Saturday, February 18, 2012

நடந்து வந்த பாதை எங்கே?



இப்பல்லாம், ஒரே பேச்சு ,கொஞ்சம் வயசான, ரிடையர் ஆகின ஆணா இருந்தாலும்  பெண்ணா இருந்தாலும் , 'இந்தக் காலத்துப் பசங்க ( இரு பாலாருமே ) கொஞ்சம் கூட பூஜை ,புனஸ்காரம்னு ஒண்ணும் கிடையாது, எப்பப் பாரு லேப்டாப்பும் செல்போனும் கையுமா இருக்குதுங்கோ!' ஒரு கமெண்டு அடிக்க வேண்டியது .

இவங்கள் எல்லாம் வயசாகி வெட்டிப் பொழுது போக்கவே ,இப்டிப் பேச்சு, இவங்க காலத்துல என்ன நடந்ததுன்னு , நடந்து வந்த பாதையை மறந்துட்டுப் பேசறாங்க.

ஒரு சிலக் குடும்பங்களிலேயே, சிறு வயசில்  பூஜை, ஸ்லோகம் எல்லாம் கற்றுத் தருவதுடன் , அதை வயதானப் பிறகும் கடைப் பிடிக்கிறாங்க .இப்டிப் பேசறவன்களே, தங்களுடைய காலத்தில் சாமிக்கு ஒரு கும்பிடாவதுப் போட்டிருப்பார்களா என்பது சந்தேஹமே!

மிஞ்சி, மிஞ்சிப் போனா ஒரு நாள், கிழமையிலே கோவிலுக்குப் போயிருப்பார்களேத் தவிர , ரொம்பல்லாம் பண்ணியிருக்க மாட்டார்கள் .

இப்ப இவங்க ரிடையர் ஆனதும் வேற வேலையும் இல்ல, நல்லதுப் பண்ணனும், போற வழிக்கு, புண்ணியம் தேடணும்னு தான் பூஜை புனஸ்காரம்னு காலத்துல இறங்கியிருக்காணுக.

இப்பவும் சரி அப்பவும் சரி அவனவன் , வேலைக்குப் போகும் காலத்தில், செய்யும் தொழிலே, தெய்வம்னு தான் இருப்பான்,அப்பைக்கு அவனுக்கு ஆபிஸ் போயி வேலை செஞ்சாலே பெரிய பளுக் கொரஞ்சாமாதிரி.

எப்பல்லாம் பண்டிக வருதோ அப்பல்லாம், கோயிலுக்குப் போகரதுடன் வீட்டுலேயும் தன்னால் முடிஞ்சத கடவுளுக்கு செஞ்சான். அதனால, இப்ப இருக்கற பெண் , ஆணுக்கு பக்தி,சக்தி இல்லன்னு சொல்ல முடியாது.
அந்தந்த வயசுல அதது தானா வரும்.

ஆனா, குத்தம் கண்டு பிடிக்கறவங்க  என்னமோ அவங்க சின்ன வயசுலே அப்டியே சிவப் பழமா இருந்தா மாதிரில்லபேசறாங்க?

 ஹல்லோ  கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்!

No comments:

Post a Comment