திருச்சியிலிருந்து கணபதி என்ற பக்தர்,தன் பெற்ரோருடன்
மகானை தரிசிக்கப்போனார்.அவருக்கு வேலை கிடைப்பது
பெரும் பிரச்னையாக இருந்தது.மகானிடம் அதைச் சொன்னார்.
கணபதியிடம், திருச்சியில் என்னென்ன பெரிய பாங்குகள்
இருக்கின்றன என்று கேட்டு இருக்கிறார் மகான். கணபதியும்
சொன்னார்.
சில நாட்கள் கழித்து இரண்டு இடங்களில் வேலைக்குச்
சேரும்படி கணபதிக்கு ஆர்டர் வந்தது. சென்னையில் ஒன்று-
திருச்சியில் ஒன்று- சென்னை வேலை நிரந்தரம். திருச்சியில்
தற்காலிகமானது. குழம்பிப்போன கணபதி இதற்கும்
மகானை அணுகி யோசனை கேட்டார்.
"திருச்சி பாங்க் உத்யோகத்தில் போய்ச் சேர்"
இந்த பதிலும் கணபதிக்கு நெடுநேரம் பெரியவா தரிசனத்திற்குப்
பிறகு 4 மணிக்குக் கிடைத்த உத்தரவு.தற்காலிகமான பாங்க்
உத்தியோகத்திற்குப் போகச் சொல்கிறாரே மகான் என்று
மனத்தில் கலக்கத்தோடு பாங்க் உத்தியோகத்திற்குப் போனார்.
இது லீவில் போய்விட்டவருக்கான உத்தியோகம். அவர்
திரும்பவும் வந்து உத்தியோகத்தில் சேர்ந்துவிட்டால் கணபதி
வீட்டிற்குத் திரும்ப வேண்டியதுதான்!
ஆனால் நடந்தது என்ன?
லீவில் போனவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
அதன் பலனாக அந்த நல்ல பாங்க் வேலை கணபதிக்குக்
கிடைத்தது.
கருணை வள்ளலான மகானின் தீர்க்க தரிசனத்தை எண்ணி
ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கணபதி. உள்ளன்போடு அணுகி
பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மகானிடம் ஏமாற்றம்
அடைய மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.
அதில் இதுவும் ஒன்று.
No comments:
Post a Comment