Friday, October 16, 2015

நல்லவருடன் பழகுங்க!


கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர். கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார். கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர். பக்தி மிக்க அவர் பக்தி பாடல்களையும் அவ்வப்போது பாடுவார். அந்தப்பாடல்களைக் கேட்டால் கல்லும் கரைந்து விடும். மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார். அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார். அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார். ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன், என்று கேட்டார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.
கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன். பணப்பெட்டியும் திறந்தே இருந்தது.அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த நண்பன் ஒருவன் அங்கே வந்தான். அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம், என்று யோசனை கூறினான்.திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா என்ற தயக்கம்... தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் சிந்தித்தவன், தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை. என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம்,எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள், என்றான். கடைக்காரரோ,ஏன் இப்படி கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால் தான் கடையை ஒப்படைத்துச் சென்றேன். அதனால், பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவையில்லை, என்றார்.கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது. உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு துõய்மையாகி விட்டதே. வாழ்நாளெல்லாம் உங்களோடு உறவாடினால் பிறவிப்பயனே கிடைத்து விடுமே! என்றான்.கடைக்காரர், நீ சொல்வது புரியவில்லையே! என்றார்.ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன். என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம். ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது. இனி ஒருநாளும் திருட மாட்டேன், என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான். இப்படி திருடனைக் கூட திருத்தி பக்தராக மாற்றிய அந்தக் கடைக்காரர் வேறு யாருமல்ல. ஞானி துக்காராம் தான்!

100 மருத்துவக் குறிப்புகள்- . நோட் பண்ணுங்க!


1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக…

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் 
போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்… டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்.

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.

நில்… கவனி… செல்!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

Tuesday, October 13, 2015

நவராத்திரி-ஆரம்பம்.


ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். கண் இருந்தால்தான் பார்க்க முடியும், குருடனால் பார்க்க முடியாது. காதுதான் கேட்கும், செவிடனால் கேட்க முடியாது. இப்படி ஒவ்வொரு பணி செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். இந்த சக்திகளுக்கெல்லாம் சக்தி அளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. அது மின்சாரம் போல. காண முடியாது, உணரத்தான் முடியும். ஆனால் அதை பூரணமாக உணர விரும்பி உருவமாக அமைத்து வழிபடும் போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அதை வைத்துத்தான் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளாக வழிபடுகிறோம்.
மனிதன் காலை எழுந்ததும் முதலில் தன் கரத்தை உற்றுப் பார்க்கவேண்டும். கையின் மேல்புறத்தில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கீழே துர்க்கையும் கண்டு வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். மனித வாழ்வின் ஆதாரம் செல்வம். அதற்கு அதிபதியான மகாலட்சுமி முதலில், அந்த செல்வத்தை அறிந்து, உணர்ந்து, நல்வழியில் பயன் படுத்த அறிவு அவசியம். அந்தக் கல்வியின் நாயகியான சரஸ்வதி அடுத்து, இத்தனை இருந்தும் இதனைக் கட்டிக் காக்கும் பராக்ரமம், வீரம் வேண்டுமல்லவா? அடுத்ததாக துர்க்கை இருக்கிறாள் என்றும் இந்த வாக்கியத்தை விளக்கம் சொல்வார்கள். அப்படி, காலை எழுந்தவுடன் இந்த மூன்று சக்திகளையும் பிரார்த்தித்துக் கொண்டோமானால் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களும் மிகச் சுலபமாக நமக்குக் கிட்டுவிடும்.
இதைத்தான் அக்காலத்துப் பெரியோர்கள் தினம் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இப்பழக்கம் மிகவும் குறைந்து பூஜை செய்வதோடு சரியென்று மாறி தற்போது அதுவும் அருகி வருகிறது. இப்போது ஏதூவது விசேஷங்களில் மட்டும் பூஜை செய்தால் போதும் என்று பலரும் கருதுகிறார்கள். அதையாவது ஒழுங்காகச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் நவராத்திரி, சிவராத்திரி எல்லாம் இருக்கிறது.
பார்வதி தேவியே இரவின் ஸ்வரூபமாகவும், பரமசிவனே பகலின் ஸ்வரூபமாகவும் இருப்பதாக ஒரு புராணம் கூறுகிறது. பொதுவாக இரவிலே பூஜை செய்வது கூடாது. ஆனால் நவராத்திரியிலே மாத்திரம் இரவில் பூஜை செய்யலாம். சிவராத்திரியில் சிவனுக்கு பூஜை செய்யலாம்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.
வடநாட்டிலும் இந்த நவராத்திரி பூஜை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அங்கு விஜயதசமியன்று இந்த பூஜா விக்ரகங்களை பெரிய ஊர்வலமாக எடுத்துச் சென்று சமுத்திரத்தில் கலக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. துர்கா பூஜை என்று கல்கத்தா பகுதிகளில் இன்னும் அது மிகப் பிரசித்தம்.
இதே போன்று வஸந்த பஞ்சமியன்று அஸ்ஸாம், பெங்கால் பகுதிகளில் சரஸ்வதி பொம்மைகளைப் பெரிதாக ஊர்வலமாகக் கொண்டு சென்று சமுத்திரத்தில் கரைப்பார்கள்.
இப்படி துர்கா, லட்சுமி, சரஸ்வதி இந்த முக்கியமான மூன்று சக்திகளுக்கு நாடு முழுவதும் விழா கொண்டாடப் படுகிறது.
துக்கத்தைப் போக்குபவள் துர்க்கை.
செல்வத்தைப் பொழிபவள் லட்சுமி.
ஞானத்தை நல்குபவள் சரஸ்வதி.
இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலம் இந்த நவராத்திரி.
சின்னச் சின்ன அற்ப நலன்களை எதிர்பார்த்து வழிபடுவதற்கல்ல இந்த பூஜை. இனி பிறவாத மிக உயர்ந்த நிலையை அருள வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கம்.
ஞானத்தோடு, ஆத்ம சுத்தியோடு இந்த பூஜை நிறைவுருவதைக் குறிக்கும் படியாக ஞானவாஹினியான சரஸ்வதி பூஜையோடு இவ்விழா நிறைவுறுகிறது.
இந்த வகையிலே, ஒவ்வொருவரும் நவராத்திரி காலத்திலே நல்லெண்ணம், நல்ல சிந்தனையுடன் அம்பாளை பூஜை செய்து, தியானித்து வழிபட்டு வாழ்வில் எல்லா சுகங்களையும் பெற வேண்டுமாய் வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்!

