Tuesday, February 14, 2012

சில நேரங்களில் சில மனிதர்கள் -1


சாப்பாடு என்றாலே சிலருக்கு நாக்கில் எச்சை ஊரும், சிலருக்கு அது ஒரு தினசரி ரொடீன்.ஆனால் எத்தனை பேர் சாப்பாட்டிற்காக இரவும் பகலும் உழைக்கிறார்கள்!

சோறே சொர்க்கம் என்றும் வயிறே வைகுண்டம் என்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ராய்பூரில் ( சத்திச்கார் ) திருமணமான ஒரு வருடத்திலேயே நாங்கள் ஒவ்வொரு சண்டேயும் , தவறாமல், இரண்டு திருமணமாகாத   நண்பர்களுக்கு சாப்பாடு போடுவோம். ஒரு நாள் கூட நான் முகம் சுளித்ததாக   தெரியவில்லை, ஏன் என்றால் வடக்கே அந்தக் காலத்தில் ( 1978 ) இப்போ போல் பொடி வகையறாக்கள் கிடை யாது. வீட்டில் எப்பொழுதுமே , காபிக் கொட்டை வாங்கி வறுத்து  கை மிசனில் அரைத்து தான் காபி , அதுவும் பில்டரில் தான்.
காஸ் அடுப்பும் கிடையாது, ஜனதா, பம்ப் ஸ்டவ் தான் , சில சமயம் குமட்டி அடுப்பும் கூட . யார் வந்தாலும் விருந்தோம்பலுக்கு   குறைச்சல் கிடையாது, அந்த விசயத்தில், நானும் என் கணவரும் நிறைய சமைத்து  வயிறார உண்ண வைப்போம். இன்றைக்கும்  விருந்தோம்பலில் குறை கிடையாது.
எங்கள் வீட்டில் முக்கால் வாசி ரொட்டி, சப்ஜி,( சுக்கா, கிரேவி )  தால் தான் , எப்போதாவது சாம்பார் ,தினமும்  ரசம் . ஆனால், வரும் விருந்தாளிக்கு ஏற்றவாறு மெனு இருக்கும்.

இப்போ சில ச்பெசிமென் களைப்  பார்ப்போம்.

மன்னார்குடி மஞ்சுளா வீட்டுலே , சாப்பாட்டுக்கு பஞ்சமே இல்லை , நிலத்துலேருந்து  நிறைய  அரிசி, கடலை , வெல்லம் கிடைக்கும்.கையும் தாராளம், யார் வந்தாலும் நல்ல பஞ்ச பட்சம் பரிமாரம் தான். நல்ல சமைக்கவும் தெரியும் , நல்லப் பரிமாறவும் செய்வாள். உறவினர்களிருந்து, ஊர் பேர் தெரியாதவர்கள் வரை எல்லாருக்கும் ஒரே மாதிரி உபசரிப்பு. அவளைக் கொண்டாடாதவர்கள்   கிடையாது!

ஆனா , நம்ம பஞ்ச தந்த்ரம் பரிமளா   இருக்காளே, ( பஞ்சதந்த்ரம் சினிமாவை பதினஞ்சு வாட்டி பார்த்திருக்கா!) யார் போனாலும் பஞ்சத் தோடதான்சாப்ட்டுட்டு  வரணும் . அவ வீட்டுலே இருக்கறது கரண்டியா, கைகொழந்தைக் கையா, இல்ல டீச்பூனான்னு இன்னி வரைக்கும் யாருக்கும் புரியல. இந்த அழகுல, அவ புருஷன் வேற, "பரி ,சாருக்கு இன்னும் ஒரு கரண்டி கொழம்பு ஊத்துன்னு "பரியுவான்.

 லக்னோ லல்லி வீட்டுல , யார் சாப்பிடறதா இருந்தாலும் எட்டி, எட்டி தான் சாப்பிடணும்.அதாவது, பெரிய பாத்திரத்தைக் கொண்டு வந்து டைனிங் டேபிள்லே வச்சிடுவோ , நம்ம என்ன நினைப்போம்னா , சரி கொழம்பு, கூட்டு, சாதம் நிறைய இருக்குன்னு ! ஆனா உண்மை என்னன்னா , அவப் பாத்திரத்தை ஒழிக்க மாட்டாள், கொஞ்சமா இருந்தாலும் அதேப்  பாத்திரம் தான் . அவளால ஒருவேளையே வர வேலைக்காரி தான் பாத்திரம் தேய்க்கணுமே  தவிர, அவ ஒரு ஸ்பூனு கூட தேய்க்க மாட்டாள்.


