Monday, June 10, 2013

பெரியவா...என்.சி.வசந்தகோகிலம்


ஒருமுறை, என்.சி.வசந்தகோகிலம்என்ற புகழ்பெற்ற பாடகி, மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். ஒரு கச்சேரிக்கு போய் பாடிய கைய்யோடு, அங்கிருந்து நேராகக் காஞ்சிபுரம் வந்திருந்தார். கச்சேரி செய்ததற்க்கு கிடைத்த் ஆயிரம் ரூபாயை பெரியாவா முன் வைத்து விட்டு நமஸ்காரம் செய்தார். ஆயிரம் ரூபாய் அந்த கால்த்தில் பெரிய தொகை. அவருக்கு ஆசி வழங்கிய பெரியவா அந்தத் தொகையை என்ன செய்தார் தெரியுமா?

அங்கே பக்கத்து நிலத்தில் உழுது கொண்டிருந்த அத்தனை குடியானவர்களையும் வரச் சொன்னார். ஆயிரம் ரூபாயையும் அவர்களுக்கு சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டார். குடியானவர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! பணம் கிடைத்தது மட்டுமல்ல.... மகா பெரியவாளின் ஆசியோடு கிடைத்த பணம் என்பதே அதற்குக் காரணம். 

No comments:

Post a Comment