Monday, March 28, 2011

கலையாத கனவுகள்

ஞ்சலிக்கு அவ்ளோ சந்தோசம் , அவ பையன் மணிகண்டன்  இன்னிக்கு முதல் முறையா யுனிபார்ம் போட்டுண்டு ஸ்கூலுக்கு போகப்போறான். 

குடிகார  புருஷன் ரோட்டிலே விழுந்து கிடந்தப்போ எவனோ ஒருத்தன் லாரியை ஏத்தி அவன் அங்கேயே காலாவதியாயிட்டான் .
அவன் செத்த பணத்தை வச்சு மணிகண்டனை ஸ்கூலில் சேர்க்கப் போகிறாள்.

ராத்திரி எல்லாம் தூக்கமே இல்லை ,பையனை யூனிபார்ம்லே பாக்கிற சந்தோசத்தில்  இருந்தாள்.

ஆச்சு,மணிகண்டன் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு யூனிபார்மை போட்டுண்டு வந்தவுடனே அவனை பார்த்து அப்படியே மகிழ்ச்சியிலே உறைந்து போய்விட்டாள்.

மணிகண்டன் தான்  அவளை ,''யம்மாவ், என்னாச்சு ''னு குரல் கொடுத்ததும் தான் நினைவுக்கு வந்தாள்.

அப்படியே அவன் தலையை சுற்றி திரிஷ்டி கழிப்பது போல் செஞ்சு சொடுக்கு போட்டாள். இருக்காதா பின்னே ,எத்தனை வருஷ கனவு .அவனை அவன் படிச்ச ஸ்கூலிலேயே வாட்ச்மன் உத்யோகத்துக்கு அனுப்பனும்னு அதுக்காக பத்தாயிரம் ரூவா பணம் கொடுத்து வாங்கின வேலையாச்சே !


1 comment:

  1. hmm simple and crisp...avargalin nilai eppodhum kanavudhan....
    -prana
    -
    ILoveTulips
    konjam paridhaabamaaga irundhadhu... irundhaalum thaaikku than pillai patrina kanavu ninaivaanadhu kurithu sandhosham...
    --------------------------
    nice story.realistic one. yours Usha
    --------------------------
    sipanneer
    Hi,
    Romba nalla iruthathu..
    ---------------------
    devapriyaஇன்று வேலை திறமைக்கு அல்ல...பணத்துக்கே என்று மற்றொரு விதமாகவும் யோசிக்க தோன்றியது.

    ReplyDelete