Tuesday, February 14, 2012

தொட்டுப் பாத்து.................


தமிழ்ல ஒரு ஜோக்கு  உண்டு ,அது என்னனா, 

மகன்:    அம்மா கடைக்காரன் அழுகின காய்கறிகளை எல்லாம் என்ன பண்ணுவான்?

அம்மா: உங்கப்பா எப்ப வருவார்னு பாத்து தலையில கட்டுவான். 

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அதனால, கறிகாய் வாங்குவதுங்கறது பெரிய விஷயம் தான்.

எல்லோருக்கும் அதைப் பற்றித் தெரிந்திருக்காது , தெரிய வாய்ப்பும் இல்லை. சிலபேருக்கு அனுபவமே சொல்லித் தந்திடும்.

அதே போலத் தான் எனக்கும்.  

என் பெரியப்பா வெண்டைக்காய் வாங்கும் போதேல்லாம் அதை ஒடைச்சுப் பார்த்து வாங்குவார், அது ஈசியா ஒடன்ஜதுன்னா அது எளசுன்னு அர்த்தம்.வெண்டக்காய் வாங்கின உடனேயே  அதை அலம்பி துடைத்து  வைக்கணும்.



இப்டிப் பண்றதுக்கு மாம்பலம் மார்கட்லே ,' வந்துட்டாரு பாப்பாதிம்மா , சாவு கிராக்கி , எடும்மா கையை , அப்டியே எடுத்துப் போட்டுண்டு போனோம்னு இல்லாம , நீ பாட்டுக்கு, கைபோட்டு பொறுக்கினா, மத்தவங்க என்னத்த  வாங்கிண்டு போவாங்களாம் ?   
முருங்கக்காயை முறுக்கிப் பார்க்கணும் , அது ஈசியா முறுங்கித்துன்னா அதுவும் இளசு. தண்டு தண்டா இருந்தா அது ஜென்ட்ஸ் பிங்கர் , அதாவது முத்தினதுன்னு பேர்.   


கத்தரிக்காய்க்கு பாவாடையை பார்க்கணும் , என்ன புரியலயா?, கத்தரிக்காய் மேல் பகுதில பச்சையா அதோட காம்பு இருக்குமே, அது கொஞ்சம் புஷ்டியா பச்சைப் பசேல்னு இருக்கணும் , அப்டி இல்லாம குச்சி குச்சியா இருந்தா அது பொறிச்சு ரொம்ப நாள் ஆச்சுன்னு அர்த்தம். 


கேபேஜ்  பச்சையாவோ , இல்ல வெளிர் பச்சையாவோ, ரொம்ப லேசா  இருந்தா நல்லது. கல்யாணி புருஷன் வாங்கிண்டு வந்ததும் அவ கேபேஜோட மேல இருக்கிற இரண்டு சுத்து இலைகளை எடுத்துட்டு தான் வைப்பா, ஏன்னு கேட்டா, அதை யார் யாரோ கண்ட கண்ட கைல தொட்டிருப்பா, அந்த இன்பெக்சன் நமக்கு வரக்கூடாதுன்னு .  


 முனியம்மா எப்பவுமே, முள்ளங்கி, கேரட் அதோட தலைப் பகுதி ப்ரஷ்ஷா இருக்கான்னு பார்த்து வாங்குவா..வாங்கி வந்ததும் அதோடத் தலப் பகுதி, வாலைக் கட் பண்ணி வைப்பா.  கடைக்காரனே தலப் பகுதி, வாலைக் கட் பண்ணி வித்தால், அது பழசுன்னு அர்த்தம்னு வாங்க மாட்டா.


பட்டாணி தோலை உரிக்கும் போது டிவி பாத்துண்டே உரிக்கக் கூடாது , அதுல  புழு,பூச்சி இருந்தாத் தெரியாது ன்னு எங்க பாட்டி சொல்லுவா.ஒரு தரம் கண்ணம்மா புருஷன் கண்ணாயிரம் கீரை கட் பண்றேன் பேர்வழின்னு , அதை அப்டியே கத்தியாலகட்பண்ணப் போனப்போ அதுல ஒரு ' அட்டை' இருந்துருக்கு.கீரையை கொறஞ்சது மூணு தரமாவது நல்லா அலம்பனும், இல்லேன்னா, அதுல இருக்கற மண்ணு சமைக்கறப்போ  கலந்திடும்.  மழைக் காலத்துல மட்டும் கீரை வாங்கறதை யோசிக்கணும்.


காலி பிளவர் மஞ்சளா இல்லாம , வெளுப்பா இருக்கான்னு பாக்கணும். வாங்கினதும் அதுல  புழு,பூச்சி இருக்கான்னு பாத்து, எடுத்துப் போட்டு, கட் பண்ணி வைக்கணும் , இடமும் அடைக்காது, கொஞ்ச நாள் கழிச்சு உபயோகித்தாலும் , கெடாதுன்னு.


பச்சை மிளாகாய் காம்பை  ஆய்ந்து  ,பேப்பரில்  சுற்றி வைக்கணும். 

கறிவேப்பிலைய உரித்து , பேப்பரில் சுற்றிவைக்கணும். 

புதினாவை ஆய்ந்து,  பேப்பரில் சுற்றி வைக்கணும். 


 பக்கத்துக்கு வீட்டு பார்வதி ,பாவக்காய் ரொம்ப பச்சையாக இருந்தால், கசப்பு ஜாஸ்தியாக  இருக்கும், ரொம்ப  வெளிர் பச்சையாக இருந்தால் அது சீக்கிரம் பழுத்து விடும்.  சமைக்கும் போது கசப்பு கம்மியாக இருக்கணும்னா , நறுக்கி உப்பு போட்டு கொஞ்ச நேரம் அப்படியே வைக்கணும்ன்னு.



புளியந்தோப்பு  பொன்னம்மா  எப்ப  பூண்டு  வாங்கினாலும் , நல்லா  பெரிசா  இருக்கான்னு  பார்கறதோடில்லாமல் , அதை  வாங்கி  வந்ததுமே  , தனிதனியாப்   பிரிச்சு , குப்பையை  எடுத்துட்டு , நல்ல  எண்ணை  தடவி  வெயிலிலே  காயவச்சிடுவோ   , அப்பத்தான்  உரிக்கரதுக்கு  சுலபமா  இருக்கும்னு .


புளி வாங்கினா அதை நல்லா வெயிலிலே ஒனர்த்திபிறகு ஒவ்வொரு லேயரா பண்ணி, உப்பு தூவி மண் சட்டியில  வைக்கணும் .

வாழ இலையை பேப்பர்ல சுத்தி வைக்கணும். 


சரி உங்கள்ள எத்தனப் பேருக்கு இதுல இருக்கறதெல்லாம் தெரியும் , யோசிங்க பார்க்கலாம்!



No comments:

Post a Comment