' டேய் ,என்னடா? எதாவது தெரிஞ்சதா?'
''இல்ல சார் , நானு, நம்ம பசங்க எல்லாரும் இங்கயே சுத்திக்கிட்டு தான் இருக்கோம் சார்''
அவன் மட்டும் வந்தா ஒரே போடு போட்டு, எனக்கு சொல்லுங்க',தெரிஞ்சதா, இல்லன்னு மட்டும் சொன்னீங்க நடக்கறதே வேற.'
சார் ,ஒரு கார் வருது, என்ன காரு அது..... சேண்ட்ரோ , நல்ல வேலை நம்ம காரு இல்ல, ரெண்டு பொண்ணுங்க கூடவே புர்கா போட்ட ஒரு பொண்ணும் ,ஒரு ஆம்பிளையும் வராங்க சார், '
'டே, நீங்க எங்கடா நிக்கறீங்க, நான் சொன்ன ரெஜிஸ்தரார் ஆபீஸு முன்னாலத்தானே நிக்கறீங்க?
ஆமாம் சார்,
ஒரு பதினைந்து நிமிடம் கழித்து, திரும்ப கால், 'டே என்னடா, முஹுர்த்த நேரம் போயிடுத்தே, வந்தாளாடா என் மக ?' சரியாப் பாத்தீங்களாடா ?'
நல்லா கண்ணுல எண்ணையை விட்டுட்டுத் தான் பாக்கரோம்சர்'...
சார் லைன்ல இருங்க சார் ஒரு கும்பலு வெளியே வருது... சார், இப்ப ஆபீசுலேந்து ஒரு ஜோடி வெளியில வருது சார், பையன் ரெட் கலர் டி சர்ட்டும் .... என்னது, அந்த புர்கா பொண்ணு புர்காவோட அங்கியைக் கழட்டுதே.....அட இந்தப் பொண்ணு ...எங்கேயோப் பாத்த மாதி ....ரி.......இருக்கே......ஐயோ, சாரு மோசம் போய்ட்டோம் சாரு ... அந்த புர்காப் பொண்ணு உங்க மக மஹா........வேத்தான் ........'

சொல்லிட்டு போனைக் கீழேப் போட்டுட்டு அந்தப் பொண்ணுப் பின்னாடி தலைத் தெறிக்காமல் ஓடினாங்க.....
No comments:
Post a Comment