பேதமற்ற பக்தி


குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில்; எடுப்பார் கைகளில் தெய்வம், பிள்ளையாயிருக்கும்' இவையெல்லாம், நம்நாட்டில் சொல்லப்படும் பழமொழிகள். இப்பழமொழிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய சம்பவம் இது:
விஜயநகர சாம்ராஜ்யத்தில், ராமராயர் என்பவர் ஆட்சி செலுத்திய காலம் அது. ஒரு நாள், அரசவை நடைபெற்ற போது, பானுதாசர் எனும் பக்தர், பாண்டுரங்கன் கோவிலுக்காக நிதி உதவி கேட்டு வந்தார். மன்னரோ, 'அன்னை பவானியை தவிர, வேறு எந்த தெய்வத்தையும் வணங்காதவன் நான்; அதனால், உங்கள் பண்டரிநாதருக்கு பொருள் உதவி செய்ய மாட்டேன்...' என்று மறுத்து விட்டார்.
மன்னனின் இறை பேதமையை நினைத்து, மன வேதனையடைந்த பானுதாசர், 'மன்னா... என்ன பேசுகிறீர்கள்... உங்கள் செல்வத்தை விட, அங்கே பண்டரிநாதர், பல மடங்கு செல்வத்தால் ஜொலித்து கொண்டிருக்கிறார்...' என்று சொல்லி, பண்டரிபுரத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மன்னருக்கு கோபம் வந்து, 'நானும் பண்டரிபுரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால், நீங்கள் சொல்வது போல, பூலோக வைகுண்டமாய் அப்படியே தங்கத்தில் ஜொலிப்பதாக கேள்விப்பட்டதில்லை. நீங்கள் சொல்வது பொய் என தெரிய வந்தால், உமக்கு தண்டனை நிச்சயம்...' என்றார்; கூடவே, பண்டரிபுரம் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதனால், கவலையில் ஆழ்ந்தார் பானுதாசர். அக்கவலை தீரும்படியாக, அன்று இரவே பானுதாசர் கனவில், ருக்மணிதேவி தரிசனம் தந்து, 'பக்தா... நீ கூறியபடியே, ராமராயனுக்கு, வைகுண்டம் போலவே காட்சி அருளுவோம்...' என்று கூறி மறைந்தாள்.
மறுநாள், மன்னர் ராமராயருடன் அனைவரும் புறப்பட்டு, பண்டரிபுரத்தை அடைந்தனர். அங்கே, பண்டரிபுரம் தங்கமயமாக ஜொலித்து, பூலோக வைகுண்டமாய் தக தகத்தது.
மன்னர் ஆச்சரியப்பட்டு, அப்படியே தரையில் விழுந்து வணங்கினார். அதன்பின், கைகளை கூப்பியபடியே கோவிலினுள் நுழைந்து, பண்டரிநாதனை தரிசித்தவர், தன்னை மறந்த நிலையில் இருக்க, சிறிது நேரத்தில், பழையபடியே மாறியது பண்டரிபுரம். 
ஆச்சரியத்தில் ஆழ்ந்த மன்னர், பக்தன் ஒருவனுடைய பக்திக்காக, பாண்டுரங்கனே, பண்டரிபுரத்தை பூலோக வைகுண்டமாக ஜொலிக்க செய்திருக்கிறார் என்பது புரிந்து, உடல் சிலிர்த்தார்.
உடனே, கோவிலுக்குள் ஓடி, பாண்டுரங்கனின் பத்ம பாதங்களை கட்டி தழுவி, அழுதார். 
தூய்மையான பக்தி கொண்ட பக்தனுக்காகவும், பக்தியிலேயே பேதம் பார்த்த மன்னர் திருந்துவதற்காகவும், பாண்டுரங்கன் நடத்திய லீலை இது!
தூய்மையான, பேதமற்ற பக்தியை அருளுமாறு வேண்டுவோம்; பரமன் அருளுவார்! 