அதனால அவப் பரிமாறதக்குமுன்னாடியே ஒரு தரம் பாத்திரத்த ஒரு முன்னோட்டம் விடறது சாப்பிடுகிறவர்களுக்கு   நல்லது!  நம்ம கொஞ்சம் மனசைக் கல்லாக்கிண்டு ,தைரியமா,' ஏன் லல்லி இந்த சாதம் போறுமா, எல்லாருக்கும்? " அப்டின்னு கேட்டுட்டோம் போச்சு, பதில் என்ன வரும்னு நினைக்கிறீர்கள்.?
"கவலையே படாதே , போன வாரம் இதே மெனு தான் , நாங்க நாலுபேரும் சாப்ட்டுட்டு ஒரு கைப் பிடி வேறே வேஸ்டா , வேலைக்காரிக்கு தூக்கிக் கொடுத்தேன்னு சொல்வா!" உன் மூஞ்சி எப்படி போகும்? கிழக்கேயா , வடக்கேயா? 


  சரி இதுப் போகட்டும் இப்போ ராங்கி ராகினி வீட்டுலே எப்டின்னு பாப்போம்!
இவ வீட்டுலே சாதாரண சமையலா இருந்தாலும் பெரிய விருந்தே பண்ணா மாதிரி பேச்சு பேசுவா. சரி இன்னிக்கு நல்ல விருந்து தான்னு அவ முன்னாடி கொடுக்கிற சில துணுக்குகளைக் கூட துறந்து வயத்தைக் காலியா வச்சிண்டு சாப்பிட உட்கார்ந்தால், மொதல்ல, எல்லாப் பாத்திரத்துலேருந்து   எல்லாவற்றையும் , சரி சமமா எல்லாருடைய தட்டுலப் போட்டுட்டு மிச்சம் இருக்கறதை எடுத்து, இது நம்ம ரோசிக்குன்னு எடுத்து வச்ச்டுவா! ரோசி வேற யாரும் இல்ல ,அவளோட ரைட் ஹாண்டு வேலைக்காரி தான் . நீயில்லாமல் நானில்லை -ரோசி , ஆல் இன் ஆல்"


அடுத்தது , அஜந்தா பிளாட்  அமுதா , இவ எப்டின்னா ரொம்ப பிகர் கான்சியஸ் , அதனாலே, இட்லின்னா யாரா இருந்தாலும்,மனுசனால ரெண்டு இட்லிக்கு மேல தின்ன முடியாது, ரெண்டுக்கு மேல வேண்டாம் என்பாள், ஒரு வேள முன்னாடி குடும்பக் கட்டுப் பாடு ஆபிசில வேல சென்ஜாளோன்னு தோணும்!


அவ பையனுக்கே ,' இந்த விகாஸ் இருக்கானே அப்பப்பா, பதினஞ்சு  இட்லி, எட்டு தோசக் கேட்கறான், என்னாலல்லாம் முடியாது,, உனக்கு வேணும்னா, போய் ஓட்டல்ல சாப்டுக்கோன்னுபணத்தைக் கொடுத்துடுவேன்" என்பாள்.  இப்டி சொல்லிண்டே உனக்கு இட்லி போட்டா, நீ எப்டி இன்னும் கொஞ்சம் இட்லி போடுன்னு  கேட்பே, சொல்லு?

ஏதாவது   கல்யாணத்துல  தேங்காய் கொடுத்தாலோ, அதை ஒடைச்சு ஒரு மாசம் ஒட்டிடுவா, அதுல கொலஸ்ட்ரால் இருக்காம் , பாக்கப் போனா இவ ஒடம்புலத் தான் கொலஸ்ட்ரால் ஜாஸ்தி! 

கும்பக் கோணம் கோகிலா வீட்டுல ஊருக்காக பால் குடிக்கரவோ , ஒரு வழி பண்ணிடுவோ.அவ புருஷன் பாஸோட பொஞ்சாதி கூட மார்கட்டுக்குப் போயி ஜம்பமா, எல்லா காய்கறிகளையும் வாங்கிண்டு வரதுல ஒண்ணும் கொறச்சல் இல்லை , ஆனா அது ஒவ்வொன்னும் தெனம் இவளப் பாத்து கெஞ்சாத  கொற தான் , அப்டி அழுகி   நாரின்ன்டு கெடக்கும் , அதத் தூக்கி குப்பயிலப் போடுவாளேத் தவிர  சமைச்சு போடமாட்டா? 

வெறும் பச்சைக்  காய்கறிதான் ப்ரேக்பாஸ்ட் , சுக்கா ரொட்டிஇரண்டு, ஒரு வறட்டு சப்ஜி , ( எண்ணெய் கூடாதாம்) ஒரு கப் தயிர் அவ்ளோ தான் , அப்புறம் ஒரு வாழைப் பழம் , அதுவும் கொழந்த்க் கை சைஸ் தான். இது யார் வந்தாலும் , இங்கேயும் பாத்திரத்தை எட்டிப் பாக்கணும் , அதுக்கு தகுந்தாமாதிரி , அங்கப் போறேன் , இங்கப் போறன்னு சொல்லி வெளியில எங்கேயாவது ஒரு கையேந்தி பவன்ல கையேந்திட்டு வந்தாயோ தூக்கம், இல்லன்னா   ராத்திரி பூரா 24x1  ரேடியோ பாடிண்டே இருக்கும்! 

