Thursday, January 31, 2013

காஞ்சி மகாபெரியவா..



மகாபெரியவா அருள்வாக்கு :-

" சங்கர பகவத்பாதர்கள் பக்தியின் லக்ஷணத்தை சிவானந்த லஹரியில் இவ்வாறு வர்ணித்திருக்கிறார்:

"அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக் கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப் படுகிறதோ, பதிவிரதை எப்படி தன் பதியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ, அப்படியே பசுபதியின் பாதாரவிந்தங்களில் எக்காலமும் மனத்தை அமிழ்த்தியிருப்பதுதான் பக்தி என்பது. 



சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி
விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டு, நிர்மாணப் பணிகள்
நடைபெற்று வந்த சமயம்.1993-ம் வருட ஆரம்பம்.

தரிசனத்துக்காக தினமும் ஏராளமான பக்தர்கள்
வந்து சென்றனர்.

அப்போது ஒரு நாள் காஞ்சி மகா ஸ்வாமிகளைத்
தரிசித்து ஆசி பெறச் சென்றிருந்தேன். ஸ்வாமிகளை
நமஸ்கரித்து எழுந்தேன்.ஸ்வாமிகளுக்கு என்னையும்
ஆஞ்சநேயர் ஆலய நிர்மாண விஷயமும் நன்றாகவே
தெரியும்,ஆதலால், "க்ஷேமமா இரு.இப்பவே நெறய
கூட்டம் வரதா இங்கே வரவாள்ளாம் சொல்லிண்டிருக்கா.
பெரிய ஆஞ்சநேயரோன்னோ..அதான் அப்படி ஒரு
ஆகர்ஷண சக்தி இருக்கு!" என்று ஆசீர்வத்த்துவிட்டு
"பெரிய ஸ்வாமி ஆச்சே....அவர் சாப்பிடறதுக்கு தினமும்
நெறய நிவேதனம் பண்ணணுமே?" என்று கவலையுடன்
கேட்டார்.

உடனே நான், "தினமும் ஒரு மூட்டை அரிசி வடிச்சு
நிவேதிக்கிறோம்" என்றேன்.

"சுத்த அன்னமாகவா?"

"இல்லே பெரியவா... சித்ரான்னங்களா [கலந்த சாத வகைகள்]
தயார் செய்து நிவேதனம் பண்றோம்."

"என்னென்ன பதார்த்தங்கள் பண்றேள்?"

"காலையில் இருந்து வெண்பொங்கல்,சர்க்கரைப் பொங்கல்,
புளியோதரை,மிளஹோரை,தயிர்சாதம்னு 
மாத்திமாத்திப் பண்றோம் பெரியவா."

"அவ்வளவையும் வாங்கிக்க நெறய பக்த ஜனங்கள் வராளோ?"

"அபரிதமான கூட்டம் வர்றது பெரியவா.அத்தனை
பிரசாதமும் செலவாயிடறது" என்றேன் நான் பெருமையுடன்.

பெரியவா சற்று மௌன்மாக இருந்துவிட்டு, "பிரசாதங்களை
எப்படிக் கொடுக்கறேள்? துளிப் போறமா,இல்லை நெறயவா?"
என்று கேட்டார்.

நான் மிகப் பெருமையாக ஸ்வாமிகளிடம், "கையிலே
வாழையிலையைக் கொடுத்து வாரிக் கொடுக்கறோம்
பெரியவா" என்றேன்.

உடனே ஸ்வாமிகள், "அதை நானும் இங்க வர்றவா மூலம்
கேள்விப்பட்டேன். அதிருக்கட்டும், உன்னை ஒண்ணு
கேக்கறேன். ஸ்வாமி பிரசாதத்தைத் துளியூண்டு,
பிரசாதமா கொடுக்கிறது சரியா...இல்லே சாப்பாடு மாதிரி
நெறய்யக் கொடுக்கறது சரியா?" என்று கேட்டார் ஆர்வமுடன்.

No comments:

Post a Comment