கதிர் அவனுடைய அம்மா மனோன்மணியுடனும்,அப்பா ராஜசேகருடனும் இன்று துளசியைப் பெண் பார்க்க போக ரெடியாக இருக்கிறான்.
இவன் எம் பியே படித்து ஒரு பண் நாட்டு நிறுவனத்தில் மார்கடிங் செக்சனில் மேனேஜர் ஆக இருக்கிறான்.
பெண் துளசி கம்ப்யுட்டர் படித்து விட்டு அவளும் பண் நாட்டு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறாள்.
துளசிக்கு ஒரு கால் கொஞ்சம் குட்டை அதனால் நெம்பி,நெம்பித் தான் நடப்பாள்.
கதிருக்கு இந்த இடத்தில கொஞ்சமும் விருப்பம் இல்லை , அம்மா அப்பாவின் தொல்லைக்காக பெண் பார்க்க ஒத்துக்கொண்டான்.
ராஜசேகருக்கு மனசுக்குள் துளசி கால் ஊனமானதால் அவளுக்கு ஒதுக்கீடு மூலமாக வேலையும், ப்ரோமோசனும் எப்பொழுது வேண்டுமானாலும் கிடைத்து விடும் என்று நம்பிக்கை.
மனோன்மணிக்கோ துளசி வீட்டில் அவள் கால் ஊனத்திறகாகவே சீர், சினத்தி நிறைய செய்யப் போவதாக கேள்விப் பட்டாள். அதனாலேயே இவர்கள் இருவரும் ரொம்ப மும்முரமாக துளசியை மருமகளாக அவர்கள் வீட்டிற்கு கொண்டு வரணும் என்று ஒரே பாட்டு தான்.
கதிருக்கு பிடிச்சு இருக்கா என்ன என்ற கேள்வியே இல்லை.
பெண் பார்க்கும் படலம் முடிந்து துளசியின் பெற்றோருக்கு அன்று இரவு காயா, பழமா என்ன என்று சொல்வதாக ராஜசேகர் சொல்லி விட்டார்.
வீட்டிற்கு போகும் வழியில் கதிரை தவிர அவன் பெற்றோர் பேசிக் கொண்டே போனார்கள் .அவர்கள் என்ன பேசினார்களோ கதிர் கண்டுக்கவே இல்லை ,ஏனெனில் அவனுக்கு துளசியினுடைய ஊனம் ஒரு பெரிய முட்டுக் கட்டையாக தெரிந்தது.
அப்போது தான் அவன் நண்பன் ஜெயபாலனிடமிருந்து அவன் செல்லுக்கு கால் வந்தது.கால் அட்டென்ட்செய்து விட்டு வழியிலேயே வண்டியை நிறுத்த சொல்லி ,அவன் ஜெயபாலனை பார்க்கப் போவதாக சொல்லி இறங்கினான் .
* * * *
மருத்துவ மனை வந்ததும் ஒ பி டி வார்டில் கேட்டு விசாரித்து ஜெயபாலன் இடத்தை கண்டு கொண்டான். அங்கு அவன் மனைவி சிவராணி இவனுக்காகவே காத்திருந்தது போல் இவனை பார்த்ததும் பரவசமாக ,
''வாங்க'' , ''உங்களுக்காக தான் காத்திருக்கின்றார்''.
கதிர், ''டேய்,என்னடா ஆச்சு''?''எப்ப விழுந்தே?'' ''முதலிலேயே போன் பண்ணியிருக்கக் கூடாதா?''
''ஏன்டா நான் என்ன நாள் நட்சத்திரம் பார்த்தா விழ முடியும்? '' ''ரோடிலே போறப்போ ஒரு சின்ன ஆக்சிடென்ட்.'' '' நல்ல காலம் குவிச்சு வச்சிருந்த கருங்கல் மேலே விழுந்தேன் இல்லன்னா சாக்கடை யிலேதான் விழுந்திருப்பேன்.''
''அப்பவே போன் பண்றது தானே?''
''ஏன்டா நீ பொண்ணு பார்க்கப் போறேன்னு தெரியும் அப்டி இருக்கப்போ , எப்டிடா ஒனக்கு சொல்றது?'' ''சரி என்ன டிசைட்பண்ணே ?
''என் கதை இருக்கட்டும் முதல்லே நீ சொல்லு , என்ன சொல்றார் டாக்டர் , சாதாரண கட்டா,இல்லை பெரிய கட்டா?''
''டேய் மழுப்பாதே, ஒழுங்கா சொல்லு ,இல்லை வீட்டுக்கு போன் பண்ணட்டுமா?''
''ஏண்டா அவசரப் படறே'' . ''என்னங்க , நீங்க சொல்லுங்க டாக்டர் என்ன சொல்லிட்டு போனார் ''.சிவராணிய பார்த்து கேட்டான்.
''அது தாங்க பெரிய விஷயம், அதுக்காகதான் நான் உங்களை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்'' .
