ஜகன் ,அவன் மனைவி புஷ்பாவும் ,ரொம்ப நாள் கழித்து ஒரு சவாலுக்கு தயார் ஆனார்கள்.
அன்று சண்டே , எப்பவும் புஷ்பாதான் கார்த்தாலை காபி போட்டு டிபனுக்கு ரெடி செய்யறது ,ஆனால் அவளுக்கு பதிலாக ஜகன் எழுந்து தனக்கும் ,புஷ்பாவுக்கும் காபி போட்டு ரூமுக்கு கொண்டு போனார்.
ஒரு எட்டு மணி வாக்கில் முதல் மருமகள் மஞ்சு வந்து கிச்சனில் பார்த்தபோது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது,காபி சுவடே இல்லாமல் காலியாக காணப்பட்டது!
என்னதான் நடக்கரதுன்னு வேடிக்கைப் பார்க்கவந்த ஜகன் ,
மஞ்சுவின் முகத்தை பார்த்து , ''அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, நான் அம்மாவுக்கும் எனக்கும்காபி போட்டுண்டுட்டேன் , நீ மத்தவாளுக்கு போட்டுடு''
''ஏன்பா, அம்மா ராத்திரி ஒன்னும் சொல்லலயே?, என்ன ஆச்சு, நான் வேணா ரகுவை அம்மாவை டாக்டர் கிட்டே கூட்டிண்டு போகச் சொல்லட்டுமா?''
வேண்டாமா, ஒரு க்ரோசின் கொடுத்திருக்கேன் ,கொஞ்சம் ஜாஸ்தியா உடம்பைப்போட்டு வருத்திண்டு இருக்கா,வடாம் போடறேன் வத்தல் போடறேன்னு , ரெஸ்ட் எடுத்தால் சரியாகி விடும்..''
இவர்கள் பேசிண்டு இருக்கும் போதே இரண்டாவது மருமகள் வினிதா வந்தாள், அவளிடம் மஞ்சுவே ,''அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, வினி அதனாலே நீ காபி கடையை பார்த்துக்கோ, நான் அம்மாவைப் பார்த்து என்ன பண்றதுன்னு கேட்கறேன்'
ஜகனுக்கு சிரிப்பு தாங்கலை, இருந்தாலும் என்ன தான் நடக்கிறதுன்னு பார்க்கலாமேன்னு மஞ்சு பின்னாடியே ரூமிற்கு போனார்.
''அம்மா என்னமா ஆச்சு?, இப்போ ஜுரம் எறங்கித்தா ? என்னமா சாப்பிடறீங்கோ?''
''எனக்கு ஒண்ணும் வேண்டாம், நீ என்ன இருக்கோ உங்கள் எல்லாருக்கும் பார்த்து சமைச்சுடு''
''சரி மா, நான் வினியை கேட்டுட்டு வந்து சொல்றேன்''. அது வரையிலும் ரெஸ்ட் எடுங்கோமா ' பாவம் அம்பிக்கு உங்கள் கையாலே இடியாப்பம் சாப்பிடம்னு சொல்லிண்டு இருந்தான், அவனை நெக்ஸ்ட் சண்டே பண்ணித் தரிங்கோன்னு சொல்லி சமாதானப் படுத்திடறேன் ''
புஷ்பா ஜகனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மஞ்சுவும், வினியும் கிச்சனில் அடுத்து என்ன செய்யலாம்னு கூடி பேச முனைந்தார்கள். இருவருக்குமே சமையலில் அவ்வளவாக கைமணம் இல்லை. மாமியார் சமையலிலே உடம்பை வளர்த்தவர்கள் ,இதுவரை மாமியார் உடம்பு என்று படுத்ததில்லை ,இது புதுசு, போதாத குறைக்கு மஞ்சுவோ சாயங்காலம் பிரெண்டை பார்த்துட்டு சினிமா போலாம்னு பிளான் பண்ணி இருந்தாள். வினியோ கார்த்தாலயே டிபனுக்கு அப்புறமா 'மாலு'க்கு போயி கிஷோரோட பர்த்டேக்கு வேண்டிய ஐடம்ஸ் எல்லாம் வாங்கிண்டு வர பிளான் பண்ணி இருந்தாள். இப்போ ரெண்டு பேர் பிளானும் போச்சு .
