எங்கள் குடும்பத்தில் பாட்டி ( அப்பா வழி) பெரியப்பா, பெரியம்மா, அவர்களுடைய 4 பிள்ளைகள். என்னுடைய அப்பா, அம்மா நாங்கள் ஒரு ஐந்தாறு பேர் ,அப்புறம் சில சமயம் அத்தை ,அவரோடப் பசங்கள் மூன்று பேர்.இந்தக் கும்பல் எப்பொழுதுமே முழுவதாக இருந்ததில்லை ,கூட்டல் கழித்தல் இருக்கும்.
இப்ப நினைச்சுப் பாத்தா தான் தெரியறது ,பண்டிகைன்னும்போதோ, இல்ல ஒரு விசேஷம்னு வந்தாலோ வேலைக்கு அஞ்சறதில்லை , எவ்வளவு வேலை இருந்தாலும் இழுத்துப் போட்டுண்டு செய்யத் தோணறது. இதுக்குக் காரணம் கூட்டுக் குடும்பமே .
பண்டிகை எப்ப வரும் அப்பத்தான் ஸ்பெசல் ஐடம்ஸ் கிடைக்கும், நாக்கைத் தொங்கப் போட்டுண்டு உட்கார்ந்துண்டு இருப்போம்.
பண்டிகைக்கு முதல் நாளே வீடு திமிலோகப் படும் .அடுத்த நாளைக்கு கிச்சனை ரெடி பண்ணனும்.விறகு அடுப்புன்னா ,மொழுகின அடுப்பை எடுத்து கோலம் போட்டு ,விறகு கட்டை , விரட்டி எல்லாம் வச்சு ,மேடையை அலம்பி கோலம் போட்டு, சாதம் வைக்கிற வெண்கலப் பானையை தேச்சு , மேடையிலேயே வச்சு, கீழே அலம்பி தொடச்சு வைக்கணும் . சாதம் கொழம்பு மீதி இருந்தால் அடுத்த நாளைக்கு பழைய சாதம் வைக்கற இடத்துலக் கொண்டுபோய் வைக்கணும்.பூஜ ரூமையும் பெருக்கி துடைச்சு கோலம் போட்டு வைக்கணும்.
எங்கள்ள யார் 'மடி'க்கட்டிக்கணுமோ அவாளோடைய துணி 'மேல'க் கொடியில ஏறணும் . சில சமயம் புத்தி வக்கிரம் ஆகி கொக்கிற குளம் போகும் அப்போ அந்த ட்ரஸ் பரவாயில்லன்னா சரி இல்லன்னா தோச்சதிலிருந்து ட்ரெஸ் கொடியில ஏறும், அதுவும் பாட்டிக் கண்ணுக்குத் தெரியாம. அதுக்கு ஒருத்தர் 'வாச் டாக் '.நாங்க இப்டியெல்லாம் பண்ணினாலும் எங்க' கமாண்டர் இன் சீபு'க்கு மூக்கில வேர்க்கும்!
பிடிக்காதது காலங்கார்த்தால எழுந்துக்கறது,ஆனா எழுந்துக்கறது தான் தெரியும்,அதுக்கப்றம் ஒன்னுமேத் தெரியாது, ரெட்டைக் கொழந்தைப் பிறக்கறப்போ எப்படி ஒன்னு மத்ததைத் தள்ளிண்டு வருமோ அந்த மாதிரி ஒரு வேலை பின்னாடி இன்னொன்னு வந்துண்டே இருக்கும், அதுவும் பாட்டி சூபர்வைஸ் பண்ணினாலோப் போச்சு! இடுப்பு வளைஞ்சு ஒடிஞ்ஜேப் போயிடும்.நாங்க அவளுக்கு கமாண்டர் -இன் சீப் (commander -in chief )நு பேர் வச்சிருக்கோம் .சில சமயம் வரதே தெரியாம பூனை மாதிரி வந்துப் பாப்பாள் .
இப்போ பூஜைக்கு ஒருத்தரை டெலிகேட் பண்ணுவா, அவ பூஜைரூம்லப் போயி, பூ, பழம், வெத்திலை, பாக்கு , மத்த இதர சாமான்களை எடுத்து வச்சு விளக்குலத் திரிப் போட்டு எண்ணெய் விட்டு ஏத்தி ,தயார் பண்ணனும்.
இன்னொருத்தர் , காய்கறி நறுக்கி, குப்பை பொருக்கி, ரூமை பெருக்கி மொழுகணும் .
'மடிக்' கட்டினவா கிச்சனை விட்டு வராம, அங்கேயே இருந்து, கூட மாட சாமான்களை எடுத்துக் கொடுத்து, தண்ணிப் பிடிச்சு, தொவையல் அரைக்கறது, கொழுக்கட்டைப் பிடிக்கறது, வடைக்கு அரைக்கறதுன்னு வேலைப் பண்ணணும் .