''ஏன் என்னடா , விஷயம் பெரிசா இருக்கும் போலே இருக்கே?''
''அது ஒன்னும் இல்லீங்க ,அடி பலமா பட்டுருகிறதுனாலே இனிமே இவராலே சாதாரணமாக நடக்க முடியாது , கொஞ்சம் விந்தி விந்தி தான் நடக்க முடியும்னுட்டாரு டாக்டரு ,அதுலே இவருக்கு கொஞ்சம் வருத்தம்''.
கதிருக்கு யாரோ மண்டையிலே பளார்னு போட்டா மாதிரி இருந்தது.
அதற்குள் ஜெயபாலனே , ''டே நீயே சொல்லு ,கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆகிறது, பெரிசா ஊட்டி கொடைக்கானல்னு ஹனிமூனுக்கு பிளான் போட்டு வச்சிருக்கேன் ,இப்ப பார்த்து இந்த நொண்டிகாலு என்னை கேலி செய்யரதுடா. இதுல ரொம்ப 'கில்டியா'வேற இருக்கு. இவள் ஜன்மம் பூரா ஒரு நொண்டியோட வாழ்க்கை பண்ணனுமான்னு !''
''கதிர் சார். நீங்களே சொல்லுங்க , இப்படி எனக்கு ஆகியிருந்தா இவர் என்ன ,என்னை விட்டுட்டா போவாரு?'' ''இதெல்லாம் பெருசே இல்லை, வெறும் விந்தி நடக்கணும் அவ்வளவு தானே!'' ''காலே இல்லாததுக்கு கால் இருந்து விந்தி நடக்கறது ஒன்னும் கஷ்டம் இல்லையே?'' ''அந்த மட்டும் காலை எடுக்காதபடிக்கு விட்டு வச்சஆண்டவனுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கோம்'' ''நீங்க உங்க பிரண்டுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்க , நா சொன்னா கேட்க மாட்டார்''
கதிருக்கு யாரோ மண்டையிலே பளார்னு போட்டா மாதிரி இருந்தது.
அதற்குள் ஜெயபாலனே , ''டே நீயே சொல்லு ,கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆகிறது, பெரிசா ஊட்டி கொடைக்கானல்னு ஹனிமூனுக்கு பிளான் போட்டு வச்சிருக்கேன் ,இப்ப பார்த்து இந்த நொண்டிகாலு என்னை கேலி செய்யரதுடா. இதுல ரொம்ப 'கில்டியா'வேற இருக்கு. இவள் ஜன்மம் பூரா ஒரு நொண்டியோட வாழ்க்கை பண்ணனுமான்னு !''
''கதிர் சார். நீங்களே சொல்லுங்க , இப்படி எனக்கு ஆகியிருந்தா இவர் என்ன ,என்னை விட்டுட்டா போவாரு?'' ''இதெல்லாம் பெருசே இல்லை, வெறும் விந்தி நடக்கணும் அவ்வளவு தானே!'' ''காலே இல்லாததுக்கு கால் இருந்து விந்தி நடக்கறது ஒன்னும் கஷ்டம் இல்லையே?'' ''அந்த மட்டும் காலை எடுக்காதபடிக்கு விட்டு வச்சஆண்டவனுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கோம்'' ''நீங்க உங்க பிரண்டுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்க , நா சொன்னா கேட்க மாட்டார்''
கதிருக்கு மூஞ்சியை கொண்டு போயி எங்கே வச்சிகறதுன்னே தெரியலை.நண்பனுக்கு ஆறுதல் சொல்றதா, இல்லை நண்பன் மூலமாக கண்ணை திறந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்றதான்னு .
எது எப்படியோ நண்பனுக்கும் எடுத்து சொல்லி , தான் பொண் பார்த்த துளசியைப் பற்றியும் சொல்லி வெகு சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடுவதாக சொல்லி விட்டு வீட்டிற்கு கிளம்பினான். வழியில் மனதுக்குள் அப்பாவிடமும், அம்மாவிடமும் என்ன சொல்வது என்று ஒத்திகை பார்த்துக்கொண்டான்!
Re: எங்கே ஊனம்?
ReplyDeletehttp://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138831-a.html#post1851628
Posted by: SUBHAARCHIE
On: 23rd June 2011 03:50 AM
மாதங்கிமா...
உங்க கதை ...நல்லா இருக்கு...
************
Re: எங்கே ஊனம்?
http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138831-a.html#post1852500
Posted by: Padhmu
On: 23rd June 2011 02:41 PM
good stroy with good moral.
************
Re: எங்கே ஊனம்?
http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138831-a.html#post1852531
Posted by: sipanneer
On: 23rd June 2011 03:06 PM
Hi Mathangi,
Good story!!!!Very well conveyed the message!!!
But the inlaws of thulasi.....:bonk
dont know what to say about these people...:rant