''வினி நீ ஒண்ணு பண்ணு , மிளகு ,ஜீரகம் ,தக்காளி, பெருங்காயம் ,சிவப்பு மிளகா போட்டு கன கனன்னு ஒரு ரசம் பண்ணி சாதம் வச்சிடு, நான் ரகு கிட்ட சொல்லி அப்பாக்கு மட்டும் ஒரு ஆளுக்கு எடுப்பு சாப்பாடு வாங்கிண்டு வரச் சொல்லிடறேன், அப்படியே அவனையே ராத்திரிக்கும் எல்லோருக்கும் சப்பளை பண்ணிடச் சொல்லிடறேன்.
வேண்டாம் அண்ணி ,நான் எப்படியும் என் அம்மா வீட்டுக்கு ரொம்ப நாளாகவே போகணும்னு ரவிகிட்ட சொல்லிண்டே இருக்கேன் நல்லதாப் போச்சு.
நான் ராத்திரி அங்கேயே சாப்பிட்டுட்டு வந்துடறேன், நீங்க உங்க எல்லாருக்கும் ஆர்டர் பண்ணிக்கோங்க!
மஞ்சுக்கு ஆத்திரமா வந்தது வினியை மாதிரி பிறந்த வீடு பக்கத்திலேஇல்லையே , இருந்தால் அப்பாடான்னு பிரமிகுட்டியையும், நிகில் குட்டியையும் விட்டுட்டு ஒரு ரவுண்டு இ சி ஆர் ரோடிலே ஜம்முனு சுத்திட்டு வந்து இருக்கலாம். என்ன பண்றது, எல்லாத்துக்கும் கொடுத்து வச்சிருக்கணுமே!
மெதுவாக மாமியாரிடம் வினி ரசம் செய்யப் போவதாகவும், அப்பாவிற்கு மட்டும் சாப்பாடு வாங்கி வைப்பதாகவும் சொன்னாள், ரகு ரவி இருவருக்கும் வெளியே வேலை இருப்பதால் லஞ்ச்வெளியே சாப்பிடப் போவதாகவும்
சொன்னாள்.
புஷ்பா ஒன்றும் சொல்ல வில்லை. வெறுமே தலையை மட்டும்அசைத்தாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சாதாரண சண்டே நாட்களில் கொஞ்சத்தில் எழுந்துக் கொள்ளாத ரகு, ரவி , நண்டு, சுண்டு எல்லாருமே அரை மணி நேரத்தில் எழுந்து,குளித்து ஜாம் ஜாம்னு ட்ரஸ் போட்டுக் கொண்டு ரெடி ஆகியாச்சு , அது எப்படி , இவர்களுக்கு வேணும்னால் எல்லாம் சீக்கிரமே செய்தாகிறது?
எல்லோரும் ஒரு வழியாக பதினொரு மணிக்கு அவரவர்கள் காரில் கிளம்பிப் போயாச்சு , வேலைக்காரி ரத்தினமும் ஒரு வேலை வந்து எல்லா வேலைகளையும் செஞ்சு போயாச்சு.
ஜகன் மொள்ள புஷ்பாவிடம் வந்து சிரித்தவாறே, ''புஷ்பா பெயில் ஆயிட்டே!''
அவள் வாயைதிறந்து ஏதோ சொல்வதற்குள் , காலிங் பெல் அடிக்கவே , ஜகன் போய் கதவைத் திறந்தார், என்ன ஆச்சரியம்! மகள் மஞ்சரி கையில் பேகுடன் நின்றிருந்தாள்.
''என்ன மஞ்சரி, எங்கே இந்த பக்கம்?''
''என்ன கேள்விப்பா இது, அம்மாக்கு ஜுரம்னு வினி போன் பண்ணி , நாங்க யாரும் வீட்டில் இல்லை , நீங்க முடிஞ்சா போயி பாருங்கன்னு சொன்னாள்.''
ஜகன் அவளை உட்கார வைத்து நிதானமாக சொன்னார்,
''அம்மாக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லை ,ஒரு சின்ன சவால், அதான் இந்த டிராமா'' ,
''என்னப்பா டிராமா, க்ராமானு , என்னன்னு புரியும் படியா சொல்றீங்களா?''