சிரிச்ச  மூஞ்சி  சீதா என்னப் பண்ணுவான்னா ,அவ வீட்டுல யாருக்கு என்னப் பிடிக்கறதோ அதைத் தான் எல்லோருக்கும் போடுவாள், அது முழுக்க முச்சூடும் தொகையல், பொடிமாஸ் ,தொக்கு, சுட்ட அப்பளாம், தயிர் பச்சடி, ஒரு கலந்த சாதம் .அவ ஒரு வேள ட்ரை ஏரியால வேலை செஞ்சிருப்பாளோன்னு  தோணும்.  

காஞ்சிவாய் கஞ்சி காஞ்சனா எப்பப்பாரு கஞ்சி குடிச்சே வயித்த ரொப்பிப்பா. விதம் விதமா கஞ்சி பண்றதுலே இவளப் போல கெட்டிக் காரி யாரும் கிடையாது,இவ வீட்டுக்குப் போனாலும் எல்லாருக்குமே காபி, டீ கிடையாது, கஞ்சி தான். மொகஞ் சுளிச்சுண்டு குடிக்க ஆரம்பிச்சாலும் கடேசில, பூனைக் குட்டி மீசையோட சொட்ட விட்டுண்டு தான் வருவா.

அடுத்தது, உண்ணாவிரதம் ஊர்மிளா.இவ கணவனை பாதி நாள் டூர்ல அனுபிச்சுட்டு, இவளும் இவ மாமியாரும் விரதம் என்கிற பேர்ல, உண்ணாவிரதம் இருப்பா.ஏன்னு கேட்டா, 'லங்கணம் பரம ஔஷதம்னு' சொல்வா,விரத நாள்லே யாராவது போனா , தயிர் சாதம் ஊறுகாய்   தான் சாப்பாடு. ஒடம்பும் நல்ல கொடியிடையாள் மாதிரி வச்சுப்பா.

அடுத்தது டிபன் கேரியர் டீனா. காலையிலே வீட்டுல எல்லோருக்கும் சாண்ட்விச் தான் பகல்ல ஒரு கேரியர்ல கடேசி அடுக்குல, சாதம், அடுத்ததுல, சாம்பார், அப்புறம் ரசம் அதுக்கும் மேல் அடுக்குலபொரியல், டாப்ல பச்சை காய்கறி சேலடாக. அவ மதுரைக் காரியானதால, ராத்திரியில எல்லோருக்கும் இட்லி இல்ல தோசைதான் ஆனா, வகை வகையா சட்னி அரைச்சு வப்பா.இதிலிருந்து யாருக்காகவும் தன்னோட மெனுவை மாத்திக்க மாட்டாள்.

மைனர் பொஞ்சாதி  மல்லிகா இருக்காளே, அவ ஒருத்தர் வீட்டுக்கு வரும் போதே ராத்திரி ஏழு மணி யாகும் , ரெண்டுங்கெட்டானா வரதோட, கம்ப்ளில ஒட்டின சூயிங்கம் மாதிரி கொஞ்சத்துல போமாட்டாள், அவ போன பெறகு சாப்பிடலாம்னு நினைக்கவும் முடியாது, இங்கே சாப்பிடறயான்னு கேட்கவும் முடியாது. அவளே என்ன மெனுன்னு கேட்டுட்டு, ' நான் போயி சமைச்சு சாப்பிடலாம்னு தான் நினெச்சேன் , ஆனா நீ பண்ணப் போற ஐடம் எனக்கு பிடிக்கும்கரதனாலே, நான் இங்கேயே சாப்பிடறேன்'நு சொல்வா. ஆனா, ஒரு நல்ல கொணம், கூட காய் நறுக்கிக் கொடுத்து, அரைச்சுக் கொடுத்து, டேபிள் செட் பண்ணி எல்லாரும் சாப்பிட்டதும் எடுத்து வச்சு, நல்லாவே ஒத்துழைத்துக் கொடுப்பா, இன்னும் கேட்கப் போனா, வேலைக் காரி வரல்லேன்னா, பாத்திரமே தேச்சுக் கொடுப்பா.


சரி இவ்ளோ பேரைப் பத்தி நான் சொல்லிட்டேன், நீங்க திரும்பிப் பாருங்க பார்க்கலாம், உங்களுக்கு இதுலே எத்தனை பேர் மாதிரி தெரியும்,இல்ல இதுக்கும் மேல, இவங்களை எல்லாம் தூக்கி சாப்பிடராமாதிரியும்  இருக்காங்களோ?


No comments:

Post a Comment