தானம் செய்வதை அதிகரிக்க


நம்மில் பெரும்பாலானோர், எவ்வளவு சம்பாதித்தும் தங்கவில்லையே என்றே வருந்துவர். சிலரது பொருள், உறவினர்களின் பொருட்டு, திருடும் போய் விடுகிறது. நோய், நொடியால் மருத்துவமனையில் பணத்தை இழப்பவர்களும் ஏராளம். ஆனால், இதெல்லாம் தங்கள் முன்வினை பயன் என்பதை, அவர்கள் உணர்வதில்லை. இவ்வாறு, பணத்தை இழந்தவர்கள் இழந்ததைப் பெறவும், இனியாவது தங்களுடைய சம்பாத்தியம் கையில் தங்கவும் அனுஷ்டிக்க வேண்டியதே நவராத்திரி விரதம்!
சுகேதன் என்ற மன்னன், தன் மனைவி சுவேதினியுடன் நாடாண்டு வந்தான். அவன் செல்வச்செழிப்புடனும், புகழுடனும் வாழ்வது கண்டு, அவனது உறவினர்களே பொறாமைப்பட்டனர். அவனை வஞ்சகமாக அடித்து துரத்தி, நாட்டைக் கைப்பற்றினர். மனைவியுடன் காடு சென்ற சுகேதன் பல துன்பங்களுக்கு ஆளானான்.
பஞ்சு மெத்தையில் படுத்தவன், வெட்டவெளியில் தூங்கினான். காட்டிலுள்ள பூச்சிகள் அவன் உடம்பை கடித்தன; இதனால், உடல்நிலையும் பாதித்தது. கிட்டத்தட்ட மரண எல்லைக்கு சென்று விட்ட அவனை, தன் மடியில் அவனது தலையை வைத்து உறங்க வைக்க முயன்றாள் சுவேதினி.
அப்போது, அவ்வழியே வந்த ஆங்கீரசர் என்ற முனிவர் அக்காட்சியைக் கண்டு, தன் தவவலிமையால், அவர்களின் கதையைத் தெரிந்து, இரக்கம் கொண்டு, அவர்களை ஆசிர்வதித்ததுடன், தன் ஆஸ்ரமத்திற்கும் அழைத்துச் சென்றார்.
'மகளே... நீ புரட்டாசி அமாவாசையை அடுத்த பிரதமை திதி முதல், நவமி திதி வரை ஒன்பது நாட்கள், அம்பாளை நினைத்து விரதம் இரு; அம்பாளை, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்னும் திரிசக்திகளாக கருதி வழிபாடு செய். அந்த பராசக்தி மனம் மகிழ்ந்து உன் துன்பத்தைப் போக்குவாள்...' என்று கூறினார்.
சுவேதினியும் பக்தியுடன், அவ்விரதத்தை முறைப்படி அனுஷ்டித்தாள். குழந்தையில்லாத அவள் கர்ப்பிணியானாள். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு, சூரியப் பிரதாபன் என பெயரிட்டனர். சிறுவனுக்கு, பல்வேறு கலைகளை கற்றுக் கொடுத்தார் ஆங்கீரச மகரிஷி. அத்துடன், வீரப்பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 
அவனுக்கு 18 வயதானதும், அவன் தன் நாடு சென்று, தந்தையின் உறவினர்களுடன் போரிட்டு, நாட்டை மீட்டான். இழந்த நாட்டை பெற்று மீண்டும் அரசன் ஆனான் சுகேதன்.
நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட, அது, நல்ல விஷயங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே முக்கியம். சம்பாதிக்கிற பணம் மருத்துவமனை, உபயோகமற்ற செலவுகள், ஆடம்பரம் என்று செல்வதை தடுக்க, தானத்தை அதிகப்படுத்த வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு தானம் செய்கிறோமோ, அந்தளவுக்கு தேவையற்ற செலவுகளும், அவதியும் குறையும்; இதுவே மகான்கள் நமக்கு கற்று தந்த பாடம்.
இந்த நவராத்திரியிலிருந்து, பயனுள்ள செலவுகளை மட்டும் செய்து, தானம் செய்வதை அதிகரிக்க உறுதியெடுப்போம்! 