அதுல என்ன ப்யூட்டின்னா , நாங்கப் போட்டுண்டு இருக்கரப் பாவடையை இப்போ லுங்கிக் கட்டிகரவா மாதிரி சைடுலேந்து எடுத்துத் தூக்கி நடுவுலக் கொண்டு வந்து முடிச்சுப் போட்டுண்டு , யார் மேலயும் படாத மாதிரி கட்டிப்போம் .வேணும்னே குறுக்க நடுக்க போயிண்டு, 'ஏய் ஏன் மேலப் படாதேன்னு' சொல்லிண்டு திரியுவோம். இதுல கொஞ்சம் எடம் கொடுத்து வடைத் தட்டச் சொன்னா , அந்த வட யார் தட்டுலப் போறதுன்னு வேறப் பாப்போம்.அதோட ஷேப்பே சொல்லிடும் !ஆஸ்திரேலியா மேப் மாதிரி .
பூஜ முடிய ஒரு மணியாயிடும்,வயத்துல ரேடியோப் பாட ஆரம்பித்து விடும். காத்தால பழையது இருந்தால் அதுல எல்லோரும் ஒரு பிடி பிடிப்போம், ரசமோ, மோரோ பிசைந்து சாப்பிடுவோம். இப்ப மாதிரி ஓட்ஸ் கஞ்சில்லாம் கிடையாது. எப்டிதான் அம்மா ,பெரிம்மா எல்லாம் பட்னியோட அவ்ளோ பேருக்கு சமச்சாளோ தெரியாது?
எப்படா பூஜமணி அடிக்கும்னு காத்துண்டு இருப்போம்,அதுக்குள்ள ரெண்டு பேர் இலையோ, தட்டோ போட்டு டம்ளர் எடுத்து வைக்கணும் மொதல் கடப் பந்திக்கு.
கற்பூரம் காட்டினதும் தான் வயறுக் கொஞ்சம் சமாதானம் ஆகும். "வண்ணா வீடு எங்கே? இன்னும் கொஞ்சம் தூரம் "கதை மாதிரி.
ஒருத்தர் திரும்ப பூஜ ரூமுக்குப் போயி மொதல் நாள் நிர்மால்யம் எடுத்து, பூஜப் பாத்திரம் எடுத்துத் தேய்க்கப் போட்டு, ரூமுல கீழ சிந்தியிருக்கற தண்ணியத் தொடச்சு , எல்லாத்தையும் ஏறக் கட்டிட்டு வரணும்.
இதுக்குள்ள சமையல் செஞ்ச பாத்திரங்கள வெளியிலக் கொண்டு வந்து அதுல நாங்க' கொழப்பரா மாதிரி' இருக்கறதையும் , பூஜப் பாத்திரத்தையும் தேய்ச்சுப் போடணும்.
புருசப் பசங்களுக்கெல்லாம் ஜாலி தான், அவ்வளவா வேலைக் கிடையாது. இருந்தாலும் டம்ளர் வச்சு தட்டுப் போட்டு இனிஷியலா பரிமாறுவா .
சில சமயம் நாங்களே கூடப்பரிமாறுவோம் அப்ப வடை போடும் போது சீக்ரமா சாப்பிட மாட்டோமான்னு தோணும். .
அப்டியும் திருட்டுத்தனமா வாயில ஒரு துண்டு போனதுண்டு. (இதுக்காகவே மடிக்கட்டிக்கப் போட்டி!)
சரி எல்லாரும் சாப்பிட்டானதும் , கிச்சன்ல மிச்சம் மீதி இருக்கிறதை சின்ன பாத்திரத்துலே கொட்டி, பெரிய,சமைச்ச பாத்திரத்தை தேய்க்கப் போடணும்.
வேலைக்காரி தேய்கிறது இல்லாமல் , கச்சட்டி, பீங்கான் ஜாடி, ஈயச்சொம்பு கரண்டி எல்லாம் நாங்கள் தான் தேய்க்கணும்.
எச்சை இலைகளை ஒருத்தரும் சாப்பிட்ட இடத்ல இருக்கிற சோத்துப் பறுக்கை,கறிவேப்பிலை, மிளகாய் குப்பைகளை ஒருத்தர் பொறுக்கணும்.
அப்பறம் 'சுத்தி' பண்றது ஒருத்தர், கடைசியில தொடைக்கிறது ஒருத்தர்.
இதுல சுத்தி பண்றதுக்கு யாருமே தயார் கிடையாது, ஏன்னால் கை அழுக்காகிடும், அதுவும் ரெண்டாவது பந்தியில சாப்பிடப் போறோம்னா மொதலுக்கே மோசம். எச்ச வாசனை (? )அடிக்கும்.
தொடைக்கிரவாளுக்கு ஒரு அட்வான்டேஜ் ,நிந்துண்டேத் தொடைக்கலாம் 'ப்ரொவைடெட்' பாட்டி ஜன்னல் வழியா பார்க்கலைன்னா !
