Friday, August 5, 2011

சின்னதுளிகள்

சின்னக்  குழந்தை வெண்ணிலவைப் பார்த்து கேட்டது,
வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா?
என் வீட்டில் தஞ்சம் புகுவாயா?
வெண்ணை கொண்டு தருவாயா?
விட்டில் பூச்சி பிடிப்பாயா?

         *                                           *                                   *

ஜனங்கள் இரவு பகல் பார்க்காமல் எல்லாமே ஒரே போல் செய்கிறார்களே, பிறகென்ன, நீ தனி நான் தனி ?
நாம் என் ஒன்று சேரக்  கூடாதுன்னு?
இரவு பகலைப் பார்த்து கேட்டது.

*                                                      *                                                   *

மயக்கும் மாலை பொழுதில், 
அருகில் நீ இருந்தால்,
இனிக்கும் இன்ப இரவில் 
அவள் இருந்து போகட்டுமே?

*                                                            *                                                 *
கடவுளிடம் முறையாட போனேன்,
ஆனால் அங்கு கண்ட காட்சியோ வேறு.
என்னை மெய் மறந்து நின்றேன்,
ஆஹா!கல்யாணக் கோலத்தில் 
 முருகனும் வள்ளியும்,
விடைக்  கிடைத்தது  வேறென்ன ,
இரண்டாம் கல்யாணக் கொட்டு மேளம்  தான்!

*                                          *                                          *   

2 comments:

  1. மயக்கும் மாலை பொழுதில் ....-இது எப்படி இருக்கு?

    இரவும் பகலும் ஒண்ணா ஆயிட்டா அப்புறம் வாலி,வைரமுத்து எல்லாம் கடையை இழுத்து மூட வேண்டியதுதான்.

    கடவுளிடம் முறையாட....-இப்படித்தான் நாட்டுல ஜனங்க பண்ற எல்லா தப்புக்கும் கடவுளை உதாரணம் காட்டுறாங்க .ஆமா,அது என்னமோ ஜலக்கிரீடைன்னு ஏதோ ஒன்னு கிருஷ்ணா பரமாத்மா பொண்ணுங்களோட விளையாடினாராமே ...ஒய்யா ஓய் அது என்னா ஓய் ?

    ReplyDelete
  2. Re: கரை மேல் தெறித்த அலைத் துளிகள்-7
    http://www.indusladies.com/forums/showthread.php?t=142655#post1903931
    Posted by: devapriya
    On: 7th August 2011 09:54 PM

    அது அதற்கென்று ஒரு நேரம் காலம் இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா மாதங்கி? :rotfl

    என் சிறு வயதில்
    நிலா நிலா ஓடி வா
    நில்லாமல் ஓடி வா
    மலை மீது ஏறி வா
    மல்லிகை பூ கொண்டு வா என்று தமிழில் ரைம் ஒன்று படித்தேன்....அது தான் ஞாபகம் வந்தது.
    நன்றி மாதங்கி!!!!

    ReplyDelete