நவராத்திரி கொலு வைக்கும் முறை

​​
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலுஎன்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்க ரித்து வைப்பதே யாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவ ராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
1முதலாம் படி :–
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்க ளின் பொம்மை கள்.
2. இரண்டாம் படி:-
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :-
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மை கள்.                               
4. நாலாம்படி :-
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு  போன்றவற்றின் பொம் மைகள்.
5. ஐந்தாம்படி :-
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகி யவற்றின் பொம்மைகள
6. ஆறாம்படி :-
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
7. ஏழாம்படி :-
மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த    சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொ ம்மைகள்.
8. எட்டாம்படி :-
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதி பதிகள் போன்ற தெய்வங்கள் தேவ தைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி :-
பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களி ன் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வை க்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலை யை அடைய வேண்டும் என்பதற் காகவே இப் படி கொலு அமைப்பது வழக் கம்.
நவராத்திரி வழிபாட்டு முறை.
1. முதலாம் நாள் :-
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள்மிகவும் கோபக் காரி. நீதி யைக்காக் கவே இவள் கோபமாக உள்ளா ள். மற்றும் இவளது கோபம் தவறு செ ய்தவர்களை திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும்.
மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்டசராசரங்களைக் காக்கும ராஜ ராஜே ஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
2. இரண்டாம் நாள் :–
இரண்டாம் நாளில் அன்னையை வரா ஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வரா ஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுத ங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியி ருப்பவள். தனது தெத்து பற்களால் பூமி யை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போ ன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன் னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில் லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
மதுரை மீனாட்சி அம்மன் இன்றுவி றகு விற்ற லீலையில் காட்சி அளிப் பாள். அதா வது சுந்தரர் விற்ற விற கை மீனாட்சி அம்மன் தலை யில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என் ற தத்துவத்தினை வலியுறுத்துவ தாக நாம் கருதலாம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள் :-
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திரா ணியாக வழிபட வேண் டும். இவளை மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந் தியவள். ஆயிரம் கண்ணுடைய வள். யானை வாகனம் கொண் டவள். விருத் திராசுரனை அழித்த வள். தேவலோக த்தை பரிபா லனம் செயபவளும் இவளே யாகும். பெரிய பெரிய பதவிகளை அடை யவிரும்புபவர்களிற்கு இவ ளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வே லை கிடைக்க, பதவியில் உள் ளவரிற்கு பதவியுயர்வு, சம்பளஉய ர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளே யாகும்.
இன்று மீனாட்சி அம்மன் கல் யானைக்கு கரு ம்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொ ங்கல்.
4. நான்காம் நாள் :-
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவி யாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப் பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சியளிப்பார்கள்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
5. ஐந்தாம் நாள் :-
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ் வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வ ரனின் சக்தியா வாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பா ம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண் டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட் சம் கொடுத்த அலங்கார த்தில் காட்சியளிப்பார் கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
6. ஆறாம் நாள் :-
இன்று அன்னையை கவுமாரி தேவி யாக வழிபடவேண்டும். மயில் வா கனமும் சேவல் கொடியும் உடைய வள். தேவசேனா திபதியான முருக னின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவ ங்களையும் விலக்கிடுபவள். வீரத் தை தருபவள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங் காரத்தில் அருள்புரிவார்கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.
7. ஏழாம் நாள் :-
ஏழாம்நாள் அன்னையை மகா லட் சுமியாக வழிபட வேண்டு ம். கையில் ஜெபமாலை, கோட ரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ரா யுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கல யம், தாமரை, கமண்டலம் ஆகிய வற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவ ந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னை யாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி கோலத்தில் மக்களிற்கு அருள் பாலிப்பார்கள்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க் கண்டுச் சாதம்.
8. எட்டாம் நாள் :-
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உட லும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு,சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தரு பவள். சத்ருக்கள் தொல்லை யில் இருந்து விடு பட அன்னையின் அருள் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷா சுர மர்த்தினி அலங்கார த்தில் காட்சியளிப்பார் கள்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க் கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள் :-
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன் னையின் அருள் அவசியமாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தில் அரு ளாட்சி புரிவார்கள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.

நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்? மற்றும் தத்துவம்,எப்படி வைப்பது,எப்போது?


அமாவாசையன்று 12-10-2015 திங்கள் மதியம்
12-00 முதல் 02-00 மணிக்குள் அல்லது மாலை
06-00 முதல் 09-00 மணிக்குள் சுக்கிர,புத,சந்திர
ஹோரைகளில் கலச ஸ்தாபனம் செய்யலாம்.
.

கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். ரங்கோலி இட்டால் எடுப்பாக இருக்கும். மேடை அமைத்து பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.
கொலு பொம்மை தத்துவம் மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு. முதல் படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது. இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள். மூன்றாம் படியில் எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பைப் போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும். நான்காம் படியில் நண்டு, வண்டு பொம்மைகள் இடம்பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இந்த பொம்மைகள் குறிக்கும்.
ஐந்தாம் படியில் மிருகம், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள். ஆறாம்படியில் மனித பொம்மை வைக்க வேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம். ஏழாம்படியில் முனிவர்கள், மகான்கள் பொம்மை வைக்க வேண்டும். மனிதன் உயரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள். எட்டாம்படியில் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகான் நிலையை அடையும் மனிதன் தேவர் நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது. ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதி பராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும். உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு உருவானது. நம் வீட்டு குழந்தைகளிடம் கொலு பொம்மைகளை காட்டி மகிழ்ச்சிப்படுத்துவதுடன், அவர்களின் வயதுக்கேற்ற முறையில், இந்த தத்துவார்த்தங்களையும் எளிதில் புரியுமளவு கற்றுத்தர வேண்டும்.
கொலுமேடைக்கு பூஜை செய்யும் முறை: நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்

Wednesday, October 7, 2015

பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத ஆலயங்கள்


அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களைதரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.
சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.
எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம். ஐயா , ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்...
மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து ,மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம்ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம்.
சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்தபட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப்பலகாரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன.
இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை / புக்திஎன்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில் - நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும்.
நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள்நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை ,குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான். இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..!