இதுக்குள்ளே பெரிய மன்னி ( பெரிமா ) சாமி ரூம்லப் கும்பகர்ணன் கிட்ட டிக்கட் வாங்கப் போயிருப்பா. அவள் தான் வீட்டில் முதலிலேயே எழுந்திருப்பது, நாள் கிழமைன்னு கிடையாது, சனி ஞாயிறுன்னும் கிடையாது. 'ஆல்வேஸ் பஸ்ட் '
இதற்குள் புருஷர்கள் அவர்கள் ரூமிலேப் போயி தூங்கத் தயார் ஆகி இருப்பார்கள் . என் அப்பாவிடமிருந்துத் தப்பிக்கவே நாங்கள் சும்மா குறுக்க நடுக்க நடமாடிண்டு இருப்போம்.இல்லன்னா எங்களைக் கோழி அமுக்கரா மாதிரி அமுக்கி அந்த இருட்டு பண்ணிய ரூமுல பலவந்தமா படுக்கச் சொல்வா , அப்பா என்ன வேலை சொன்னாலும் பண்ணுவோம்.
நாங்க அந்த ரூம்லத் தூங்காம இருக்கறதுக்கு நிறைய காரணம் இருக்கு, ஒண்ணு தோட்டத்துலப்போயிபாண்டி,கோலி,கில்லி தண்டாவிளையாடலாம்.இல்லன்னா பக்கத்தாத்துலப் போயி பிளாஸ்டிக் கிளிப் சேத்துக் கொடுத்தால் எங்களுக்கு ஒண்ணு ரெண்டு கிளிப் சும்மா.கிடைக்கும் .அப்டி இல்லன்ன டிரான் சிஸ்டர்ல
பாட்டுக் கேட்கலாம் அதுவும் லோ வால்யூம்ல அதுவே ஒரு அடிக்குத்தான் இருக்கும், அதுல காதைக் கிட்ட வச்சிண்டு கேக்க அஞ்சு பேர். அதனாலேயே எங்க தலையில எப்பவும் 'பேன் 'இருக்கும்.
சாயங்காலம் மிஞ்சிப் போயி ஏதாவது வடை பாயசம் இருந்தால் அதை தசரதர் மனைவிகள் பங்குப் போட்டுண்டா மாதிரிப் போட்டுக் கொடுப்பா, இதுல சில வறட்டு கௌரவமும் இருக்கும் , கொஞ்சமா கிடைக்கறதுன்னா வேண்டாம்னு சொல்றத் த்யாகிகளும் உண்டு. அந்த மாதிரித் த்யாகிகள் இருக்கனுமேன்னே சிலர் நாக்கைச் சொட்ட விட்டுண்டு இருப்போம்!
இப்டிதான் எங்களோட காலம் கூட்டுக் குடும்பத்துல இருந்தது, இன்னிக்கும் நாங்க ஒன்னு சேர்ந்தா மலரும் நினைவுகள் தான், என்ன ஒண்ணே ஒன்னு கொறை , எங்களை யாரும் ' மலரும் நினைவுகளுக்காக பே ட்டிக் காண்பதில்லை!
இப்ப இருக்கிறப் பசங்களுக்கு கூட்டுக் குடும்பத்தைப் பத்தி என்னத் தெரியும்?
'தே காண்ட் ஈவன் இமேஜின்', சொன்னா 'நோ சான்ஸ் ' அப்டிம்பா

அப்புறம் படு சுவாரஸ்யமான ஒரு விஷயம் உண்டே - இதுக்கு reverse buffet ன்னு பெயர் வெக்கலாமா ? ராத்திரி சாப்பிடறப்போ விசேஷத்துக்கு வந்த அத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் சாம்பார் சாதம்,ரசம் சாதம், தயிர் சாதம் பிசிஞ்சு வெக்க வீட்டு நண்டு சிண்டுகள் எல்லாம் சுத்தி ஒட்கார்ந்துண்டு ஆளாளுக்கு ஒரு பாதாம் இலையில் வேணுங்கற கறியோ ஊறுகாயோ வெச்சுண்டு கையை நீட்டி நீட்டி அத்தை உருட்டி உருட்டி வெக்கற கவளத்தை அவசரம் அவசரமாய் முழுங்கி second,third helping கேட்ட நாட்கள் ...அப்போ நடக்கற வம்பு விளையாட்டுகள் by way of silly riddles ,விடுகதை , ராமாயண மகாபாரத உப கதைகள் ...கதை கேக்கற ஆசையால் இன்னும் இன்னும் என்று extra load ஏத்தின வத்தக்குழம்பு ருசி...ஆஹா ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ....
ReplyDeleteவிஜி, இதெல்லாம் இன்னும் மனசுல இருக்கு, எழுதத் தான் போறேன், கௌரியும் அவளுக்குத் தெரிஞ்சதை டிப்ஸா ஞாபகம் பண்ணியிருக்கா, அதெல்லாம் எழுதனும் ஒரு தொடர் கதையாக, நீயும் சேருவதானால் சரி ஆரம்பிக்கலாம்.
Delete