Thursday, February 7, 2013

பேசும் பச்சை புஷ்பங்கள்

செல்வராகவனுக்கு இதை விட்டால் நல்ல நேரம் கிடைக்காதுன்னு ,சமயம் பார்த்து பொஞ்சாதி கஸ்தூரியிடம் ரொம்ப நேரம்யோசிச்சு கேட்டான்.

'எல புள்ள கச்சூரி ,'நீ என்னலாதான் சொல்லுத? 

'நா என்னத்த சொல்லுது?'

'ஒன்னுல ரண்டுன்னு சொல்லிப்போடு பொம்பள ,இல்லாகாட்டி, கைக்கு வந்தது வாய்க்கு கிட்டாதுள்ள'

'நாத்தான் சொல்லிப் புட்டன்ல,அந்த பெருமாள் சாமி சரின்னாதான் அடுத்தாப்ல நானு காலை எடுத்து வைப்பேன்'

'அப்ப வா, கொஇலாண்டப் போயி சகுனம் பாத்துப் பிடுவோம் '

'நானு இப்ப ஜோலிப் பாக்குது, அப்பால வாறேனுங்க '

மனசுக்குள், 'இது என்ன எளவாப் போச்சு, இந்தக் கைனாட்டக் கட்டிக்கிட்டு பேஜாரா இருக்குல ராசா '

'ஏலே ராசா,இங்க வாலே  கொஞ்சம் எங்கூட பெருமாள் சாமி கோயில் வரக்கட்டி வாலே '

**                                                 **                                                               **

எலேய்,வாலே, நேரம் ஆவுது அப்பாலே கோயிலு கதவை அடைசிடுவாணுக '

கஸ்தூரி, செல்வா ரெண்டு பெரும் ஜோடிக் கட்டிக்கிட்டு கொஇலாண்டப் போயி அங்கன இருக்கரப் பூஜாரிக்கிட்ட  அர்ச்சனை செஞ்சு பூ கொடுக்க சொன்னாருங்க '

'ஏலே ,நல்லா சகுனம் பாத்துக் கலே , வெள்ளப் பூ வந்திச்சின்னா பொறவு யோசிப்போம், சோப்பு கலர் வந்திச்சின்னா வெனவே வேணாம்,பச்சகலர் கொடுதாருன்னா  பழம், பேசாம வேலையை முடிச்சுட வேண்டியது தான், என்ன சரியாலே?.'

'என்ன பூம் பூம் மாடு மாதிரில்ல மண்டைய ஆட்டுத ?, வாய தொறந்து சொல்லு புள்ள.'

'சரிங்கா ,எனக்கு சம்மதங்க'சாமி சொல்லிச்சுன்னா, நானு யாருங்க எடையில நிக்குதுக்கு?'

'பூசாரி கிட்ட கொஞ்சம் சகுனம் பாக்கணும், புஸ்பம் தரீகளா சாமியோவ்"

அதுக்கென்ன, பேஷா, இந்தாங்க ,தொளசி'


'அட, பச்சை கலரே வந்திச்சிங்க , அப்ப நீங்க தொலவாலேப் போயி ஆட்களை கூட்டிட்டு வாங்க,'

'அம்மாடி, பெருமாள் சாமி, நீங்க ரொம்ப வருஷம் நல்லா இருக்கோணும் மவராசனா!'நானு இந்தவச தொப்ப்துக்கு பத்தாயிரம் நங்கொடை கொடுக்குதேன் '

செல்வராகவனுக்கு இருக்கும் சந்தோசத்துக்கு அளவே இல்ல , பொஞ்சாதி பேர்ல இருக்கற அஞ்சு க்ரவுண்டு  நிலத்துல 100 வீடுக் கட்டடம் கட்ட பில்டருங்க வண்டு அலையா அலையறானுக, கச்சூரிய சம்மதிக்க சொல்லக் கூடி இம்மா பாட்டு,.

ஆமா, இதுல என்னக் கத  சொல்லிபுட்டீகன்னு கேக்க வாரீகலாக்கும்?

ஐய்ய , கச்சூரிய சம்மதிக்க சொல்லக் கோடி , கொஇலாண்டப் போயி அந்த  பூசாரிக்கு விளக்கி அவரை தொளசியக் கச்சூரி க்  கைலக் கொடுக்கச் சொல்லி ஒரு பெரிய நோட்டை வச்சு அமுத்தினா நாக்கோம் .

 எல்லாம் அந்த பேசும் பச்சை புஷ்பங்கள் 

No comments:

Post a Comment