🌼மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் :
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து,வழிபட்ட லிங்கமானதால் இவர் "மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தலநாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில்இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.
🌼புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன் குடி அருமருந்தம்மை :
புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீராநோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு,அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய்,பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வவியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம்,வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
🌼கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர் :
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார்பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்யஅனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று "கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " எனமனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.
🌸சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் சூலினி,பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்:
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட,வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்துஅருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்துசங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளைசிறந்தது.
🌼பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர ,வணங்க வேண்டிய ‘ஸ்ரீவாஞ்சியம்’ :
மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.
🌼அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களைகற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கானஅட்சரப்பியாசம் நடைபெறுகிறது.குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்துவந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்துபயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும்வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.
🌼தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் :
முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் "மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
🌼தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் :
மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர்,தையல் நாயகி சமேதராய் அருளும்திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமிதீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையைஉட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராதவியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ளசாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.
🌼செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை":
கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர்தந்தை யாகம் செய்ய தேவையான பொருள்கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன்மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.
🌼சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்:
மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும்வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

🌼நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்.
🌸காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்.
🌸கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர் .
🌼கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் "ஜூரகேஸ்வரர் "
🌼பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள் .
🌼ராகு தோஷம், எம, மரண பயம் நீங்கதிருநீலக்குடி எனும் தென்னலக்குடி.
🌼மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீரதிருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர் .
🌼குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்.
🌼விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன் .
🌼விரைவில் திருமணம் கைகூட காசி விஸ்வநாதர் கோயில் "நவ கன்னியர் வழிபாடு" :
நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மல்ர்கள், எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத பெண்கள் பூப்பெய்துவர். கும்பகோண நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள " மகாமக " குளக்கரையில் உள்ளது இத் திருத்தலம்.
🌼மாங்கல்ய பலம் அருளும் பஞ்ச மங்கள சேத்ரமாம் " திருமங்கலக்குடி ":
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.
இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.
மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.
இத் திருத்தலம், கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், சூரியனார் கோயிலின் அருகாமையில் அமைந்துள்ளது.
🌼மாங்கல்யப் பேறு தரும் " கருவிலி கொட்டிட்டை சர்வாங்க சுந்தரி ":
தட்ச யாகத்தின் போது, தாட்சாயினியை பிரிந்த ஈசன், இத் தலம் வந்தடைந்தான். ஈசனை மீண்டும் அடைய வேண்டி, அம்மையும் இங்கே வந்தடைந்தாள். அப்பனும், அம்மையும் இணைந்த இத் திருக்கோயில், திருமணம் கை கூடுவதற்கும், மாங்கல்ய பேறு நீடிப்பதற்க்கும் வழிபடப்படுகிறது. இது பிறப்பை அறுத்து மோட்சம் அருளும் தலமாதலால், " கருவிலி " என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், எம பயம் நீங்கும். இத் தலத்தை தரிசிப்பது, கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் தரிசனம் செய்த பலன் அருளும் கும்பகோணம் - பூந்தோட்டம் சாலையில், நாச்சியார் கோயில் வழியில், சுமார் 19 கி.மீ தொலைவில் கூந்தலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இத் திருத்தலம்.
🌼திருமணம், மகப் பேறு, சுகப் பிரசவம் அருளும் " திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ":
கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து , கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் " கர்பரட்சாம்பிகை " திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள்.
நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும் இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் " பசுநெய் " பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் " விளக்கெண்ணெய் " பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர்.புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள். கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ளது இத் திருக்கோயில்.
🌼தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் " திருநல்லம் " :
முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் " மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
🌼திருமணத் தடைகள் நீக்கும் சார்ங்கபாணி கோயிலின் " கோமலவல்லி " நாச்சியார் ":
சார்ங்கபாணி திருக்கோயிலின் நாச்சியார் " கோமலவல்லி " தனிச் சிறப்பு கொண்டவர். தாயாரின் அவதாரத் தலம் இது என்பதால், இங்கு நாச்சியாருக்கே முதல் மரியாதை. தாயாரை வழிபட்ட பின்னரே மாலவனை வணங்க வேண்டும். இத் தாயாருக்கு, தங்கள் வசதிக்கேற்ப புடவை சார்த்தி, திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் திருமணாமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். மன வேறுபட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர், கருத்தொருமித்து ஒன்று சேர்வர். வழிபடும் சுமங்கலிப் பெண்களின் " மாங்கல்ய பலம் " பெருகும். தடை பட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது இத் திருத்தலம்.
🌸திருமணத் தடை அகற்றும் " திருப்புறம்பியம் ஸ்ரீ குகாம்பிகை":
பிரளயம் காத்த விநாயகர் வீற்றிருக்கும் திருப்புறம்பியத்தில் உள்ள " ஸ்ரீகுகாம்பிகை " சந்நதி மிகச் சிறப்பானது. குழந்தை வடிவு கொண்ட ஆறுமுகனை, தன் இடையில் தாங்கி நிற்கும் இந்த அம்பிகைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது. தடை பட்டு கொண்டிருக்கும் திருமணங்கள் இனிதே நடைபெறவும், கருவுற்ற பெண்களது பிரசவம், சுகமாக அமைந்திடவும், வேண்டுவோர்க்கு அருள் புரிகிறாள் இந்த் அம்பிகை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சைவ சமயக் குரவர்களால் பாடப் பெற்ற இத் திருத்தலம்.
விவாகத் தடைகள் அகற்றும் " திருமங்கைச்சேரி வரதராஜ பெருமாள் ":
"புன் நாகம்" என்ற பாம்புக்கு பெருமாள் காட்சி தந்த இத் திருத்தலம், ராகு மற்றும் சர்ப தோஷங்கள் நீக்கும் பரிகார நிவர்த்தி தலமாக விளங்குகிறது. " மண்ணிற்கு தென்பால் நின்ற திருமாலே " என்று திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற இத் தல வரதராஜ பெருமாளை வணங்கினால், திருமண தடைகள் நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும். வேறெங்குமில்லாத வண்ணம், இத் தலத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் இடையில் கிழக்குக் நோக்கி, தனது வலது காலை ஓரடி முன் வைத்து பெருமானை வணங்கும் பக்தர்களுக்கு உதவ தயாராக உள்ளது போன்று காட்சி தருகிறார் " பால ஆஞ்சநேயர் ". 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருத்த்லம் கும்பகோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் மணல்மேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் பூமாதேவி சமேத " ஆதி வராகப் பெருமாள் "
தன் இடப் பக்க தொடையில் பூமா தேவியை கொண்டு காட்ச் தரும் " ஆதி வராகப் பெருமாள் ", பூமி சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பவர். ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில், நெய் விளக்கேற்றி வணங்கி, சகஸ்ரநாமம் செய்து, அன்ன தானம் அளித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். வழிபடுவோருக்கு புத்திர பாகியம் கிடைக்கும். இத் திருத்தலம், கும்பகோணத்தின் மையப் பகுதியில், சக்கரபாணி கோயிலின் அருகில் உள்ளது.
🌼மணம் போல் மணாளன் அமைந்திட:
கும்பகோணம் சுந்தரபெருமாள் கோயில் அருகிலுள்ள "நிறம் மாறும் லிங்க திருமேனி கொண்ட திருநல்லூர்"
🌼திருமணத் தடைகள் அகன்றிட :
கும்பகோணம் திருப்பனந்தாளை அடுத்து அமைந்துள்ள ஆதி குரு வீற்றிருக்கும் " திருலோகி சுந்தரேஸ்வரர் "
🌸திருமணத் தடை நீங்கி புத்திர பாக்கியம் பெற்றிட:
திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் தனி மணடபத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் "சோமஸ்கந்தர்"
🌼தடை படும் திருமணம் இனிதே நடைபெற :
கும்பகோணத்தில் அமையப்பெற்ற "குரு பரிகார தலமான ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி "
🌼திருமணத் தடைகள் நீங்க :
கும்பகோணத்தில் அமைந்துள்ள " ராகு பரிகார தலமான - திரு நாகேஸ்வரம் ராகு பகவான் "
🌼இழந்த செல்வம் மீட்டு தரும் " தென்குரங்காடுதுறை " :
சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.
🌼செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" :
கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.
🌼செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே!
🌼கடன், சங்கடங்கள் போக்கும் " திருபுவனம் சரபேஸ்வரர் " :
தீராத கடன் தொல்லைகள் த

