்கும் அர்த்தம் தெரியும்படியாகப் பண்ண வேண்டும். 

எப்படிப் பண்ணுவது?முதலில் வாத்தியாருக்கு அர்த்தம் தெரிய வேண்டும். இப்போது பெரும்பாலான வாத்தியார்களுக்கே அர்த்தம் தெரியவில்லை. ஒரு கர்த்தா அல்லதுயஜமானன் 'பண்ணி வைக்கிற' வாத்தியாரை, "இதன் அர்த்தம் என்ன?" என்று கேட்டால் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. இப்படியிருந்தால், பண்ணுகிறவனுக்கு சிரத்தை எப்படிக் குறையாமல் இருக்கும்? 

இன்றைக்கு உள்ள பல நடுத்தர வயசுக்காரர்களுக்கு, "நாம் சொல்லும் மந்திரங்களுக்கு அர்த்தம் என்ன?" என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கிறது என்றே எனக்கு நம்பிக்கை. 

அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளாமல், வெறும் சப்தத்தைக் கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிக்கிறது என்பதாலேயே அவர்களுக்குக் கர்மாவில் சிரத்தை குறைகிறது என்பது நம் அபிப்ராயம். ஆதலினால் வைதிக விருத்தியை ஹிந்து மதத்தின் ஆதாரப் புஸ்தகங்களில், வேதத்துக்கு அடுத்தபடியாக வருவது வேதத்தின் ஆறு அங்கங்கள். வேதத்தை ஒரு மூர்த்தியாகச் சொல்லும் போது அந்த வேத புருஷனுக்குப் பல அங்கங்கள் இருக்கின்றன.

 வாய், மூக்கு, கண், காது, கை, பாதம், என்ற ஆறு அங்கங்கள் இருக்கின்றன. இவற்றை "ஷட் (ஆறு) அங்கம்","ஷடங்கம்"என்று சொல்லுவார்கள். சடங்கு என்று சொல்லுவது அந்த வார்த்தையிலிருந்து மருவி வந்ததுதான். 

"வேதமோ (டு) ஆறு அங்கம் ஆயினான்"என்று தேவாரம் சொல்லும் ஆறு அங்கம் ஷடங்கமே. 

No comments:

Post a Comment