ஜகன் சொன்னது இது தான்.
புஷ்பாவுக்கு ஒடம்பு சரியில்லைன்னால், இந்த குடும்பம் ஒண்ணாக இருந்தாலும்,அவரவர்கள் தன்வழியில் தான் போவார்களே தவிர , அவளுக்கு அனுகூலமாக ஒன்னும் செய்யப் போவதில்லை என்று.
அதற்கு புஷ்பா சொன்னது என்னவென்றால் ,அவர் நினைப் பது போல் எதுவும் நடக்காது ,பிள்ளைகள் இருவரும் அவர்களுடைய மனைவிமார்களும் நிச்சயம் அவளுக்கு அனுகூலமாக அவளை கவனித்து பணிவிடை செய்வார்கள் என்று.
''உங்கம்மா சவாலில் பெயில் ஆயிட்டா ''
சரி விடுங்க ஆமாம்,நான் பெயில் ஆயிட்டேன் ,அதற்கு என்ன இப்போ?
''எப்படி மஞ்சரி உன்னாலே இவ்வளவு சீக்கிரம் வர முடிந்தது?'' '' மாமியார் சிக்குன்குனியா பரவாயில்லையா?'' ''மாமனார் கண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டிருக்கிறாரா ? ''
அம்மா,வினி போனை சாரு தான் எடுத்தாள், நான் என்ன விசயம்னு சொன்னதுமே சுடச்சுட ரசம் பண்ணி,லேசா வதக்கின கத்தரிக்காய் தக்காளி போட்டு செஞ்சு கொடுத்தா , உனக்கு கொண்டு வர ,நீங்க போயி உங்கம்மாவை பார்த்துட்டு வாங்க, இன்னைக்கு நான் கிச்சன் பார்த்துக்கறேன்னு சொன்னாள்.
அதுக்குள்ளே சதீஷும் மார்க்கெட் போற வழியிலே உன்னை விடறேன், நீ பார்த்துட்டு ரெடியா இரு,ஒரு மணி நேரத்திலே நான் வந்துடறேன் , உன் அம்மாவையும் பார்த்தா மாதிரி இருக்கும், உன்னையும் விட்டா மாதிரி இருக்கும்னாரு.
அம்மா, அப்பா ,தம்பிமார்கள், சம்சாரத்துடன் வெளியிலே போயி சாப்பிடறதை பத்தி சதீஷுக்கு ஒண்ணும்
சொல்லாதீங்க, எங்க வீட்டிலே நாங்க எல்லாரும் 'ஜாயின்ட் பாமிலி' ஒரே குடும்பம் ஆனால், நம்ம வீடும் அதே 'ஜாயின்ட் பாமிலி' தான் ஆனால் ஒரே குடும்பம் இல்லை .என்ன செய்வது!
அம்மா இனிமே நீ கொஞ்சம் ஓடி யாடி உழைக்கிறதை குறைச்சுக்கோ , அப்பதான் , எல்லாருக்கும் உன் அருமையும் தெரியும் அவங்களோட குறையும் தெரியும், சமய சந்தர்பத்திலே எப்படி இருக்கனும்னும் புரிய வரும் , என்ன நான் சொல்றது , இருப்பயா?
புஷ்பா வழக்கம் போல தலையை ஆட்டினாள்.
Re: புஷ்பா பெயில் ஆயிட்டா !!!!!!
ReplyDeletehttp://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138797-a.html#post1852512
Posted by: Padhmu
On: 23rd June 2011 02:53 PM
hi mathangi,
very nice story. In a joint family everybody wanted to gain for their welfare and nobody is bothered about the old people who are working for all. daughters are so attached to their parents. good story.
************
Re: புஷ்பா பெயில் ஆயிட்டா !!!!!!
http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138797-a.html#post1852518
Posted by: sipanneer
On: 23rd June 2011 02:58 PM
Hi Mathangi,
The last few lines...antha daughter solvathu...it is true!!!
joint family ya irunthutta ellarum orutharku oruthar atharavaga irrupanga appadinu solla mudiyathu....they still have some distance in their minds...