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல விவசாய விஞ்ஞானிகள்....


ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்..
விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம். கூவாவிட்டால்
மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்...
சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்..இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும்.
தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.
ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...
அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.
ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.
கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் நம் பாட்டன்,பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விஷயங்களை ..

தாயே இதை ஏற்றுக்கொள்.



அவர் நிறைய பணம் சம்பாதித்தவர் தான். கடல் கடந்து கப்பல் வியாபாரம். மனதை பணம் நிரப்பவில்லை. அடிவாரத்தில் ஏதோ ஒன்று அரித்துக்கொண்டே இருந்தது. குடும்ப பாசம் நெஞ்சை விட்டு அகல ஆரம்பித்தது. ஏதோ ஒரு தேடல் அந்த இடத்தை ஆக்ரமித்தது. தேசாந்திரியாக ஒவ்வொரு இடமாக கால்கள் இழுத்துச் சென்ற இடமெல்லாம் நடந்தார். இந்த நேரத்தில் அவர் தாய் இறந்தாள் என்ற செய்தி காதில் விழுந்தது. கால்கள் அவரை தானாகவே பழைய வாழ்ந்த இடத்துக்கு கொண்டு சென்றது. 

தாயின் உடல் அவரை வரவேற்றது. மௌனமாக அந்த முகம் ''அப்பனே இப்போவாவது வந்தாயா. எனக்கு செய்ய வேண்டியகாரியத்தை செய்வாயா?'' என்று கேட்பது போல் அவர் மனதில் பட்டது. ஒரு இயந்திரம் போல் அவர் செயல் பட்டார். தாயின் உடலுக்கு தீயிட்டார். தாயின் உடல் மட்டுமல்ல அவர் மனமும் வெந்தது. அவள் விட்டுப்போன பாசம் பழைய நினைவுகளாக உருவெடுத்து அவர் மனதை பிழிந்தது மட்டும் அல்லாமல் வார்த்தைகளாக உருவெடுத்து அவரைப் பேச, இல்லை இல்லை, பாட வைத்தது. எளிய தமிழில் புரியும் படியாக பாடிய வெண்பா. பிற்காலத்தில் அது எழுத்தில் அச்சானது. அடடா இது போல்இன்னொருவர் சொல்ல முடியுமா என்று நம்மை இன்றும் வியக்க வைக்கிறது. 

''பத்து மாதம் படாத பாடு பட்டு உடல் வலிக்க என்னை வயிற்றில் சுமந்தாய். அடே பயலே என்று செல்லமாக கூப்பிடுவாய். முடிந்தபோதெல்லாம் உன் இரு கையே எனக்கு இருக்கை யானது. பசித்ததா எனக்கு என்று எனக்கே தெரியாது. ஆனால் உனக்கு தெரியுமே!அன்போடு மார்பகத்தில் அனைத்து பால் கொடுத்து வளர்த்தாயே. இனி நான் உன்னை என்று எங்கே எந்தஜன்மத்தில் காணப்போகிறேன்?''

'' ஐயிரண்டு திங்களா யங்க மெலா நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனக முலை தந்தாளை
யெப் பிறப்பிற் காண்பேனினி.1

நான் உன் மகனாக பிறக்கவேண்டும் என்று கனவினிலும் வேண்டியதில்லை. ஆனால் நீ நான் ஒரு மகனாக உனக்கு பிறக்கவேண்டும்என்று எத்தனை வருஷம் தவம் இருந்தாயோ. கேள்விப் பட்டிருக்கிறேன். நீ நிறைய கோவில்களுக்கு சென்று, எங்கெங்கோ சுற்றி, விரதமிருந்து யார் சொன்னபடி எல்லாமோ உன் உடலை வருத்திகொண்டு சிவனை வேண்டி, நான் பிறந்தேன். ஒன்றா இரண்டா முன்னூறு நாள் போல் என்னை இரவு பகலாக கண் விழித்து ஜாக்ரதையாக காத்து அல்லோ என்னை பெற்றாய். அதற்கெல்லாம் பிரதி உபகாரம் நான் என்ன செய்கிறேன் பார். நிறைய தீயை மூட்டி உனது உடலை எரிக்கிறேன். எப்படிப்பட்ட பிரதிஉபகாரம் !!



முந்தித் தவங் கிடந்து முந்நூறு நாட் சுமந்தே
யந்தி பகலாச் சிவனை யாதரித்துத் -தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
வெரிய த்தழன் மூட்டுவேன்.2

என்னைத் தாலாட்டினாய், சீராட்டினாய், ஊஞ்சலில் வைத்து பாராட்டினாய், பாடினாய். உன் மார்பில் மேலும் தோள்மேலும் நான் எத்தனையோ காலம் சுகமாக தூங்கியிருக்கிறேன். எனக்கென்று தந்தத்திலும் தங்கத்திலும் தொட்டில் வேறு வைத்திருந்தாய். . உலகிலேயே நீ அதிக பாசம் அன்பு, காதல் வைத்த ஒரே ஜீவன் நான் ஒருவனே. . தாய்ப் பறவை சிறகுக்குள் தனது குஞ்சுகளை அணைத்து காப்பது போல் என்னை உன்னருகிலேயே வைத்து அணைத்து காப்பாற்றி வளர்த்தாய். அந்த உடலுக்கு நான் இப்போது கைம்மாறு செய்கிறேனே. இங்கே தான் நிறைய காய்ந்த விறகுகள் கொண்டு வந்திருக்கிறேனே. அவற்றின் மீது உன்தலையை வைத்து எரிக்கிறேன். தக தக வென்று தீ என் நெஞ்சைப் போல் உன் உடலும் எரியட்டும். 

வட்டிலிலுந் தொட்டிலிலு மார் மேலுந் தோண் மேலுங்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ
விறகி லிட்டுத் தீ மூட்டுவேன்.3

எனக்கு என்ன சொல்வதென்றே வார்த்தை வரவில்லை தாயே. சொன்னதையே திருப்பி திருப்பிச சொல்கிறேன். எது நினைத்தாலும் அது உன் நினைவாகவே அல்லவோ மாறி விடுகிறது. எத்தனை நோன்புகள், எத்தனை எதிர்பார்ப்புகள், என்னை பத்துமாத காலம் வயிறு முன் தள்ளி வர, நான் உள்ளே உன்னை விண் விண் என்று உதைக்க, பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கி, பெற்று வளர்த்து பாலூட்டி வளர்ந்த உன் மெய்க்கு -- உண்மையாகவே -- மெய் என்றால் உடம்பு தானே --அதை தீயிலே இட்டு எரிக்கிறேன். 

நொந்துசுமந்துபெற்றுநோவாமலேந்திமுலை
தந்துவளர்ந்தெடுத்துத்தாழாமே - யந்திபகல்
கையிலேகொண்டென்னைக்காப்பாற்றுந்தாய்தனக்கோ
மெய்யிலேதீமூட்டுவேன்.4

பாவம் என் அன்புத் தாயே. எனக்கு நேரம் பார்த்து பசி வரும் முன்பே நீ உணவளித்து வளர்த்தாயே. இப்போது உனக்கு பசிக்குமே இந்தா கொஞ்சம் அரிசியாவது உன் வாயில் இடுகிறேன். ஆத்தா, எனக்கு எத்தனை எத்தனையோ சிங்காரம் பண்ணி, அழகு செய்து,முன்னும் பின்னும் என்னை பார்த்து மகிழ்ந்த தாயே, என்னை பேர் சொல்லியா கூப்பிட்டாய். தேனே, மானே, கற்கண்டே, செல்வமே, அம்ரிதமே, என்று தானே எப்போதும் வாய் நிறைய அழைப்பாய். அந்த வாய்க்கு நிறைய அரிசி போடட்டுமா? 

அரிசியோ நானி டுவே னாத்தா தனக்கு
வரிசை யிட்டுப் பார்த்து மகிழாம - லுருசியுள்ள
தேனே யமிர்தமே செல்வத் திரவியமே 
மானே யென அழைத்த வாய்க்கு.5

எல்லாமே முடிந்து விட்டது. என் மகனே என் செல்வமே முத்தே என்று என் முகத்தோடு உன் முகத்தை ஒட்டி, வாய் ஓயாமல் சொல்லிய உன் வாய்க்கு கடைசி கடைசியாக வாய்க்கு கை நிறைய அள்ளி அரிசி போட்டு விட்டேன். உச்சி முகந்த உன் முகத்துக்கும்உடலுக்கும் கொள்ளி போட்டு விட்டேன். இது தான் நான் செய்ய முடிந்தது. இதை நான் செய்யவேண்டும் என்று தான் உன் விருப்பமும்கூட. நிறை வேற்றிவிட்டேன் தாயே. 