Nice story.....
omsrisai' uA
ReplyDeleteNice story....you have brought the clear picture what happens in a joint family....
Re: புஷ்பா பெயில் ஆயிட்டா !!!!!!
ReplyDeletehttp://www.indusladies.com/forums/showthread.php?t=138797#post1891645
Posted by: sowmyasri0209
On: 30th July 2011 01:38 PM
Good story..
புஷ்பா வீட்டில் தனி தனியாய் இருப்பதை காட்டியதோடு இல்லாமல்
மஞ்சரி வீட்டில் ஒன்றாய் இருப்பதையும் கட்டியிருக்கிறீர்கள்
************
Re: புஷ்பா பெயில் ஆயிட்டா !!!!!!
http://www.indusladies.com/forums/showthread.php?t=138797#post1891691
Posted by: Riyakathir
On: 30th July 2011 03:19 PM
very nice... for this only.. my mom and dad always says..
un veettukku vantha oru naal ma... sapittu paduthu elunthirichi.... thontharavu pannama poiduvaen.....
amma solluvanga... nan saga ra variakkum veetu vadagaiya vaangikittu... oru vela kariya cachikittuu... appa appa unnaik=yum thambiyaiyum pathukittu.. en purushanukku aakki pottukuvaen.. marumaga kitta idi vaanga mattaen....
appadinu solluvaanga....
nalla kathai.. aana ippavum ippadi nadakutha amma... ippa ellam mamiyaar ellam marumaga kitta ethir paarkurathaey illa.... mamiyaaraiyae kooda vachikka venamnu ninaikura marumaga thanae irukkanaga....
en mamiyaar pavam thaniyaa irunthu kashta pattavangaa.. veetla ellorum amblaingaa. evangalukku odambu mudiyalana kooda... sudu thanni vachi kodukka aal kidaiyaaathu... athanaala... en mamiyaar kooda nan sanda pottalum... avangala nan nalla vachikuvaen.. avanga appaavi ... :)
************
Re: புஷ்பா பெயில் ஆயிட்டா !!!!!!
http://www.indusladies.com/forums/showthread.php?t=138797#post1891967
Posted by: natpudan
On: 30th July 2011 08:53 PM
எம்கே -
வீட்டுக்கு வீடு வாசப் படி
இருக்கவே இருக்கு ரசப் பொடின்னு
ஒப்பேத்தறத - மருமகள், மகள் இவர்கள்
மூலமா அழகா சொலிட்டீங்க. வேலை செய்யும் வரை
செய்பவரின் அருமை தெரியறதில்லேன்றது தான் எங்கும்.
************
Re: புஷ்பா பெயில் ஆயிட்டா !!!!!!
http://www.indusladies.com/forums/showthread.php?t=138797#post1891972
Posted by: Sannjay
On: 30th July 2011 08:56 PM
என்னது புஷ்பா பெயில் ஆயிட்டாளா - மூடுங்கடா கடைய எல்லாம்
************
Re: புஷ்பா பெயில் ஆயிட்டா !!!!!!
http://www.indusladies.com/forums/showthread.php?t=138797#post1891996
Posted by: ArunaRSanthosh
On: 30th July 2011 09:08 PM
title ah paathu edho student kadhai ninachaen.... nalla kadhai nacchunu irunthuchu, ippavum niraya paer ipdi thaan irukaanga..nice story..
************
Re: புஷ்பா பெயில் ஆயிட்டா !!!!!!
http://www.indusladies.com/forums/showthread.php?t=138797#post1892069
Posted by: sowmyasri0209
On: 30th July 2011 09:59 PM
---Quote (Originally by Sannjay)---
என்னது புஷ்பா பெயில் ஆயிட்டாளா - மூடுங்கடா கடைய எல்லாம்
---End Quote---
strike பண்ண ஒரு reason கிடைச்சாச்சு
************
Re: புஷ்பா பெயில் ஆயிட்டா !!!!!!
http://www.indusladies.com/forums/showthread.php?t=138797#post1892081
Posted by: Sannjay
On: 30th July 2011 10:06 PM
இல்லியா பின்ன நம்ம புஷ்பாக்கு நாம சப்போர்ட் பன்னளன யாரு பண்ணுவா