அள்ளி யிடுவதரிசியோ தாய் தலை மேல் 
கொள்ளி தனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகம் மேல் முகம் வைத்து முத்தாடி யென்றன்
மகனே யென அழைத்த வாய்க்கு.6

இறைவா, சிவபெருமானே, ஒரு வேண்டுகோள். தயவு செய். நீ முற்காலத்தில் திரிபுரத்தை உன் நெற்றிக்கண்ணால் ஒரு நொடியில்எரித்தவன். பின்னர் ஒரு காலத்தில் ராமனாக வந்தாய். உன் பக்தன் ஆஞ்சநேயன் இலங்கைக்கு பறந்தான். அந்த மாநகருக்கே சடுதியில் தீ இட்டான். இந்த நெருப்பெல்லாம் உண்மையிலேயே ஒரு நெருப்பாகுமா? என் தாய் எனக்கு மீண்டும் கிடைக்காதவள்,என் அடிவயிற்றில் இப்போது வைத்து விட்டு சென்றாளே அந்த தீ, நெருப்புக்கு வேறு எந்த நெருப்பாவது ஈடாகுமா? அப்படிப்பட்ட நெருப்பில் கொஞ்சம் எடுத்து இதோ என் தாய் சிதைமேல் இடுகிறேன். கப கப வென்று அது என் அடிவயிற்று தீபோல் எரியட்டும். 

முன்னை யிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென்னி லங்கையில் 
அன்னைக யிட்ட தீ யடி வயிற்றிலே
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே.7

என் தாய் இனி இல்லை. தீயில் கலந்து வெந்து போனாள் . பொடியாகி விட்டாள் . அவள் பெயர் இனி சாம்பல். ஒரு குருவியின் நிழல்கூட என் மீது படாமல் என்னை பாதுகாத்து வளர்த்த அந்த உடல் இனி ஒரு பிடி சாம்பல் தான். 

வேகுதே தீ யதனில் வெந்து பொடி சாம்பல் 
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக் குருவி

பறவாமற் கோதாட்டி யென்னைக்
கருதி வளர்த் தெடுத்த கை.8

சிவ பெருமானே, என் தாய் வெந்தாளோ? உன் திருவடிகளில் அடைக்கலம் என்று வந்தாளோ? என்னை மறந்தாளோ? அவள் உன்னையே அல்லவோ சுற்றி சுற்றி வந்து வரமெல்லாம் கிடந்து என்னை பெற்றவள். என் தாய்.

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின் பதத்தில்
வந்தாளோ வென்னை மறந்தாளோ - சந்ததமு
முன்னையே நோக்கி யுகந்து வரங்கிடந்தென்
றன்னை யீன்றெடுத்ததாய்.9

என்ன வாழ்க்கை பாருங்கள் மானிடர்களே. இதோ இங்கே தான் எப்போதும் உட்கார்ந்திருப்பாள். இந்த தெருவெல்லாம் என்னைத் தோளில் சுமந்து நடந்தாள். நேற்று இருந்தாளே? இன்று?? வெந்து சாம்பலானாள் ? ஒரு நாள் ஓடிவிட்டதே வாருங்கள் பால் தெளிப்போம்? இனி என் மனத்தில் இந்த இரக்கம் வேண்டாம். இது உன் செயல், நியதி. என்றும் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது. எல்லாம் சிவ மயம் தான் சிவனின் மாயம் தான் என்று ஏற்றுக்கொண்டு பழையபடி என் வழியே நடக்கிறேன்.

வீற்றிருந்தா ளன்னை வீதிதனி லிருந்தாள்
நேற்றிருந்தா ளின்று வெந்து நீறானாள் - பாற்றெளிக்க
வெல்லீரும் வாருங்களே தென்றிரங்காமல்
எல்லாஞ் சிவமயமே யாம்.

சில நாட்களுக்கு முன்பு ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம் என்ற ஐந்து ஸ்லோகங்கள் (தாய்ப் பாசத்தை பிழிந்து வடிகட்டி அவரால் இயற்றப்பட்டவை) -- தாய் முதல் ஸ்தானத்தில் வணங்கப் பட வேண்டியவள். தியாகத்தின் சின்னம். அனைவரும் இதைஉணரவேண்டும், கடமையில் தவறாமல் வாழும்போதே அவளை திருப்தியாக வைத்துக் கொள்வதில் எந்த மகனும் மகளும் தவறக்கூடாது என்று இத்தகைய மேற்கோள்கள் கூறப்பட்டதை உங்களுக்கு எழுதினேன். 


ஆதி சங்கரரைப் போலவே தென்னாட்டில் தமிழகத்தில், பட்டினத்தாரும் உணர்ச்சி கொப்புளிக்க மேலே கண்ட சில தத்துவபாடல்களை இயற்றியிருக்கிறார். படித்துவிட்டு மற்றவருக்கும் அறிவியுங்கள். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். தாயின்மேன்மை புரியட்டும்.